உலகிலேயே சிறய நாடு சீலேண்ட! Sealand

பயன்படுத்தினர்.போர் முடிந்த பின், ‘ரப் டவர்’ எனப் பெயரிடப்பட்டு, 1956- வரை இத்துறைமுகத்தை பிரிட்டிஷார் பயன்படுத்தினர். பின், காலப்போக்கில் அப்படியே விட்டுவிட்டனர்.முன்னாள் ராணுவ அதிகாரியான ராய் பேட்ஸ் தன் குடும்பத்துடன் 1967ல் இங்கு வந்து தங்கியவர், இந்த இடத்திற்கு ‘பிரின்ஸிபாலிட்டி ஆப் சீலேண்ட்’ என்று பெயர் வைத்தார். தனி நாடு: பிரிட்டன் அதிகாரிகள் சீலேண்டிலிருந்து ராய் பேட்ஸ்சை அப்புறப்படுத்த எவ்வளவோ முயன்றனர். அவர் பிடிவாதமாக வெளியேற மறுத்தார். அதனால், இவ்வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றது. ஆனால், இந்த குட்டி துறைமுகம் இங்கிலாந்து நாட்டு கடல் எல்லைக்கு வெளியே இருப்பதால், வழக்கை நடத்த முடியாது என்று நீதிமன்றம் கூறி விட்டது.
இதன்பிறகே, ராய் பேட்ஸ் 1975-ல் சீலேண்டை தனி நாடாக அறிவித்தார். இந்த நாட்டுக்கென கொடி, தேசியக் கீதம், பணம், பாஸ்போர்ட் என்று ஒரு நாட்டில் என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அனைத்தையும் பேட்ஸ் அறிமுகப்படுத்தினார். ஒரு முறை ராய் பேட்ஸ் தன் குடும்பத்தாருடன் இங்கிலாந்து சென்றிருந்த போது, ஜெர்மனி, போர்ச்சுகல் கொள்ளையர்கள் இந்நாட்டை ஆக்கிரமித்தனர். பேட்ஸ_ம், அவரது மகன் மைக்கேலும் அவர்களுடன் போரிட்டு இந்நாட்டை மீட்டனர். பிரிட்டன் அரசு 1987 ல் கடல் எல்லைப் பரப்பை 22 கிலோ மீட்டராக அதிகரித்து, சீலேண்டை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயன்றது. ஆனாலும் முடியவில்லை.
சீலேண்டின் இளவரசராக தன்னை அறிவித்துக் கொண்ட ராய் பேட்ஸ், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். தற்போது இக்குட்டி நாட்டிற்கு பேட்ஸின் மகன் மைக்கேல் இளவரசராக பதவி வகிக்கிறார். இவர்களது குடும்பத்தினர் உட்பட 50 பேர் இக்குட்டி நாட்டில் வசிக்கின்றனர். இந்த கட்டடத்தில் 30 அறைகள் உள்ளன. இந்த நாட்டுக்கு வெளி நாட்டுக்காரர்கள் யாராவது வர வேண்டுமென்றால் பாஸ்போர்ட், விசா எடுத்து வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2002ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி சீலேண்டின் மக்கள் தொகை எண்ணிக்கை 27 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டின் பெறுமதி 2017 ஆண்டில் $900 Million. இது எங்கள் நித்தியானந்தாவின் கைலாசம் நாட்டை நினைவுபடுத்தினால் நாம் பொறுப்பு அல்ல.
நன்றி: தம்பி நந்தன் பிரான்ஸ்.