கனடாவில் வெற்றிமணியின் 300 வது இதழ்!
கடந்த 12.09.2021 அன்று, கனடா நாட்டில் கவிஞர்.வி.கந்தவனம் அவர்கள் இல்லத்தில், வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களுடன், கலை இலக்கிய நண்பர்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. கவிஞர் வி.கந்தவனம். உதயன் பத்திரிகை ஆசிரியர்.ஆர்.என்.லோகந்திரலிங்கம்,கலைக்கதிர் கதிர்.துரைசிங்கம். நாடகத் தந்தை க.சிவதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவ்வேளை வெற்றிமணியின் 300 வது இதழ் யாவருக்கும் வழங்கப்பட்டது. உதயன் பத்திரிகையின் வெள்ளிவிழா இதழும் வெற்றிமணி ஆசிரியருக்கு உதயன் ஆசிரியர் ஆர்.என்.லோகந்திரலிங்கம் அவர்கள் வழங்கினார்கள்;.
மேலும் தனி நிகழ்ச்சி ஒன்றில் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க ஸ்தாபகர் ஆவணஞானி அமரர் இரா.கனகரட்டணம் அவர்களின் துணைவியார் திருமதி பவளம் கனகரட்ணம் அவர்களுக்கும் வெற்றிமணியின் 300 வது இதழ் கையளிக்கப்பட்டது. படங்கள்:வெற்றிமணி
1,367 total views, 2 views today