இது ஒரு சுளகு மாண்மியம்

  • Dr. T. கோபிஷங்கர் (யாழ்ப்பாணம் அரச வைத்தியசாலை)-இலங்கை

வரலாற்று காலத்தில் நெற் களத்தில் நெல்லை தூற்றிக்கொண்டிருந்த தமிழ் பெண் ஒருத்தியை தாக்க புலிவந்த போது, அதை தனது கையில் வைத்திருந்த முறத்தால் அடித்து விரட்டியவள் வீரத் தமிழ்பெண் என வரலாற்று கதையில் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

நல்லூர் திரு விழா shopping list இல் வருசா வருசம் தவறாம வாங்கிற சாமாங்களில அமமாக்குழலோட,பனம் பொருள் கூட்டுத்தாபனம் வைக்கிற exhibition and sale ல் சுளகும் கட்டாயம் இருக்கும் .

சுளகில பிடைக்கறதும் ஒரு கலைதான். உயரத்தில கதிரையில் இருந்து கொண்டு பிடைக்க ஏலாது. சப்பாணி கட்டிக்கொண்டு இருந்தால் சுளகின்டை நுனியை அடைவது கஷ்டம். ஒரு காலை மடக்கி மற்ற காலை நீட்டி இருந்தா தான் பிடைக்கறது சுலபம். நீட்டின காலுக்கு பக்கத்தில பிடைக்க எடுக்கிற பெட்டியும் மடக்கின காலுக்கு பக்கத்தில பிடைச்சு கொட்டிற பெட்டியும் வைக்கோணும்.

பொதுவா முன்று நாலு சுளகு வீட்டை இருக்கும். நெல்லுப்பிடைக்க ஒண்டு, புட்டுக்கு ஒண்டு மற்றது மரக்கறி அரிஞ்சு இல்லாட்டி முருங்கை இலை அல்லது கீரை புடுங்கிப் போட. எப்பவும் புதுசு ஒண்டும் கையிருப்பில் இருக்கும்.

பிடைத்தல், கொழித்தல் அசைத்தல் எண்டு 3 பநயச இருக்கு, தேவைக்கு ஏத்த மாதிரி பாவிக்க வேணும். அரிசி பிடைக்க வழி பநயச ம். புட்டுக்கு second gear ம் பயறு உழுந்துக்கு second gearfirst gear ம் பாவிக்கிறது.

சுளகை கண்டு பிடிச்சவன் ஒரு Genius. சமையலில் சுளகின் வகிபாகம் inevitable.
சுளகின் design gb heavy ஆனது அகண்ட அடிப்பக்கத்திலும் உதிர்நத light weight substance நுனிக்கு கிட்டவும் நிக்கும் .

இரண்டு கையாலேம் சுளகை பிடிச்சு,பெரு விரலை விளிம்பிலை வைச்சு நாலு விரலை வெளியில பிடிச்சு சுளகை தட்டி airல தூக்கி எறிஞ்சிட்டு சுளகை அப்பிடியே ஒரு ஆட்டு ஆட்டி புட்டை கொழிச்சு எடுக்கிறது ஒரு இலகுவான காரியமல்ல.

குத்தின நெல் -அரிசி பிடைக்கேக்க கையை கொஞ்சம் இறுக்கிப் பிடிக்கோணும் கொஞ்சம் கூட உயர எறிய வேணும் ஆனால் புட்டெண்டால் லூசாப்பிடிக்க வேணும். vertical movement(செங்குத்தாக) ஐயும் (கிடைமட்ட இயக்கம்) horizontal movement ஐயும் சரியா ஒருங்கிணைக்க (உழழசனiயெவந) பண்ண வேண்டும் மெல்ல கொழிக்க பாகுபடுத்தல் (coordinate) சரியா வரும் .

பிடைக்கறது மட்டும் இல்லை பிடைச்சாப்பிறகு அதை கொட்டிறதுக்கும் ஒரு முறை இருக்கு. சுளகில இருந்து
நுனியால கொட்டிற குருணல்கள் அகலமான பெட்டீல நேர போட வேணும், இல்லாட்டி வெளியில கொட்டும் ஆனால்;,
பாரமன முழுப்பயறு அரிசியை அகண்ட அடியின்டை மூலைப்பக்கத்தால போட வேணும். கடைசியல கொஞ்சம் வராது, அதை எத்திப் போட வேணும்.
புட்டுக்கு பாவிக்கிற சுளகை உடனடியா துப்பரவு பண்ணாட்டி சரி… லேசில போகாது. நான் ஒருக்கா நிகத்தால விராண்டப்போய் பட்ட பாடு … நாள்பட்ட படை படிஞ்ச பனை ஓலை பெட்டி சுளகுகளை ஊற வைச்சுத்தான் கழுவோணும் .
குசினீக்குள்ள கம்பிகள் உயர அடிச்சு நுனியை வளைச்சு அதில தான் ஒழுங்கு வரிசையில் சுளகுகள், பெட்டிகள் எல்லாம் கொழுவி இருக்கும்.
இன்னும் இந்த சுளகு பின்னிறது எப்படி எண்டு விளங்கவில்லை, நல்ல ஒரு மொக்கு எஞ்சினியரைக் கேட்டாத்தான் தெளிவா விளங்ஙகாத மாதிரிச் சொல்வான்.

சுளகில கொளிக்கிறதும் ஓரு சுருதி பிசகாத தாளத்தோட செய்யிற வேலை. இதுக்கு ஏ.ஆர்.ரகுமானோ,அல்லது இளையராஜாவோ இசையமைத்ததாகத் தெரியேல்லை.(மீண்டும் கோகிலா படத்தில், சின்னஞ்சிறுவயதில்;,மேஜர் சந்திரகாந் படத்தில், ஒரு நாள் யாரோ இந்தப்பாடம் சொல்லித் தந்தாரோ இந்த இரண்டு பாடல்களிலும் சுளகு இசை இருக்கலாம்.பார்த்து சொல்லுங்கள்)
எப்பிடியும் வருசத்துக்கு ரெண்டு சுளகு வேணும். புது மாப்பிளை வரவேற்பு புட்டோட தான், கொஞ்சம் ஒலை பிஞ்சு மேற்பரப்புக் கடினமாக (surface rough) ஆக அவர் நெல்லுப்பிடைக்க போயிடிவார். ஓட்டை வந்தோண்ண எங்கடை அம்மாமார் எறிய மனமில்லாமல் அரிஞ்ச மரக்கறி போட எண்டு குறைந்தபட்சம் பாவிப்பினம்.
கடைசில கஞ்சல் குப்பை கல்லு எண்டு எல்லாத்தையும் சமந்த சுளகு பங்பர் bunker வெட்டும் போது மண்ணையும் சுமந்து எமது போராட்டத்திலும் பங்கு வகித்தது.
சங்க காலத்ததில் இருந்து நாம் இதை அறிந்திருந்தும் இந்த சுளகு பற்றிய ஆராய்ச்சிகள் பெரிதாக இல்லை.
கோயிலில அன்னதானத்திற்கு சமைக்கேக்க அடுப்ப எரிய விசுக்கவும், சோறு எடுத்து படைக்கவும், பந்தியில அப்பளம் பொரியல் கொண்டு போக எண்டு சுளகின் பயன்கள் அதிகம்.

பிள்ளை பிறந்து துடக்கு கழிக்கேக்க சுளகில பரம்பரை கூறைச்சீலையை போட்டு அதில பிள்ளையை வளத்தி தான் சூரியனுக்கு காட்டிறது எமது பாரம்பரியமாகவும் உள்ளது.
இதை வாச்சிட்டு உடனடியா ஊரில இருந்து ஒண்டை வாங்கி மனிசிக்கு குடுத்தால் வரும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.

1,185 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *