‘ஈழம்’ தொடர்பான படங்களில் நடிக்க மாட்டேன் …லொஸ்லியா

இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் செய்தி வாசிப்பாளராக கொஞ்சும் தமிழ் பேசி, தமிழகத்தில் ‘பிக் பொஸ்’ மூலம் தமிழ் மக்களை கவர்ந்து, பார்ப்பவர்கள் எல்லாம் ‘லவ்லி’ என சொல்லும் நடிகை லொஸ்லியாவுடன் ஒரு பேட்டி…
நடிகையாக கமரா முன் நின்ற அனுபவம்?

முதலில் பதற்றமாக இருந்தேன். ‘பிரண்ட்ஷிப்’ பட இயக்குநர்கள் ஜான், ஷாம் ஈஸியா நடிக்க வைத்தனர். கொரோனாவுக்கு பின் அடுத்தடுத்து படங்கள் வெளியாவதால் ஆர்வமாக உள்ளேன்.

‘பிரண்ட்ஷிப்’ கதாப்பாத்திரம் என்ன?

ஜாலியான கல்லூரி மாணவி கதாப்பாத்திரம்.ஆண்கள் மத்தியில் ஒரு பெண்ணை சமூகம் எப்படி பார்க்கிறது என்பது கதை.
காதல், வில்லன் என வழக்கமான கதைக்களம் தானா?
இல்லை, நட்புக்குள் இருக்கும் காதலை மட்டும் பேசும் படம், இந்த மாதிரி நட்பு வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன் . அவர்கள் கடைசி வரை நட்பாக இருக்கிறார்கள். படத்திலும் அதைத் தான் அழகாக காட்டியிருக்கிறார்கள்
லொஸ்லியாவின் நண்பர்கள் வட்டம் எப்படி ?

இலங்கையில் வேலை பார்த்த இடத்தில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் . அவர்களால் தான் இந்தியா வந்தேன். எது சரி, எது தப்பு என ஆலோசிக்க குறைந்தளவு நட்பு வட்டம் தான் எனக்கு இருக்கிறது

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் நடித்தது?

இந்த படத்தில் ஜோடி இல்லை, சதீஷ், படவா கோபி, பாலசரவணன் எல்லாருக்கும் முக்கியத்துவம் இருக்கும், ஹர்பஜன்சிங்குடன் நடிக்கப் போகிறோம் என பயந்தேன், ஆனால் எளிமையாக, ரொம்ப சாதாரணமாக பழகினார். அவருக்கு சதீஷ் தமிழ் வார்த்தைகள் கற்றுக் கொடுத்து பேசினார்.

இலங்கையில் செய்தி வாசிப்பு, இந்தியாவில் நடிப்பு?

பெரிய விஷயம்… பல சோதனைகளுக்கு பின் இந்தியா வந்தேன். இப்ப நினைத்துப் பார்த்தால் கூட பிரமிப்பாக உள்ளது. பிக்பொஸ் , சினிமா என நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கு.

‘பிரெண்ட்ஷிப்’ படத்தில் டான்ஸ், நடிப்பு இலகுவாக இருந்ததா?

டான்ஸ் ரொம்ப பிடிக்கும். படத்தில் 100 சதவீதம் நல்லா டான்ஸ் ஆடியுள்ளேன். என்னால் முடிந்த அளவு சிறப்பாக நடித்துள்ளேன். ஆனால், படத்தை மக்கள் முழுமையாக பார்த்து கருத்து கூறிய பிறகு தான் என் மேல் எனக்கு நம்பிக்கை வரும்.

ஈழம் தொடர்பான திரைப்படங்களில் நடிப்பீர்களா?

நான் சென்னையில் தான் வசிக்கிறேன், என் சொந்தங்கள் இன்னும் இலங்கையில் தான் இருக்கின்றனர். இலங்கையில் பிறந்து வளர்ந்ததால் அங்கே என்ன நடந்தது என எனக்குத் தெரியும். அதனால் ஈழம் தொடர்பான கதைகளில் நடிக்க மாட்டேன், சிலர் இதை ஒரு படமாகத் தான் நாங்கள்எடுத்திருக்கிறோம் என சொல்கிறார்கள். என்னை பொறுத்தவரையில் அங்கே நிகழ்ந்தது, பார்த்த விஷயங்கள் எல்லாமே மிக கொடூரமானவை. அப்படியான விடயங்கள் வெளியிடப்படாத படங்களில் என்னால் நடிக்கவே முடியாது.

1,116 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *