இலங்கையில் கல்விகற்க மரமேறும் மாணவர்கள்!
இனமொழி மதங்களுக்கு அப்பால் ஒரு பார்வை. இலங்கையில் இணைய வழி கற்கையில் இணைந்து கொள்வதற்காக நெட்வேர்க் கிடைக்காத மாணவர்கள் மிகவும் ஆபத்தினை சந்தித்து தமது கல்வியினை கற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பொகிட்டிவாயவைச் சேர்ந்த ஆசிரியையும் 45 மாணவர்களும் இணைய சிக்னலைப் பெறுவதற்காக உயரமான பாறையொன்றின் மீது ஏறுகின்றனர். கொவிட் காரணமாக பாடசாலைகளுக்கு செல்ல முடியாத தனது மாணவர்களிற்கான பாடங்களை வழங்குவதற்காக தகவல் தொழில்நுட்ப ஆசிரியை நிமாலி அனுருதிகா அந்த சிக்னல்களைப் பயன்படுத்துகின்றார். அவர்கள் அனைவரிடமும் கையடக்கத் தொலைபேசியோ அல்லது மடிக்கணினியோ இல்லை. இந்நிலையில் நான்கு ஐந்து சிறுவர்கள் ஒரே கையடக்கத் தொலைபேசியை அல்லது மடிக்கணினியைப் பயன்படுத்துகின்றனர்.
மாணவர்கள் இவ்வாறு இணைய வசதியினை பெறுவதற்காக 30 அடி உயரமான மரத்தில் ஏறுவதாகவும் அதிலிருந்தாலே மாணவர்களினால் இணைய வசதிகளைப் பெற முடியும் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அவர்கள் ஒவ்வொருவராக அம்மரத்தில் ஏறி தங்கள் பாடங்களை பதிவேற்றிக் கொள்கின்றதாகவும் கூறப்படுகின்றது. மாணவர்கள் இவ்வாறு ஆபத்தான முறைகளில் கல்விபயிலும் புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளன.
1,274 total views, 2 views today