கர்நாடக இசை என்றால் என்ன?

-பொ.கருணாகரமூர்த்தி பேர்லின்- யேர்மனி

ஒலி, ஒளி, றேடியோ (மின்காந்த அலைகள்) எல்லாம் அலைவடிவில் எம் புலன்களால் உணரப்படுபவை, ஒரு வானொலிப்பெட்டிகூட மின்காந்த அலைகள் சுமந்துவரும் ஒலிஅலைகளின் தொடரையே பிரித்து எம் செவிகளில் இறைக்கிறது. மானுடச்செவிகள் 20 Hertz இலிருந்து 20,000 Hertz வரை அதிர்வுகளை உணரும் வல்லமை கொண்டவை. இந்த அதிர்வுகளை எம் செவியின் உயர் ரூ தாழ் எல்லைகள் எனலாம். (Humans can detect sounds in a frequency range from about 20 Hz to 20,000 Hz.)ஒரு செக்கனுக்கு இத்தனை அதிர்வுகள் என்பதை Hertz எனும் அலகில் அளப்பர். சிறு குழந்தைகளுக்கும், நாய்போன்ற விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் (ஆட்காட்டி), ஈக்களுக்கும் ஒலியலைகளைக் கிரகிக்கும் திறன் ஃ உயர் ரூ தாழ் அதிர்வெல்லைகள் இன்னும் அதிகம்.

நாங்கள் கல்லை எடுக்கக் குனியும்போதே நாய்கள் ஓடியும், பறவைகள் பறந்தும் விடுவது அதனால்த்தான்!
நம் காதுகளால் கேட்கமுடியாத ஒலிகளும் இருப்பதற்கு அசல் உதாரணம் நாம் முகநூலில் ’முசு’வாக இருக்கும்போது எமக்குப் பின்னால் வந்துநிற்கும் கரடியைஃபுலியை உணராமலிருப்போமல்லவா? இதனால்த்தான்! ஒரு ரோஜா மலரும் நிகழ்வை ஒரு மைக்கிரோ செக்கன்டாக ஒடுக்கினால் அது மலர்கையில் ஒரு பீரங்கிவெடிக்கும் சத்தம் எழும் என்கிறது அறிவியல்.

இனி நேரே விஷயத்துக்கு வருவோம். இசையின் ஸ-ரி-க-ம-ப-த-நி-ஸ எனும் 7 ஸ்வரங்களுக்கும் ஒவ்வொரு அதிர்வெண்ணும் அதன் மேல் ஃ கீழ் எல்லைகளும் உள்ளன. எம் குரல்நாண் அதிர்ந்து எழுப்பும் ஒலியின் கலவையில் அதிர்வெண் குறைந்த அதிர்வுகள் அதிகம் இருப்பின் அக் குரலை டீயளள எழiஉந என்பர்..M.Dராமநாதனின் ,C.S.ஜெயராமன், எஸ்.பி.பி,Louis Amstrong ஆகியோர் குரல்கள் அவ்வகையானவை. குரலின் அதிர்வெண் கூடக்கூட அவை Baritone, Tenor, Alto, Mezzo, and Soprano என வகைப்படுத்தப்படும்.

இயற்கையில் ஆண்களைவிடவும் பெண்களின் குரலின் அதிர்வின் வீச்சு எல்லை உயர்வானது. அவற்றை Soprano வகை என்பர். பி.லீலா, லதா மங்கேஷ்கார், எஸ். ஜானகி, ஸ்ரேயா கோஸல் இவர்களின் உச்ச ஸ்தாயிகளை நினைவுபடுத்திப் பாருங்கள். அவர்கள் அடையும் உச்ச எல்லைகளை ஆண்களால் இலகுவில் எட்டிவிடமுடியாது. செவிகளுக்குச் சுகம்தரும் அதிர்வுகளுக்கும் எல்லைகள் உள்ளன.ஆனால் அதியுச்ச Soprano வும் கீச்சுக்குரலாகிவிடும் அபாயமுண்டு, அதற்கு மேலும் அதை இரசிக்கமுடியாது. தாழ்ந்தாலும் தவளைக்கச் சேரியாகி விடும். ஒரு பாறையை ஆப்பைவைத்துப் பிளக்கும் ஓசை எம் செவிகளுக்கு நாராசமாயிருக்குக்கும், அதே பாறையில் ஒரு சிற்பி ஒரு சிலையை வடித்தானாயின் அவன் உளியோசை ஒரு அருவியின் சலசலப்பைப்போல கேட்கச்சு கமாக இருக்கும். ஆக இசைகூட ஒழுங்கமைக்கப்பட்ட சப்தந்தான்! அடகம் என்றால் இன்பம் எனும் பொருளும் உள்ளது மனக்கொள்ளத்தக்கது. ஸ்வரங்களை மாற்றி மாற்றிப்போடுவதிலும், இரசனையுடன் கோர்ப்பதிலுமே பல கமகங்களும், ராகங்களும், கண்ணிகளும், மெட்டுக்களும், இசைக்கோர்வைகளும் உருவாக்கப் படுகின்றன.

இனிக்கர்ணம் என்பது காது. கர்ணனின் கர்ணகுண்டலங்கள் என்று மஹாபாரதத்தில் வரும். எம் காதால் கிரகிக்கவல்ல எல்லா ஸ்வரங்களுமே கர்ணத்துள் அடகமான இசையின் துணுக்குகளாகும். அதுவே கர்ண அடக இசை, அது மருவி கர்நாடக இசையானது.
இவை நான் என் இசையாசிரியர் சிறுப்பிட்டி திரு.பொ.இளையதம்பி அவர்களிடமும் (சித்தூர் இராமநாத பிள்ளையின் மாணவர் அவர்), K.J.ஜேசுதாஸ் அவர்களிடம் ஒரு உரையாடலின்போதும் கேட்டுத் தெரிந்து கொண்டவை.

1,297 total views, 9 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *