இந்து ஆலயங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சியும் இன அழிப்பும்


-அ.வியாசன் – விடுகை வருட மாணவன்
இந்து நாகரிகத்துறை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் திணைக்களங்கள் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் புராதான இந்து ஆலயங்கள், தமிழர் புhரதான சின்னங்கள் காணப்படுகின்ற இடங்களில் மறைமுகமாக இந்த அகழ்வாராய்ச்சி என்னும் பெயரோடு மேற்கொள்ளுகின்ற திட்டங்கள் அனைத்தும் இராணுவத்தின் துணையோடு நடத்தப்படுகின்ற திட்டமிட்ட இராணுவ பயங்கரவாத செயற்பாடுகள் என்றே நாம் பார்க்க வேண்டியுள்ளது. யுத்தம் நிறைவடைந்த காலத்திற்கு பின்னர் சைவ சமயத்தின் குறியீடுகளாகவும் வழிபாட்டுதலங்களாகவும் விளங்கும்;;; இடங்களை குறிவைத்து பௌத்த மதம் சார்ந்த ஸ்தலங்களாக மாற்றுகின்ற செயற்பாடுகள் நடைபெற்று கொண்டுக்கொண்டு இருக்கின்றன.

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் கோவில், உருத்திரபுரம் சிவன் கோயில், வவுனியா வெடுக்குநறி ஆதிசிவன் ஆலயம், கன்னிய வெந்நீரூற்று பிள்ளையார் கோவில் போன்ற இந்து ஆலயங்கிளில் நேரடியாக தொல்லியல் திணைக்களங்களில் செல்வாக்கினால் மத அடையாளங்கள் அழிக்கப்;படுகின்ற செயற்பாடுகளை கண்டுகொள்ளகூடியதாக உள்ளது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் 2300 ஆண்டுகாலம் பழமை வாயந்தது என போரசிரியர். சி. பத்மநாதன் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இக் குருந்தூர் மலையில் பல தொல்லியல் ஆதாரங்கள் காணப்படுகின்றன என அதில் சிங்கள பௌத்த சின்னங்கள் காணப்படுகின்றன என தொல்லியல் திணைக்களம் கூறிக்கொண்டு தொல்பொருள் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் தூண்களையும், கற்களையும், வைத்துக்கொண்டு அங்கு புராதன விகாரைகள் இருந்தாக கூறி சிவன், ஐயனாரின் சூலம் உடைக்கப்பட்டதோடு, வழிபாட்டு எச்சங்களும் எரிக்கப்பட்டு புதிய விகாரைகள் அமைக்கும் பணிகளை இராணுவ அரச இயந்திரத்தை கொண்டு தொல்லியல் திணைக்களமும் இவ்வாறன இன அழிப்பினை மேற்கொண்டு வருகின்றது. சிங்கள பௌத்த அடையாளச் சின்னங்களை நிறுவி தமிழர் பிரதேசங்களில் ஆக்கிரமிக்கும் முயற்சியில் இவ் அரசு செயல்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் வரலாற்று பழமை வாய்ந்த் உருத்திரபுரீஸ்வரர் சிவன் கோயில் உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ளது, திராவிடகட்டடக்கலைமரபில் அமையப்பெற்ற இவ்வாலயத்தில் காணப்படும் சதுர ஆவுடை இலிங்கம் பல்லாயிரம் ஆண்டு பழமையானது. இவ்வாலயம் பற்றிய வரலாற்று தகவல்களை தொல்லியல் (கட்டட இடிபாடுகள், சுடுமண் உருவங்கள், செங்கல் கட்டுமானம்), இலக்கிய குறிப்புக்கள், வாய்மொழிசெய்திகள், ஐதீகக்கதைகள் ஊடாகவும் அறியலாம். இவ் கோயில் தொல்லியல் திணைகளத்தினால் அகழ்வாராய்ச்சி இடம்பெற இருந்த வேளை மக்கள் போரட்டத்தினால் இடைநிறுத்தியது. ஆனாலும் இவ்விடத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்ற போது இங்கு ஏதாவது பௌத்த வரலாற்று சான்றுதல்கள் கிடைக்கபெற்றல் இந்த இடத்தில் புதிய விகாரை ஒன்று அமைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான இன அழிப்பு விடயத்தில் மக்கள், அரசியற் தலைவர்கள் கண்ணும் கருத்துடன் செயற்படவேண்டும். பௌத்த மதத்தினை தமிழர் தேசங்களில் அடையாளபடுத்தி தமிழர்களின் வரலாறுகளை திரிவுபடுத்தும் முயற்சிகளே முன்னேடுக்கப்படுகின்றன. இதன் கருவியாக தொல்லியல் திணைக்களம் பயன்படுத்துவதை காணலாம்.

வவுனியா வெடுக்குநாறி ஆதிசிவன் மலைக்கோயில் 2009 யுத்தத்திற்கு முன்னரே இந்துக்கள் இங்கு சென்று சுகந்திரமாக வழிபாடுகளில் இடுபட்டு வந்தபோதிலும் யுத்தத்திற்குப் பின்னர் சில பேரினவாதிகள் பௌத்த தலமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்ட வேளையில் அப்பகுதி மக்கள் அதற்கு எதிராக புனரமைப்பு வேலைகளில் ஈடுபட்டனர். அதன் போது அவ்வாலயத்திற்கு சிவலிங்கம், பிள்ளையார், போன்ற விக்கிரகங்கள் பிரதி~;டை செய்யப்பட்டது. பிற்பட்ட காலங்களில் ஏனைய தெய்வங்கள் பிரதி~;டை செய்யப்பட்டது. 2018 ஆம் ஆண்டு தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களத்தினர் வெடுக்குநாறிமலைக்கு மக்கள் சென்று வழிபாடுகளை மேற்கொள்ளத்தடை விதித்திருந்தனர். ஆனால் கிராமத்து மக்களின் எதிர்ப்பினால் இத்தடையினை தொல்பொருள் திணைக்களத்திளத்தின் அனுமதியுடன் நெடுக்கேணி காவற்துறையினர் தற்காலிகமாக நீக்கி வழிபாடுகளை மட்டும் மேற்கொள்ள அனுமதித்தனர். ஆனாலும் கோயிலைப் புனரமைக்கவோ, கிணறு, வெட்டவோ, மலைக்கு ஏறுவதற்கான படியமைக்கவோ, புதிய கட்டங்களை அமைக்கவோ அனுமதி மறுக்கப்பட்டது. 2019 காலப்பகுதியில் வெடுக்குநாறிமலை ஆய்வு செய்யும் நோக்கில் கொழும்பிலிருந்து வருகை தந்து தொல்லியல் நிபுணர்கள், மாவட்ட தொல்லியத்திணைக்களத்தினர், காவல்துறையினர், இராணுவத்தினர் போன்றோர் வருகை தந்து ஆய்வினை மேற்கொண்டனர் இவ்வாறு மத சுகந்திரத்தில் தலையீடு செய்து தமிழர் வழிபாட்டு தலங்கள் மீது அதிகாரங்களை பிரயோகித்து இவ்வாறன இன அழிப்பினை மேற்கொள்ளுகின்றனர். வெடுக்குநாறி பிரச்சினை நீண்டகாலமாக பிரச்சினையாக செல்கிறது. வன்னிப்பிராந்தியத்தில எல்லைக்கிராமங்கள் பறிபோவதைப்போன்Nறு வெடுக்குநாறி மலை, வாவெட்டிமலை, குருந்தூர் மலை, கும்பகர்ணமலை, ஒதியமலை போன்ற பகுதிகளும் பௌத்த மயமாக்கபடுகின்ற நிலை காணப்படுகின்றது.

திருகோணமலை – கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் இருந்த இடத்தில் பௌத்த விகாரையொன்றை கட்டுவதற்கான திட்டமிட முன்னேடுக்கப்பட்டது மக்கள் போரட்டடங்களையும் வழிபாடுகளையும் மேற்கொள்வதற்கும் தடைவிதிக்கப்பட்டதுடன் பெரும்பான்மையினக் சேர்ந்தவர்கள் தென்கயிலை ஆதீனம் அகத்தியர் அடிகளார் மீது கொதிநீர் ஊற்றினர். இவ்வாறான வன்மையான செயல்கள் இடம்பெற்றன. பின்னர் கோயில் நிர்வாகத்தினால் வழக்கல் தாக்கல்செய்யபட்டதலும் அரசியல் தலைமைகள் இவ்விடயத்தில் அக்கறையுடன் செயற்பட்டதால் வழக்கில் இணக்கம் காணப்பட்டு தற்போது பிள்ளையார் கோவில் அமைப்பதற்கு பணிகள் இடம் பெற்றுக் கொண்டு இருக்கின்றது. இவ்வாறன சட்டரீதியான அனுமுறைகளை எம்மவர்கள் சரியாக பயன்படுத்தினால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு சான்றாகும்.

யுத்தத்திற்கு பின்னரான இனஅழிப்பு விடயத்தில் தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள் தேர்தல் அரசியல் அப்பால் தமிழர் சார்ந்த மரபுரிமை பாதுகாப்பதற்கு ஒன்றுபட்டு செயற்படவேண்டும். இளைஞர்கள் மத்தியில் எமதுபாரம் பாரிய சின்னங்கள் தொடர்பாக தெளிபடுத்தி அடுத்த தலைமுறையினருக்கு கடத்தவேண்டும். தமிழர் தாயகத்தில் காணப்படும் மரபுரிமை பாதுகாக்கும் அமைப்புகள் உருவாக்கபட்டு மக்கள் மத்தியில் விழிர்புணர்வுகளை எற்படுத்தவேண்டும்.

படங்களுக்கு கீழ் பெயர் எழுதவும்.
01.படம் கன்;னியா பிள்ளையார்.

  1. குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் கோவில்
    03.உருத்திரபுரம் சிவன்கோவில்.

1,220 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *