சூரியனை விடப் பெரிய நட்சத்திரம் உண்டா…?

Dr.நிரோஷன். தில்லைநாதன்.யேர்மனி

இந்த பிரபஞ்சத்தில் எத்தனையோ நட்சத்திரங்கள் உள்ளன, ஆனால் இவற்றில் எந்த நட்சத்திரம் மிகவும் பெரிதானது என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தக் கேள்விக்குப் பதிலை அறிவதற்கு முன்பு நமது பூமியைச் சற்று உத்துப் பார்ப்போம். நமது பூமியின் விட்டம் (diameter) சுமார் 12.742 மஅ ஆகும். பூமத்திய ரேகையின் (equator) நீளம் சுமார் 40.075 மஅ ஆகும். இதன் அடிப்படையில் நமது பூமியின் அளவு உங்களுக்கு நன்றாகவே கற்பனை செய்துகொள்ள முடியும். அது மட்டும் இல்லாமல் இனி நான் உங்களுக்குக் கூறவிருக்கும் அளவுகளைப் புரிந்துகொள்ளவும் உதவும். நமக்கு மிகவும் அண்மையில் உள்ள மிகப் பெரிய கிரகம் வியாழன் ஆகும். இதன் விட்டம் நமது பூமியை விட 11 மடங்கும், நிறை (mass) 317 மடங்கும் ஆகும்.

நட்சத்திரங்களில் மிகவும் சிறிய நட்சத்திரங்களை செங்குறுமீன் (red dwarf) என்று அழைப்பார்கள். இவை வியாழனை விட 100 மடங்கு அதிகமான நிறை கொண்டவை ஆகும். இவ்வாறு நமது சூரியக் குடும்பத்துக்கு அருகில் இருக்கும் ஒரு செங்குறுமீனின் பெயர் Barnard’s Star ஆகும். இதன் ஒளிரும் தன்மை மிகவும் குறைவாக உள்ளதால், இந்த நட்சத்திரத்தைத் தொலைநோக்கியின் உதவியுடன் மட்டுமே காணமுடியும். இந்த வகை நட்சத்திரங்களைத் தொடர்ந்து நமது சூரியன் போன்ற நட்சத்திரங்களைக் காணலாம். சூரியன் மட்டுமே இந்தச் சூரியக் குடும்பத்தின் 99இ86மூ நிறையை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது. Barnard’s Star இன் எடையை விட நமது சூரியன் சுமார் 7 மடங்கு அதிகமான எடையைக் கொண்டது மட்டும் இல்லாமல் 300 மடங்கு அதிகமான ஒளிரும் தன்மையையும் கொண்டிருக்கிறது.

இரவில் வானை நோக்கிப் பார்க்கும் போது மிகவும் பிரகாசமாக ஒளிரும் நட்சத்திரத்தின் பெயர் தான் Sirius A. இதன் நிறை இரண்டு மடங்கு மற்றும் ஆரம் (radius) 1,7 மடங்கு சூரியனை விட அதிகமானது ஆகும். இதைத் தவிர்த்து நமது சூரியனை விட இந்த நட்சத்திரம் 25 மடங்கு பிரகாசமாக ஒளிரும். Beta Centauri என்று அழைக்கப்படும் நட்சத்திரம் 13 மடங்கு பெரிதாகவும், நிறையில் 10 மடங்கு அதிகமாகவும், ஒளிரும் தன்மையில் 20.000 மடங்கு அதிகமாகவும் நமது சூரியனை விட உள்ளது. ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் அதிக நிறையைக் கொண்ட நட்சத்திரத்தின் பெயர் R136a1 ஆகும். இதன் நிறை சுமார் 315 சூரியன்களுக்குச் சமமாக இருப்பது மட்டுமில்லாமல், நமது சூரியனை விட 9.000.000 மடங்கு பிரகாசமாக ஒளிரும் தன்மையைக் கொண்டதாகும்.

Pistol Star என்று அழைக்கப்படும் நட்சத்திரம் சூரியனை விட 25 மடங்கு நிறை மற்றும் 300 மடங்கு விட்டம் கொண்டதாகும். இவ்வாறான நட்சத்திரங்களை blue hypergiant என்றும் ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இதைத் தொடர்ந்து yellow hypergiants என்று அழைக்கப்படும் நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றில் Rho Cassiopeiae என்று அழைக்கப்படும் நட்சத்திரம் சூரியனை விட 40 மடங்கு நிறை மற்றும் 500 மடங்கு விட்டம் அதிகமாகக் கொண்டதாகும். இவற்றை விட மிகவும் பெரிய நட்சத்திரம் என்றால் அது சநன hலிநசபயைவெள என்று அழைக்கப்படும் நட்சத்திர வகை தான். இந்த வகையைச் சேர்ந்த நட்சத்திரங்கள் தான் நமது பிரபஞ்சத்திலே மிகவும் பெரிய நட்சத்திரமாக இருக்கக் கூடும் என்று நம்பப்படுகின்றது. தற்போதைய ஆராய்ச்சியாளர்களின் கணிப்புப் படி Stephenson 2-18 என்று அழைக்கப்படும் நட்சத்திரம் இந்தப் பிரபஞ்சத்தின் பெரிய நட்சத்திரமாகக் கருதப்படுகிறது. இது சூரியனை விட 2.150 மடங்கு பெரிதானது மட்டுமில்லாமல் 500.000 மடங்கு அதிகமான ஒளிரும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானம் சொல்கிறது. தற்போது உள்ள மிகவும் வேகமான விமானம் ஒன்றில் இந்த நட்சத்திரத்தைச் சுற்றி வரவேண்டுமென்றால், சுமார் 500 வருடங்கள் கடந்துவிடும்.

இப்படிப் பெரிதான நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது மனிதர்களாகிய நாம் கண்ணுக்குத் தெரியாத அளவிற்குச் சிறிதாகி விடுவோம். இதை நினைத்தால் சுவாரசியமாக இல்லையா…?

1,694 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *