தமிழ் சினிமா
அடித்தட்டு மலையாள படத்தில்
ஆழ்கடல் மீனவனாக ஆடுகளம் வ.ஐ.ச.ஜெயபாலன்
படப்;பிடிப்பு பற்றி கூறுகையில். 16 நாட்கள் கொல்லம் கடலை மேடையாக்கி ஆடிவிட்டு வந்திருக்கிறேன். பேசும் கண்கள் என என் உடல் மொழியை வியந்து தமிழரும் மலையாளிகளும் தாய் பிள்ளைகள் தானே என நல்வார்த்தைகூறி நீங்கள் தமிழிலேயே பேசி நடியுங்கள் என என் அடையாளத்தை கவுரவப் படுத்திய மலையாள இயக்குகுனர் ஜிஜோ மற்றும் சுவடி எழுத்தாளர் கைஸ் இருவருக்கும் நன்றிகள். ஆடுகளம் கண்ட நம்மவர் தற்போது ஆழ்கடல் காண்கிறார். வெற்றிபெற வெற்றிமணி வாழ்த்துகின்றது.
திரௌபதியாகும் தீபிகா படுகோனே
2வருடங்களுக்கு முன்பே மகாபாரதம் கதையை படமாக்கும் அறிவிப்பு வந்தது. ஆனால் அதன்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லாததால் படத்தை கைவிட்டுவிட்டதாக பேச்சு கிளம்பியது. இதற்கிடையே இந்த படத்தை தயாரிக்கும் மது மந்தனா தற்போது அளித்துள்ள பேட்டியில், “மகாபாரதம் கதையை படமாக்கும் நேரம் வந்து விட்டது. இந்த படத்தின் கதை தீபிகா படுகோனேவுக்கு பிடித்துபோனதால் திரௌபதியாக நடிக்க முன்வந்துள்ளார். புராணங்களை படமாக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனால் கடும் முயற்சிகள் எடுத்து எல்லா தகவல்களையும் சேகரித்தோம். இப்போது மகாபாரதம் கதையை படமாக்கும் அனைத்து தகவல்களும் எங்களிடம் இருக்கிறது. இந்த படத்தை எடுக்க கொஞ்சகாலம் ஆகும். அதற்குள் ராமாயணத்தை படமாக்கும் வேலையை தொடங்க இருக்கிறோம்’’ என்றார்.
அவசரப்பட்டு விட்டேன்; ரேவதி
நான் 17 வயதில் சினிமாவுக்கு வந்தேன். 20 வயதில் திருமணம் செய்து கொண்டேன். அப்படி அவசரப்பட்டு செய்திருக்கக்கூடாது என்று பின்னால் வருத்தப்பட்டேன். ‘புன்னகை மன்னன்’ படம் வந்த நேரம் அது. இன்னும் சில நல்ல படங்களில் நடித்துவிட்டு திருமணம் செய்திருக்கலாம் என்று அப்புறம் உணர்ந்தேன்…’’ என்கிறார் ரேவதி.அவர் மேலும் கூறும்போது, ‘‘நான் நடிப்பதற்கு கொஞ்சம் பதற்றப்பட்டது சிவாஜியுடன் ‘லட்சுமி வந்தாச்சு’ படத்தில்தான். அது ஒரு பாடல் காட்சி. அவர் கால்களை தொட்டு வணங்குவது போல் காட்சி. சிவாஜியுடன் நடிப்பதற்கு பதற்றப்பட்டது உண்மை…’’ என்றார். ‘‘உங்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த சக போட்டியாளர் யார்?’’ என்ற கேள்விக்கு, ‘‘பூர்ணிமா பாக்யராஜ். அது செல்போன் வராத காலம். பூர்ணிமாவிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. என் நடிப்பை பாராட்டி அவர் எழுதிய ஒவ்வொரு வார்த்தையையும் மறக்க முடியாது’’ என்று ரேவதி கூறினார். (‘‘ரேவதி, பூர்ணிமா, ஊர்வசி, ஷோபனா ஆகிய 4 பேரும் ஒரே சமயத்தில் திரையுலகுக்கு வந்தவர்கள்)
விருமாண்டியான ‘விக்ரம்’
நடிகர் கமலின் 232ஆவது படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.விக்ரம் படத்தின் ‘முதல் பார்வை’ போஸ்டர் வெளியானது. கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் அடங்கிய இந்த ‘முதல் பார்வை’ போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.அதே சமயம் கமல், நெப்போலியன், பசுபதி நடிப்பில் வெளியான விருமாண்டி படத்தின் போஸ்டர் போல் இருப்பதாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஷங்கர்- கமல் செய்வது நியாயமா? லைக்கா என்ன செய்யப்போகிறது.
தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக இருக்கும் விஷயங்களில் இந்தியன் 2 பட விவகாரமும் ஒன்று. இந்தியன் 2 படத்தின் கதாநாயகனாக கமல்ஹாசன், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள விக்ரம் படத்தின் வேலைகளை ஆரம்பித்து விட்டார். இந்தியன் 2 படத்திற்காக இதுவரையில் 200 கோடி ரூபாவுக்கு மேல் செலவு செய்திருக்கிறது தயாரிப்பு நிறுவனமான லைகா. படத்தின் இயக்குநர் ஷங்கர் மற்றும் படத்தின் நாயகன் கமல்ஹாசன். இப்படி இரண்டு பெரும் கலைஞர்கள் தாங்கள் பங்கேற்றுள்ள படத்தை அப்படியே அம்போ வென விட்டுவிட்டு அவர்களது அடுத்த படத்திற்குப் போவது எந்த விதத்தில் நியாயம்?
1,166 total views, 6 views today