நவரசா ஒவ்வொன்றும் ஒவ்வொரு இரகம்.
தமிழ் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகர்களில் ஒருவராக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தோடு வளம் வருபவர் நடிகர் சூர்யா. வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் இவர் தற்போது வெற்றிமாறனுடன் “வாடிவாசல்” என்னும் திரைப்படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தன. வெற்றிமாறன் தற்போது சூரியுடன் “விடுதலை” என்னும் படத்தை இயக்கி வருவதால் இப்படத்திற்கு பிறகு வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என தெரிகிறது.
ஒன்பது இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து ஒன்பது விதமான ரசனைகளுடன் யேஎயசயளய என்னும் வலைத்தொடரை இயக்கி உள்ளனர். இந்த ஒவ்வொரு தொடரிலும் தமிழ் திரையுலகை சார்ந்த பல்வேறு முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதர்வா, பிரசன்னா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
மேலும் சூர்யா 12 ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் “வாரணம் ஆயிரம்”. இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்;பைப் பெற்றிருந்தது. இதனையடுத்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி “காதல்” என்னும் ரசனையில் இணைந்துள்ளது. அண்மையில் நேவகடiஒ இல் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் வெளிவந்த “கிட்டார் கம்பி மெலே நின்ரு” என்னும் படத்தில் அவர் நடிகை பிரயாகா மார்ட்டினுடன் யதார்த்தமாக நடித்துள்ளனர். “காதல்” என்னும் ரசனையை மையமாகக் கொணட படம் இது. காதலித்துக்கொண்டே இருப்பது மகிழ்ச்சியானது.அந்த நினைவுகள் மகிழ்வானது ஆனந்தமானது. ஏன் முத்தம்கூட முத்தம் அவ்வளவுதானா! (துரளவ ய முளைள) என நாயகி நாயகனிடம் கேட்கும்போது அது ஆனந்தமே என்ற புன்னகை மட்டும்.இந்தப்படம் திரும்பத்திரும்ப பார்க்கலாம்.காரணம் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பரிமானம். சூரியா அழகான கதாநாயகன் அவ்வளவுதான் என எண்ண இடமின்றி அதற்குமேல் ஏதோ ஒன்று அவரிடம் உள்ளது.
1,267 total views, 3 views today