யேர்மனியில் இடர் காலத்திலும் இனிதாக நடைபெற்ற பரதநாட்டிய அரங்கேற்றம்.
ஆடற்கலாலய மாணவிகள் செல்விகள் றோசிகா,றாசிகா ரவிக்குமார் சகோதரிகள்
இரண்டு வருடங்களின் பின்பு முதலாவதாக யேர்மனியில் Duisburg, நகரில் ஆடற்கலாலய மாணவிகள் செல்விகள் றோசிகா,றாசிகா ரவிக்குமார் சகோதரிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் (04.09.2021) நடைபெற்றது. ஆடற்கலாலய அதிபர் நடன ஆசிரியை றெஜினி சத்தியகுமர் அவர்களின் மாணவனும் மகனுமான ஆடற்கலால வித்தகர் நிமலன் சத்தியகுமாரின் நெறியாக்கத்தில் நட்டுவாங்கத்தில் அற்புதமாக அரங்கேறியது.
அதிலும் சிறப்பு அம்சம், அனைத்து அணிசேர் கலைஞர்களும் இளைஞர்கள். செல்வன்.நிமலன் சத்தியகுமார் சிறப்பாக நட்டுவாங்கம் செய்ய செல்வன்.நிரூஜன் சிவசோதி அற்புதமான குரலால் பாவத்தோடு பாட. செல்வன். லகீபன் தர்மபாலன் மிருதங்கம் அருமையாக வாசிக்க, செல்வன். பிரசாந் பரமேஸ்வரலிங்கம் அழகாக வயலீன் வாசிக்க, செல்வன்.சிவானுஜன் சிவகுமாரன், வீணையை மீட்ட, சிறப்பான,அரங்கேற்றமாக இருந்தது.
எமது அடுத்த சந்ததியின் ஆற்றல் நம்பிக்கை தரவல்லதாக அமைந்தது. பிரதம விருந்தினராக பரதகலாவித்தகர் ஸ்ரீமதி ரிஷாந்தினி சஞ்சீவன் ( சிவசக்தி நர்த்தனஷேத்திரா அதிபர் ) அவர்கள் கலந்து சிறப்பித்தார். அவர் தனது உரையில் ஒரு தூய சுகம் தரும் அற்புதமான அரங்கேற்றத்தை காணமுடிந்தது என்றார்.
சிறப்பு விருந்தினராக வெற்றிமணி மு.க.சு.சிவகுமாரன் அவர்களும் மற்றும் கவிதாஞானவாருதி கோசல்யா சொர்ணலிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அங்கு வெற்றிமணி ஆசிரியர் அரங்கேற்ற மாணவிகளினி அபிநயத் தோற்றங்களைங்களை வெற்றிமணியின் 300 வது இதழினி முன் பக்கத்தில் வெளியிட்டு பெருமைப் படுத்தியதுடன் அரங்கில் அரங்கேற்ற நாயகிகளின் பெற் றோருக்கு 300 வது இதழினை வழங்கி கௌரவித்தார். அவர் தன் உரையில் கோரோனா இடர்காலத்திலும் தம்மைத் தொலக்காது அதில் கரையாது கரைசேர்ந்த கைதேர்ந்த கலைஞர்களை இங்கு நேரில் காண்பதில் பெரு மகிழ்வு அடைவதாக குறிப்பிட்டார். இணையங்கள் எத்தனை இருந்தாலும் நிஜ தரிசனத்திற்கு ஈடு இணையில்லை என்றார்.அங்கு கலைஞர்களுக்கு கிடைத்த கரகோஷங்கள்; பல ஆயிரம் லைக்கை (டுமைந ) விட மேலானது.
படங்கள். மாலதி டிஜிரல்ஸ்
870 total views, 3 views today