உலகில் உள்ள அனைத்து அணுகுண்டுகுகளும் ஒரே நேரத்தில் வெடித்தால் என்ன நடக்கும்?
Dr.நிரோஷன்
அணுகுண்டு மிகவும் பயங்கரமான ஒரு ஆயுதம் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் ஆகும். குறிப்பாக அமெரிக்க இராணுவத்தால் 1945ம் ஆண்டில் அணுகுண்டால் தாக்கப்பட்ட ஹிரோஷிமா மற்றும் நகசாக்கி ஆகிய நகரங்களில் ஏற்பட்ட சேதம் மிகவும் விபரீதமானது. 100.000 கும் மேற்பட்டோர் உடனடியாக இறந்துவிட்டனர். தொடர்ந்து அதன் விளைவாக மேலும் 130.000கும் மேற்பட்டோர் இறந்தனர். ஒரு சில அணுகுண்டுகள் வெடித்தாலே இவ்வளவு சேதம் ஏற்படுகின்றதே, இதுவே இந்த உலகில் காணப்படும் அனைத்து அணுகுண்டுகளும் ஒரே நேரத்தில் வெடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
நமது பூமியில் தற்போது சுமார் 15.000 அணு ஆயுதங்கள் உள்ளன. அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகள் மட்டுமே சுமார் 7.000 அணுகுண்டுகளை தமதாக்கிவைத்திருக்கின்றனர். இவற்றைத் தொடர்ந்து பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா, இஸ்ரேல் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுக்கிடையே சுமார் 1.000 அணுகுண்டுகள் உள்ளன. ஆனால் 15.000 அணுகுண்டுகளுக்குள் மறைந்திருக்கும் அழிக்கும் சக்தி எவ்வளவு தெரியுமா?
அதற்கு முதலில் நமது உலகில் எத்தனை நகரங்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம். குறிப்பாக 100.000கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட நகரங்களை மட்டும் எடுத்துக்கொண்டால் சுமார் 4.500 நகரங்கள் உள்ளன. சில பெரியவை, வேறு சில சிறியவை எனவே ஒரு நகரத்தை முற்றிலும் அழிக்க சராசரியாக மூன்று அணுகுண்டுகள் தேவை என்று எடுத்துக்கொள்வோம். எனவே 4500 நகரங்களை அழிக்க 13.500 அணுகுண்டுகள் தேவைப்படுகின்றது. அத்துடன் அந்த நகரங்களில் வாழும் சுமார் 300 கோடி மக்களும் ஒரே நொடியில் இறந்துவிடுவன. இதில் ஆச்சரியம் ஊட்டும் விஷயம் என்னவென்றால், இவ்வள்வு பெரிய அழிவை செய்தாலும், உலகில் மீதீயாக 1.500 அணு ஆயுதங்கள் உள்ளன என்பது தான்.
இதை இனி வேரொரு கோணத்தில் இருந்து பார்ப்போம். ஒவ்வொரு நகரமாக தாக்காமல், 15.000 குண்டுகளையும் ஒரு பெரிய குவியலாக சேர்த்து தென் அமெரிகாவில் காணப்படும் அமேசான் மழைக்காட்டில் ஒரே நேரத்தில் வெடிக்க வைத்தால் என்ன நடக்கும்? ஒரு சராசரி அணுகுண்டின் அழிக்கும் சக்தி 200.000 டன் டி.என்.டியின் (T.N.T.) சக்திக்கு சமமாக இருக்கும். எனவே 15.000 அணுகுண்டுகள் சுமார் 300 கோடி டன் டி.என்.டி கு சமமாக இருக்கும். இதைக் கொஞ்சம் புரியும் படி சொல்லவேண்டும் என்றால், இந்த அழிக்கும் சக்தியை ஒரு எரிமலையுடன் ஒப்பிட்டால் மட்டுமே முடியும். வரலாற்றில் கொடிய எரிமலை வெடிப்புகளில் ஒன்று 1883ம் ஆண்டில் கிரகடோவா தீவில் நடைபெற்றது. அந்த மிகவும் சக்தி வாய்ந்த வெடிப்பு, தீவின் சுமார் 70மூ நிலப்பரப்பையும் மேலும் சுற்றியுள்ள தீவுக்கூட்டத்தையும் அழித்துவிட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்களும் கொல்லப்பட்டன. மேலும் இதன் விளைவுகள் சுனாமி போன்ற பலவிதமான வேடங்களில் உலகம் பூராக உணரப்பட்டது. இதில் உள்ள பயங்கரமான விஷயம் என்னவென்றால், நாம் கற்பனையில் அமேசான் மழைக்காட்டில் குவித்து வைத்திருக்கும் அணுகுண்டுகளின் அழிக்கும் சக்தி, இந்த எரிமலையின் அழிக்கும் சக்தியை விட 15 மடங்கு அதிகமானது என்பது தான். எனவே இது அனைத்தும் வெடித்தால் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போமா?
3… 2… 1… பூம்!!!
வெடித்து அடுத்த நொடியில் ஒரு நெருப்பு பந்து சுமார் 3.000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தேசத்தை உடனடியாக அழித்துவிடும். 250 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் காணப்படும் அனைத்து உயிரினங்களும் எரியத் தொடங்கிவிடும். இந்த மாபெரும் வெடிப்பு உலகம் முழுவதும் கேட்கப்படும். மில்லியன் டன் கணக்கான எரிக்கப்பட்ட பொருள்கள் வளிமண்டலத்தை நோக்கிப் பறக்கும். இதைத் தொடர்ந்து சரித்திரம் காணாத விதமாகத் தென் அமெரிக்கா முழுவதும் காடுகளும் நகரங்களும் தீயில் மூழ்கிப் போகும். அட இத்துடன் எல்லாம் முடிந்து போகாது. இனித் தான் பிரச்சனையே ஆரம்பிக்கின்றது.
இந்த மாபெரும் அணுகுண்டு வெடிப்பால் கதிரியக்கப் பொருள்கள் (radioactive material) பரவிச் சுற்றியிருக்கும் உயிரினங்களை மிக விரைவாகக் கொல்லும், மேலும் பல கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரிய பகுதி மட்டுமில்லாமல், காற்று வீசும் திசையில் இருக்கும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் காணப்படும் பிரதேசம் முழுவதும் வசிக்க முடியாத நிலைக்கு மாறிவிடும். இதில் உள்ள பயங்கரமான விஷயம் என்னவென்றால், உயிரினங்களுக்கு மிகவும் ஆபத்தான இந்த கதிரியக்கப் பொருள்கள் காற்றுமண்டலத்தில் கலந்து உலகெங்கும் பரவி புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை தீவிரமாக அதிகரிக்கும். இதன் விளைவாகத் தொடர்ந்து உலகெங்கும் அணுப்போர் கார்காலம் என்று அழைக்கப்படும் ரேஉடநயச றுiவெநச ஆரம்பித்து உலக வெப்பநிலையை ஒரு சில டிகிரி செல்சியசுக்கு குறைக்கக்கூடும்.
நண்பர்களே, ஒரு அணுகுண்டு வெடித்தால் என்ன, 15.000 அணுகுண்டுகள் வெடித்தால் என்ன, அதன் விளைவு பயங்கரம் என்பதில் சந்தேகமே இல்லை. எனவே நாம் வாழும் இந்த உலகில் இனி ஒரு போதுமே இந்த கொடிய ஆயுதம் பயன்படுத்தக் கூடாது என்று நம்புவோம்.
இனி நீங்கள் கூறுங்கள்! அணுகுண்டு இந்த உலகத்துக்குத் தேவையான ஒரு ஆயுதமா? இதற்குரிய பதிலை மட்டும் இல்லை, எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக எனது முகநூல் பக்கத்தில் (www.facebook.com/scinirosh
981 total views, 3 views today