முக்கோண காதலால் முறிந்து போன டயானா திருமணம்

  • விமல் சொக்கநாதன் – இங்கிலாந்து

பிபிசி தொலைக்காட்சியில் பனோரமா ( Panorama) என்றொரு அரசியல் ஆய்வு நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாகிறது. உலக அரங்கில் அந்த வாரம் முக்கியத்துவம் பெற்ற விஷயங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களோடு விரிவாக இந்த நிகழ்ச்சியில் அலசப்படும். பிபிசியின் பக்கச்சார்பின்மை தனித்துவம் ஆகியவற்றால் இந்த நிகழ்ச்சி பல வருடங்களாக புகழ் ஏணியின் உச்சியில் நின்றது. பிபிசி என்ற அழகிய மயிலின் ஆட்டம் போல தாங்களும் ஆடித்தான் பார்ப்போமே என்று துணிந்து இங்கு பிரிட்டனிலும், உலகின் பல நாடுகளிலும் உள்ள பல்வேறு தொலைக்காட்சி நிறுவன “வான்கோழிகள்” தங்கள் பொல்லாச் சிறகை விரித்து ஆட முயன்றன, ஆடின, ஆடித் தோற்றன. பிபிசியின் பனோரமாவுக்கு நிகர் பனோரமாவே தான்!

பிபிசியின் பேசு பொருளாகியிருக்கும் ஒரு விஷயம் அது அணு ஆயுதம் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் சரி, அல்லது சாதாரணமாக ஒரு குடும்ப விவகாரமாக இருந்தாலும் சரி உலக மக்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது என்று கருதப்பட்டால், அது அடுத்த வாரம் பனோரமாவில் விவாதிக்கப்படும். பிபிசியின் கண்ணியம், நடுநிலைமை ஆகியவற்றின் மீது அப்படியொரு மக்கள் நம்பிக்கை இருந்து வந்தது. இந்தப் பெரும் புகழை எல்லாம் “எந்தப் பாம்புக் கண்ணி பார்த்தாளோ? “பிபிசி பனோரமா புகழை அதலபாதாளத்திற்கு தள்ளிவிடுவதைப் போல ஒரு அவதூறு 1995ல் நடந்தது. அந்தச் சம்பவம் பிபிசி பனோரமாவுக்கு இளவரசி டயானா வழங்கிய ஒரு செவ்வி.
இளவரசி டயானா, ஒரு பிரிட்டிஷ் அரச குடும்பத்தவர் மட்டுமல்ல, பிரிட்டிஷ் பேரரசியாரின் மூத்த மருமகளாகவும் இருந்தார். இதனால் சாதாரண பேட்டி காண்பதற்குரிய நட்சத்திர அந்தஸ்துகளையும் தாண்டி மிகவும் உயரத்தில் நின்றார் என்பது உலக ஊடகத்தினர் அனைவருக்குமே தெரியும். இதனால், எந்தவொரு ஊடகமும் அவரை ஒரு பேட்டிக்காக அணுகியது கிடையாது.
1981ல்-32 வயதான இளவரசர் சார்ள்ஸ் 19 வயதான டயானாவை திருமணம் செய்தார். தம்பதிகளுக்கு இடையில் இருந்த 13 வயது வித்தியாசம் இருந்தது. இந்த வயது வேறுபாடு பல ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் பெரும் பொருட்டாக இருந்ததில்லை, ஆனால் பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் இந்த வயது வித்தியாசம் மிகப் பெரும் பிரச்சனையாக அப்போது பேசப்பட்டது. போதாக்குறைக்கு இளவரசர் சார்ள்ஸின் தந்தை அண்மையில் காலமான பிலிப் கோமகனின் தாய் மாமாவான மவுண்ட்பேட்டன் பிரபு இளவரசர் சார்ள்ஸ{க்கு வழங்கிய அறிவுரைகளில் ஒன்று-“உன் மணமகள் முன் அனுபவம் எதுவும் இல்லாதவளாக இருக்க வேண்டும் “.
முன் அனுபவம் என்று அவர் கூறியது காதல் கத்தரிக்காய் போன்ற சமாச்சாரங்கள் தான். 1930 களில் இந்த நிபந்தனை ஏற்றதாக இருந்திருக்கலாம். ஆனால் 1980களில் இது ஏற்புடையதாக இருக்கவில்லை. ஆனால் காலங்கள் மாறுகின்றன. இளவரசி டயானாவை (முன் அனுபவ சமாச்சாரங்கள் எதுவுமே இல்லாத)-13 வயது குறைந்த இளம் பெண்ணை இளவரசர் சார்ள்ஸ{க்கு சட்டுபுட்டென்று பேசி முடிக்கிறார்கள்.
இளவரசருக்கு திருமணத்திற்கு முன் ஏராளமான பெண் தோழிகள் இருந்தார். அவருக்கு முன் அனுபவம் ஏராளமாக இருந்தது. அவர்களில் ஒருவர் கமீலா . இளவரசருடன் நெருங்கி பழகி வந்தாள். ஆனால் இளவரசரை விட ஒன்றரை வயது மூத்தவர் அவர். இளவரசர் சார்ள்ஸ் பிரிட்டிஷ் கடற்படையில் சேர்ந்து, பணியாற்ற அழைப்பு வந்தது. இப்படி அவர் புறப்பட்டு போக இராணுவ அதிகாரியான பார்க்கர் பௌல்ஸ் என்பவரை கமீலா திருமணம் செய்து கொண்டார். குழந்தைகள் பெற்று கொண்டார். முதல் குழந்தைக்கு Godfather இருக்கும்படி தன் நண்பன் சார்ள்ஸைக் கேட்டுக் கொண்டாள். அவரும் சம்மதித்தார். (மனம் வருந்தாதே மகனே, நீ முடி சூடும் போது உன் கமீலாவே உன் ராணியாக அருகில் அமருவாள் என்று பிரம்மன் அசரீரி ஒலித்திருக்கலாம்)
1981 பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி சார்ள்ஸ்-டயானா திருமணம் “உலகத் தொலைக்காட்சிகளில் இதுவரை கண்டிராத “ஒரு திருமணமாக நடந்தேறியது “. 74 நாடுகளைச் சேர்ந்த 750 மில்லியன் மக்கள் இதைத் தொலைக்காட்சியில் கண்டு ரசித்தார்கள். இவர்களை விட, திருமண ஊர்வலப் பாதையிலே லண்டன் தெருக்களில் நின்று நேரடியாக ஊர்வலத்தைப் பார்த்தவர்கள் சுமார் ஆறு லட்சம் பேர்.

திருமணம் முடிந்த பின்னர், எல்லா புதுமணத் தம்பதிகளும் தமது அன்பளிப்புகளைப் பிரித்துப் பார்க்க ஆரம்பிப்பார்கள். சார்ள்ஸ{ம்-டயானாவும் இதேபோல, தமது தேனிலவில் பொட்டலங்களைப் பிரித்துப் பார்க்க ஆரம்பித்தார்கள். ஆண்கள் ளாசைவ உரகக- டiமௌ ஆங்கில எழுத்து ஊ யும் ஊ யும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து அதில் பொறிக்கப்பட்டிருந்தன. டயானா அதைப் பார்த்து “இந்த உரகக- டiமௌ உங்கள் தோழி கமீலா தந்ததுதானே?”.
“ஆமாம்; அதிலென்ன தப்பு? அது ஒரு தோழியின் அன்பளிப்பு.”- இந்த உரையாடல் பிற்காலத்தில் அவர்களது மணவாழ்வில் ஏற்பட்ட பல சண்டைகள் மோதல்கள் ஆகியவற்றுக்கான ஒரு அபாயச் சங்கொலியாக அமைந்தது. மண வாழ்வில் தொடர்ச்சியாக 1982 ஜூன் 21 இளவரசர் வில்லியம் பிறந்தார். 1983ல் தம்பதிகள் ஆஸ்திரேலியாவுக்கும் ஜப்பானின் டோக்கியோவுக்கும் சென்ற போதும் ஆயிரக்கணக்கானோர் கூடி அவர்களுக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. மகாராணியின் புதல்வர், அடுத்த மன்னர் என்பதற்காகவே இந்த வரவேற்பு என்று சில பத்திரிகைகள் எழுதின. ஆனால் உண்மையில் இளமையும் கவர்ச்சியும் மிக்க டயானாவுக்காகவே இந்தக் கூட்டம். அழகி டயானா தேச வரம்புகளை எல்லாம் தகர்த்து எறிந்து மக்கள் மனதை கொள்ளைக் கொண்டார். 1984ல் ஹாரி பிறந்தார். 1986 கமீலா மீதான சபலம் சார்ள்ஸ் மனதில் தலை தூக்கியது. வீட்டிலே அழகான பச்சைக் கிளி போன்ற ஒரு மனைவி இருந்தாலும், சில ஆண்கள் குரங்கு போன்ற வைப்பாட்டியை தேடிப் போவார்களாம். 1989ல் பிறந்தாள் விழா ஒன்று நடந்த போது அதற்கு கமீலாவும் சார்ள்ஸ{ம் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் டயானாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. முன்னறிவித்தல் எதுவுமில்லாமல் டயானா திடீரென்று உள்ளே நுழைந்தார். மாடிக்கேறி நீங்கள் எல்லோரும் கீழே செல்லுங்கள், நான் கமீலாவோடு பேசப் போகிறேன் என்று ஆண்களை கீழே அனுப்பினார். “கமீலா, உனக்கும் சார்ள்ஸ{க்கும் இடையில் என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியும். நானொன்றும் அசட்டு முட்டாள் என்று எண்ணிவிடாதே”.
கமீலர் “டயானா உனக்குத் தான் -நீ விரும்பிய அனைத்துமே கிடைத்திருக்கிறதே, உலகிலுள்ள அத்தனை ஆண்களும் உன்னை விரும்புகிறார்களே. அழகான இரண்டு குழந்தைகள் உனக்கு இருக்கின்றனவே.”
டயானர் “ஆனால் எனக்கு என் கணவர் வேண்டும்!”
அன்றிரவு வீடு திரும்பியதும் சார்ள்ஸ{க்கும் டயானாவுக்கும் இடையே ஒரு பூகம்பமே வெடித்தது. இந்த மோதல் இப்படியாக அதிகரித்துக் கொண்டே போனது. மகாராணியாரின் வேண்டுகோளின்படி சார்ள்ஸ{ம் டயானாவும் 1996ல் விவாகரத்துக்கு விண்ணப்பித்து அதைப் பெற்று கொண்டார்கள்.
விவாகரத்து வழங்கப்பட்ட மறு வருடம் -1997 ஆகஸ்ட் 31ஆம் திகதி பிரான்ஸின் சுரங்கப் பாதையில் மர்மமான முறையில் வாகன விபத்தொன்றில் உயிரிழந்தார்.
டயானா உயிருடன் இருந்த காலத்தில் சார்ள்ஸ{டனான உச்சக்கட்ட மோதலின் போது 1994ல் பிபிசியின் பனோரமா நிகழ்ச்சிக்கு டயானா செவ்வி வழங்கினார். பிபிசியின் மார்ட்டின் பஷீர் என்றவர் நடத்திய இந்தச் செவ்வி அரச குடும்பத்தையும் பொது மக்களையும் புரட்டிப் போட்டது.
அரண்மனை இரகசியங்களை, சார்ள்ஸ்-டயானா பற்றிய அந்தரங்க இரகசியங்களை டயானாவின் மெய்க்காப்பாளர் அவரது சகோதரர்களின் காவல் அதிகாரிகள் லஞ்சப் பணம் பெற்று கொண்டு கசியவிட்டார்கள் என்று காட்ட விரும்பிய மார்ட்டின் பஷீர், போலியான வங்கி ஆவணங்களைக் காட்டி பேட்டிக்கு அனுமதி பெற்றார் என்று குற்றஞ்சாட்டி பிரிட்டிஷ் ஊடகங்கள் பிபிசி மீதும் மார்ட்டின் பஷீர் மீதும் குரோத மனப்பான்மையோடு குற்றச்சாட்டுகளை முறைப்பாடுகளை எழுதிக் கொண்டே இருந்தன. உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் குரல்கள் எழுப்பப்பட்டன. இளவரசி டயானாவின் பேட்டி ஒலிபரப்பான ஆண்டு 1994. இது பற்றிய பல விஷயங்கள் நீதி விசாரணைக்குப் பின்னர் தெரிய வந்திருப்பது 2021ல். ஆக மொத்தம் 27 ஆண்டுகளாக ஊடகங்கள் பல மார்ட்டினைப் பற்றியும் பிபிசியைப் பற்றியும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டன.
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியின் அறிக்கை கடந்த வாரம் வெளியாகிய போது அதை பிபிசி மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது. டயானாவுடனான பேட்டியை பிபிசி பெற்ற விதம் நீதிபதியால் கண்டிக்கப்பட்டது. பிபிசி நிர்வாகம் இந்த விஷயத்தில் போதுமான அளவுக்கு மேற்பார்வை செய்யவில்லை என்றும் நீதிபதி கூறியிருக்கிறார்.
1994 பிபிசி பேட்டி பற்றி இளவரசி டயானா எழுதிய கடிதமொன்று நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. டயானா தனது கைப்பட எழுதிய இந்தக் கடிதம் 22.12.1995 என்று திகதியிடப்பட்டிருந்தது. அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:

“என்னைப் பேட்டி கண்ட மார்ட்டின் பஷீர், எனக்கு எந்த ஆவணத்தையும் காட்டவில்லை. எனக்குத் தெரியாத, நான் முன்னர் அறிந்திராத எந்தத் தகவலையும் அவர் எனக்கு வழங்கவில்லை. பிபிசிக்கு இந்தப் பேட்டியை வழங்கும்படி கேட்டு என் மீது எந்தவிதமான வற்புறுத்தலும் எவராலும் திணிக்கப்படவில்லை. பிபிசிக்கு நான் பேட்டி வழங்கியமை பற்றி எனக்கு எந்தவிதமான வருத்தமும் கிடையாது…..இப்படிக்கு டயானா”.
பாரிஸ் சுரங்கப் பாதையில் அந்த இளம் இளவரசி மரணத்தை நோக்கி தள்ளப்பட்ட போது அவருக்கு வயது வெறும் 36 மட்டுமே.
எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த தன் தலைவன் செய்த தகிடு தத்தங்களால் மனமுடைந்து சிதறிய ஒரு அப்பாவி அரசகுமாரி பிபிசி பேட்டியில் கூறிய விஷயங்களில் முக்கியமானது:
“திருமண பந்தத்தில் இருவருக்கு மட்டுமே இடமுண்டு இதில் மூன்றாவது நபருக்கு இடமேயில்லை”.

1,109 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *