Challenge! சில தீவிர முட்டாள்தனமான விபரீதமான சவால்கள்!

-பிரியா இராமநாதன்-இலங்கை.

Challenge! நாமெல்லாம் சிறுவயது தொடங்கி இப்போதுவரை யாரிடமேனும் ஏதேனும் சிறுசிறு Challenge என்கிற சவால்களை விட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம் . ஆனால் இதெல்லாம் என்ன ? பாருங்கள் எங்களுடைய
Challengeகளை என்கிறவகையில் இப்போதெல்லாம் சமூகவலைத்தளங்களில் பல்வேறுவகையான Challengeகள் புதுசுபுதுசாக தினுசுதினுஸாக முளைத்துக்கொண்டிருக்கின்றன. அதிலும் Challenge என்கிறபெயரில் முட்டாள் தனமான மனிதநேயமற்ற பலவிடையங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. சில வருடங்களுக்குமுன் வைரலான momo Challenge முதல் kiki Challenge போன்றவற்றுடன் சமூகவலைத்தளங்களில் இடம்பெற்ற சில தீவிர முட்டாள் தனமான விபரீதமான Challengeகள் பற்றியே இன்று நாம் பார்க்கப்போகின்றோம்.

“டிboiling water Challenge”! பெயரிலேயே இதன் விபரீதம் சொல்லப்பட்டுவிடுகிறது. சுடச்சுட கொதிநீரை ஒருவர்மீது ஊற்றி, அவர் அலறும் தருணத்தை இன்ஸ்டகிராமில் புகைப்படமாக போடுவதே இது. எப்போது இது ட்ரெண்ட் ஆனது ? ice bucket challenge என்கிறவொரு Challenge மருத்துவ நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டு ஒருவரை ஒருவர் nominate செய்யப்பட்டு உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆனது. ALS என்ற நரம்பு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்காக நிதி திரட்டவும் சமூக வலைத்தளங்களில் வி.ஐ.பிக்களே இந்த விளையாட்டைப் பிரபலமாக் கினார்கள். ஒபாமா, பில்கேட்ஸ் முதல் சல்மான்கான் ஷாருக்கான் என ஏராளமான celebrities இதனை தொடர்ந்தனர். ice bucket Challenge என்றவொன்றினை பிரதிசெய்தே boiling water Challenge என்றவொன்று சமூகவலைத்தளத்தினுள் நுழைந்தது.

அமெரிக்காவில் ஒரு பெண் கார் துடைத்துக்கொண்டிருக்கும் தன்னுடைய தம்பிமீது கொதிக்கும் நீரை ஊற்றி அவன் துடிதுடிப்பதை ஒரு வீடியோவாக எடுத்து, இதேபோல் நீங்கள் யாருக்காவது செய்ததுண்டா? என ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த Challenge தொடர்பான வீடியோக்கள் இதுவரையில் சுமார் நாற்பதாயிரம் வீடியோக்கள் யூடியூபில் சுற்றிக்கொண்டிருக்கின்றன.

அடுத்த Challenge என்றால் “neknominate Challenge” சொல்லலாம். முழு பீர் போத்தலை மூச்சுவிடாமல் ஒரே மடக்கில் குடிக்கவேண்டும் என்பதுதான் இது. 2016 இல் லண்டனில் ஆரம்பித்து சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. ஒரு போத்தல் விஸ்க்கி ஒரு போதல் வயின் ஒருபோத்தல் பீர் என மூன்றையும் ஒன்றாக கலந்து மூச்சுவிடாமல் குடிக்கவேண்டும் என ஒருவரை ஒருவர் நாமினேட் செய்யப்பட்ட இந்த Challenge எங்கே விபரீதமானது என்றால், ஒருவர் உயிருடன் இருக்கும் இரண்டு கோல்ட் பிஸ்களை (gold fish) அந்த போத்தலினுள் இட்டு அப்படியே குடிக்க ஆரம்பிக்க, இன்னொருவர் இறந்துபோன எலியை போத்தலினுள் இட்டு குடிக்க, அடுத்தவர் தவளை என சங்கிலித்தொடர் வேகமெடுக்க பலர் மூச்சுத்திணறி மற்றும் அதிகப்படியான மது போன்றவையினால் மரணத்தை தழுவிக்கொண்டனர்.

                    அடுத்து “choking game Challenge”!  நம்மால் எவ்வளவுநேரம் மூச்சை தம் கட்டவியலும் எனும் Challenge. ஆற்றுக்குள்ளோ நீச்சல் தடாகத்தினுள்ளோ இப்படி யாரும்  செய்தால்  அது சகஜம். ஆனால்,ஒரு மூடிய காற்றுப்புகாத அறையினுள் மூக்கை முற்றாக மூடிக்கொள்ளவேண்டும் அப்படி அவர்களால் எவ்வளவுநேரம் இருக்கவியலுகிறது என்பதை ஒரு வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் விடப்பட்டது. எனினும் ஆக்சிஜன் நம்முடைய மூளைக்கு போவது நிறுத்தப்படும்போது மூளையின் செல்கள் பாதிப்படையும். நம் உடலில் உள்ள மற்றைய செல்கள் எல்லாமும் இயற்கையாக Regenerate ஆகும் ஆனால் மூளையின் செல்கள் அப்படியல்ல. அப்புறம் என்ன நாம் மேல் லோகத்திற்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு கிளம்பவேண்டியதுதான்! இதுபோன்றதொரு Challenge தான் “helium balloon Challenge“.  ஹீலியத்தினால் நிரப்பப்பட்ட பலூன் நன்றாக உயரே பறக்கும், அதே ஹீலியத்தை நாம் சுவாசித்தால் என்னவாகும்? செத்து சிவலோகம் போகவேண்டியதுதான். ஹீலியம் பலூனை  ஊதும்போது,  நம்முடைய குரல்வளம்மாறி,கிட்டத்தட்ட கார்ட்டூன் கதாபாத்திரமான டொனால் டக்கின் குரல்போல் மாறிவிடும். ஒரு மாதிரியாக மாறும் குரல்வளத்தினை கேற்பதற்க்காகவே  ஏகப்பட்டபேர் இந்த Challengeனை முயற்சித்தனர் .  

                 அடுத்து “the fire Challenge“, நீச்சல் தடாகம் அல்லது ஏதேனும் ஓர் நீர் நிலையின் அருகே நின்றுகொண்டு,  மண்ணெண்ணெய் பெட்ரோல் போன்ற திரவங்களை உடலில் தெளித்துக்கொண்டு நம்மீது நாமே தீயை வைத்துக்கொள்வது. சிலவினாடிகளுக்குள் அந்த திரில்லினை புகைப்படமாக எடுத்துக்கொண்டு நீருக்குள் குதித்துவிடவேண்டும்.  

இவையெல்லாமும் நாம் வாழும் உலகில் நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கின்ற சில விபரீதமான உhயடடயபெநகள் எனலாம், இவற்றைப்போலவே சில லூசுத்தனமான Challengeகளும் இணையத்தில் சுற்றிக்கொண்டுதான் இருக் கின்றன. அதாவது “banana and sprite Challenge. வாழைப்பழமும் ளிசவைந டும் ஒன்றுடன் ஓன்று சேராதவையாம். அதனால் இரண்டு பெரிய வாழைப்பழங்களை உண்டுவிட்டு ளிசவைந குடித்தால் வாந்தி வரும். அப்படி வாந்தியெடுப்பதை வீடியோவாக எடுத்து “ஹய்யா.. நான் வாந்தியெடுக்கிறேன் ” என டைட்டில் போட்டு இணையத்தில் பதிவேற்றுவதுதான் இந்த Challenge!

பெண்களின் தொப்புளில் ஒரு பட்டனையோ தொங்கட்டானையோ மாட்டிவைத்துக்கொண்டு பாருங்கள் நான் எவ்வளவு க்ளீனாக தொப்புளை வைத்திருக்கிறேன் எனக்காட்டும் Challenge, இரண்டு மார்புகளுக்கிடையே கோக்கோகோலா போத்தலை நிற்கவைத்து புகைப்படம் போடும் challenge உற்பட அண்மையில் சமூக வலைத்தளத்தில் புதிய வகை சவால் ஒன்று ட்ரெண்ட்ஆகி வருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முன் ‘டென்(10) இயர்ஸ் சேலஞ்ச்’, தலைகீழாக நின்றபடி டி-ஷர்ட் அணியும் டி-ஷர்ட் சேலஞ் ட்ரெண்டாகி வந்தது குறிப்பிடத்தக்கது. பலரும் அந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டு தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.தற்போது ‘cockroach Challenge’ என்ற வித்தியாசமான சவால் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

கரப்பான்பூச்சியை முகத்தில் ஓடவிட்டு செல்ஃபி எடுப்பதுதான், இந்த ‘காக்ரோச் சேலஞ்ச்’. கரப்பான்பூச்சி என்றாலே பலருக்கும் பயம். அந்தப் பூச்சியை பார்த்தாலே, பலருக்கு அருவருப்பும், பயமும் தொற்றிக்கொள்ளும். அதை பார்த்ததும் பல அடி தூரம் ஓடி ஒளிந்து கொள்பவர்கள் உண்டு. அந்தப் பயத்தை, முறியடிக்கவே இந்தச் சவால் எனக் கருதி பலரும் இதை ஏற்றுக்கொண்டு தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு  வருகின்றனர். இந்த ‘காக்ரோச் சேலஞ்’சை முதன்முதலில் தொடங்கியவர் பர்மாவைச் சேர்ந்த அலெக்சன் என்ற இளைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ‘ஏ4 சேலஞ்ச்’! அதுவும் சமூகவலைத்தளங்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் கொண்ட சீனாவில் உருவாகியுள்ளமை இதில் இன்னும் சுவாரஸ்யம்!   ஏ4 அளவுள்ள ஒரு பேப்பரை எடுத்து வயிற்றில் வைத்துக் கொள்ள வேண்டும்.ஏ4 காகிதம் உங்கள் வயிற்றை மறைத்தால் நீங்கள் ஃபிட்டாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லாவிட்டால், நீங்கள் எடையைக் குறைக்க வேண்டும் என்பதுதான் இந்த விளையாட்டு. ஏ4 அளவுக்குள் அடங்கும் சிற்றிடை கொண்டவர்கள், ஐ யஅ ளணைந ளஅயடடநச வாயn யு4 என்று செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் தட்டுவதும், மற்றவர்கள் அதற்காக மெனக்கெடுவதும்தான் டிரெண்ட். ‘பருமன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் சேலஞ்ச்’ என்று இதற்கு ஆதரவும், ‘சுத்த பைத்தியக்காரத்தனம்’ என்று இன்னொரு பக்கம் எதிர்ப்பும் கிளம்பியிருந்தது .

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை மையமாகக் கொண்டு புதிய சேலஞ்ச் ஒன்று உருவாகியுள்ளது. அதில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் வரும் நடிகை நயன்தாராவைப் போல மூக்குத்தி அணிந்து கொண்டு அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும் எனபதுதான் சேலஞ்ச்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பொழுதுபோக்கிற்கு வழி தெரியாது வீட்டிலேயே அனைவரும் முடங்கி விட்டனர். இதனால் பொழுதைக் கழிப்பதற்கு ஏராளமான சேலஞ்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர் . இதில் நடிகர், நடிகைகளும் கலந்து கொள்ள சில சேலஞ்கள் ஏகப்பட்ட வரவேற்பையும் பெற்றுவிடுகிறது . எதையாவது செய்து ட்ரெண்டாகிவிடவேண்டும் என்கிற உளவியலே இம்மாதிரியான சேலஞ்களுக்கு அடிப்படை என்றாலும் மிகையில்லை . எது எப்படியோ விளையாட்டு விபரீதமாகிவிடக்கூடாது என்கிற சொல்லாடலே இவ்வாறான சேலஞ்களுக்கும் பொருந்தக்கூடியது போலும் !

870 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *