அன்று இங்கிலாந்தில் கடையில் வைத்து சுடப்பட்ட ஈழத்தமிழச் சிறுமி, இன்று GCSE இல் 9 பாடங்களில் A எடுத்து சாதனை!

லண்டனில் 10 வருடங்களுக்கு (2011ம் ஆண்டு) முன்னர் நடைபெற்ற, துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று, இன்னும் பல தமிழர்கள் மத்தியில் நீங்காமல் நினைவில் இருக்கிறது. துஷா கமலேஸ்வரன் என்ற 5 வயது சிறுமி தனது மாமாவின் கடையில் துள்ளி விளையாடிக் கொண்டு இருந்தது. அப்போது அங்கே, ஒரு குழுவுக்கு இடையே நடந்த மோதலில் சுட்ட குண்டு ஒன்று அவரது முள்ளம் தண்டை தாக்கியது.
அவர் உயிருக்கு போராடி, இறுதியில் காப்பாற்றப்பட்டார். ஆனால் அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. இருப்பினும் கடுமையாக உடல் பயிற்ச்சிகள் செய்து, மெல்ல மெல்ல முன்னேறி வருகிறார். ஈழத் தமிழர்கள் கல்வியில்; சிறந்தவர்கள்;,என்பது யாவரும் அறிந்த விடையம். அவர்; இம் முறை இடம்பெற்ற O/L பரீட்சையில் துஷா பெரும் சாதனை படைத்துள்ளார் என்று, ஆங்கிலப் பத்திரிகைகள் அவரைப் பாராட்டி உள்ளது. 9 பாடங்களில் அனைத்திற்கு 8 க்கு மேல் மதிப்பெண்களை அவர் எடுத்துள்ளார். இவரது பெற்றோர்களின் ஊரான நீர்வேலி – ஏழாலை மக்கள் மட்டுமன்றி அனைத்து தமிழர்களும் பெருமகிழ்வுகொள்கிறார்கள். தன்னம்பிக்கையுடன் மேலும் மேலும் உயர்ச்சிபெற மாணவிக்கு வெற்றிமணியின் வாழத்துகள்.தகவல்: ஈழம் ரஞ்சன்