வெற்றி மாறன் -சூர்யா கூட்டணியில் வாடிவாசல்
வெற்றிமாறன் -சூர்யா கூட்டணியில் உருவாகிவரும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு கொரோனா தாக்கத்தின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சூரரைப் போற்று வெற்றி நடிகர் சூர்யா தனது தேர்ந்தெடுத்த கதைகளால் வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த இவரது சூரரைப் போற்று படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. மேலும் அடுத்ததாக நவரசா படத்தின் வெளியீட்டுக்கதாக சூர்யா காத்திருக்கிறார்.
விஜய் சேதுபதிக்கு கிந்தியில்; குவியும் படங்கள்!
எப்போதும் சவாலான கதாபாத்திரங்களே விஜய் சேதுபதியின் தெரிவாக இருக்கும். ஹீரோ, வில்லன், திருநங்கை என எந்த பாத்திரமாக இருந்தாலும் முழுமூச்சில் இறங்கி அதிரடிக்கும் விஜய்சேதுபதிதான் இப்போது ஏகப்பட்ட இயக்குநர்களின் தெரிவாக இருக்கிறார். தமிழில் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு என மற்ற மொழிகளிலும் விஜய்சேதுபதிக்கு வாய்ப்புகள் குவிகின்றன.
முதலில் ஆமீர்கானுடன் லால்சிங் சத்தா படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர், சில நாட்களுக்கு முன்பு கேத்ரீனா கைஃப் கதாநாயகியாக நடிக்க இருக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானார். அடுத்து இப்போது இயக்குநர் சந்தோஷ் சிவனின் ‘மும்பைகர்’ படத்திலும் நடிக்க இருக்கிறார் விஜே. இதற்கடுத்து இயக்குநர் கிஷோர்பாண்டுரங் பேலேகரின் புதிய படத்திலும் நடிக்கிறார்.’காந்தி டாக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
20 வயது இளைஞனை காதலிக்கும்
புதிய படத்தில் அனுஷ்கா
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அனுஷ்கா பாகுபலி படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். பின்னர் அனுஷ்காவின் உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்தன. வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று எடையை குறைத்து வந்த அவருக்கு சமீபத்தில் மீண்டும் எடை கூடியது. இதனால் புதிய படங்களில் நடிக்க அனுஷ்காவை யாரும் அணுகவில்லை.இந்த நிலையில் அனுஷ்கா 20 வயது இளைஞருக்கும், 40 வயது பெண்ணுக்குமான காதலை மையப்படுத்தி தயாராகும் சர்ச்சை படத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக 20 வயது இளைஞராக தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நல்ல நேரம் கே.ஆர்.விஜயா
முத்துப்பல்லழகி முன்னாள் கதாநாயகியான கே.ஆர்.விஜயா 400 படங்களை தாண்டி இன்னமும் நடித்துக் கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் ஆகிய இரு பெரும் நடிகர்களுடனும் பல படங்களில் ஜோடியாக நடித்தவர், இவர் குறிப்பாக சிவாஜியுடன் அதிக படங்களில் ஜோடி சேர்ந்த நாயகிகள் பட்டியலில் இவரும் இருக்கிறார்.
நெஞ்சிருக்கும் வரை முத்துக்களோ கன்னம் பாடல் ஆகட்டும், ஊட்டிவரை உறவில், பூ மாலையில் ஓர் மல்லிகையாகட்டும், ஏன் தங்கப்பதக்கத்தில் அவர் நடிப்பாகட்டும் மறக்கமுடியுமா?
இன்று அவர் நடித்து முடித்துள்ள புதிய படமான ‘சண்டக்காரி’ படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. ‘‘முதுமை பருவத்தை எட்டிவிட்டாலும், அவர் சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்தார். ஒருநாள் கூட தாமதமாக வந்ததில்லை. காலை 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால், 5 நிமிடம் முன்கூட்டியே வந்துவிடுவார். எப்பவுமே நல்லநேரத்திற்கு வந்துவிடுவார். சண்டக்காரி’ படத்தின் இயக்குனர் மாதேஷ் இவ்வாறு கூறியுள்ளார். மக்கள் திலகத்துடன் நல்லநேரம் படத்தில் நடித்தபோது இந்த நேரம் தவறாது வருவதைக்கற்று இருப்பாரோ? இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்புளே இன்பத்தமிழ்நாட்டிலே… என்று வாத்தியாரிடம் கற்றவள் ஆச்சே!
1,193 total views, 2 views today