யேர்மனியில் சாதனை படைத்த சிறுமி!..
கணக்குக் குட்டிப்புலி!…
நாம் பாடசாலையில் படிக்கும் காலத்தில் கணக்குப்பாடம் படிக்கும்போது சிறப்பாக, வேகமாக விடைகளைக் கண்டுபிடிக்கும் போது இவன் அல்லது இவள் கணக்கில ஒரு புலி என்று ஆசிரியர்கள் சொல்வது வழமை.அதேபோலதான் யேர்மனியிலும் கணக்கில் ஒரு குட்டிப்புலி.
யேர்மனியிலுள்ள நோத் றைன் வெஸ்பாளின் (ழேசனசாநin றநளவகயடநைn) மாநிலத்தில்; எசன் (நுளளநn) நகரத்தில் இலங்கையிலிருந்து வந்து குடியேறிய சுமார் 300 தமிழ்க் குடும்பங்களுக்கும் அதிகமானோர் வாழ்கிறார்கள்.
இங்கு வாழும் திரு பவான் அவர்களின் புதல்வி செல்வி ஆரபி.பவான் (10 வயதுச்சிறுமி) அவர்கள், சிறு வயதிலிருந்தே கணக்குப்புலியாக உருவெடுத்துவிட்டார். தற்போது 4ம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும்போதே இந்த மாநிலத்தில் 23.500 மாணவர்கள் கலந்துகொண்ட கணக்குப் போட்டியில் 43 பேர் தெரிவானார்கள். அவர்களில் ஆரபி அதிகப் புள்ளிகள் பெற்று முதலாவதாகவும் திகழ்கிறார். இவர் பாடசாலையில் முன்பு எவரும் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டதில்லை. இவரே அதிலும் முதல்வர்.
இவரின் திறமைகளைக் கண்டு பாடசாலை ஆசிரியர்கள் இவரை அந்த வகுப்புக்கு கணக்குப்பாடத்தை எனைய மாணவர்களுக்குக் கற்பிக்கவும் சந்தர்ப்பம் அளித்துவந்ததுடன் பாடசாலை கல்வியாளர்களாலும் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றிருக்கிறார். இவரின் திறமையைப் பாராட்டி எசன் நகர மேயராலும் பாராட்டுப்பத்திரம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். உலகப்புகழ்பெற்ற அமேசான் நிறுவனமும் பரிசு வழங்கிக் கௌரவித்திருக்கிறது.
தமிழாலயத்தில் தாய்மொழியாம் தமிழும் சங்கீதமும் கற்றுவரும் இவரிடம் எதிர்காலத்தில் படித்து என்ன தொழில் செய்ய விரும்பம் என்று கேட்டபொழுது கட்டிடக்கலை நிபுணராக (யுசஉhவைநஉவரசந) வரவே விரும்பம் எனத்தெரிவித்துள்ளார். இனி 5 வகுப்பிற்காக யேர்மனியின் முதல்தரப் பாடசாலையான புலஅயௌரைஅ செல்லவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். உலகத் தமிழர்களுக்கும் பெருமைதரும் சிறுமியை. கல்வியில் பல சாதனை படைக்க வெற்றிமணி வாழ்த்தி மகிழ்கிறது..
1,132 total views, 3 views today