குட்டி story

இப்படித்தான் சில முடிவுகள்
தமிழினி பாலசுந்தரி நியூஸ்லாந்து
அவள் முடிவு எடுத்துவிட்டாள். ஒரு வாரமா
யோசிச்சு கடைசியில் இதுதான் முடிவு என்று
முடிவெடுத்தாள். இப்போ மனம் லேசாக படுத்தாள்,
நித்திரையும் உடனேயே வந்தது. மறுநாள்,
தெளிந்த மனத்துடன் எழும்பியும் விட்டாள்.
அம்மா சரசக்கா வந்து இருக்கிறா என்றார்.
போய் சரசக்காவுடன் கதைக்கத் தொடங்கியதும்,
சரசக்கா ‘என்ன பிள்ளை முடிவு எடுத்தாச்சோ’
என்றார். இவளும் சொன்னாள்.
‘என்னமோ பிள்ளை யோசி’ எண்டு ஒரு பரிதாபப்
பார்வை பார்த்துச் சென்றார். பாவம் இவள் மீண்டும்
யோசிக்கத் தொடங்கினாள்… இனி முடிவு!