பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2021
அனைத்துலக தமிழ்க் கலை நிறுவகமும் பாரதி கலைக்கூடமும் இணைந்து நடாத்திய பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 16.10.2021 சனிக்கிழமை யேர்மனி ஆலன் நகரத்தில் மிகச் சிறப்பாக மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் நடந்தேறியது. இத்தேர்வில் யேர்மனி தென்பகுதியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் மிகத்திறமையாக தங்கள் ஆற்றுகையை வெளிப்படுத்தினர்.
இத்தேர்வில் நடன ஆசிரியர் பரதக்கலைவித்தகர் திருமதி. மிதிலா விஜித் அவர்களின் மாணவி திருமதி. சர்மிளா தர்சன் அவர்களும் நாட்டிய முதுகலைமானி திருமதி. அற்புதராணி கிருபராஜ் அவர்களின் மாணவி திருமதி. துர்கா ராமேஸ் அவர்களும் யேர்மன் கலைபண்பாட்டுக்கழக நடன ஆசிரியர் திருமதி வசுந்தரா சிவசோதி(B.A Diploma in Dance and Education) அவர்களிடமும், நடன ஆசிரியர் பரதக்கலைவித்தகர் நாட்டிய கலாரத்தினம் திருமதி மிதிலா விஜித் அவர்களிடமும் பயின்ற, இவர்களின் மாணவியான திருமதி. நிவாஷினி வீரேஸ்வரன் அவர்களும் தேர்வில் கலந்துகொண்டனர்.
அணிசேர் கலைஞர்களாக: குரல் இசை. மதுரக்குரலோன், திரு.எஸ்.கண்ணன் மிருதங்கம்.திரு பிரசாந்த் பிரணவநாதன், வயலின். திரு நீருஜன் செகசோதி.
நடுவர்களாக:முனைவர் மதிவதனி சுதாகரன்,முதுகலைமானி ஞானசுந்தரி வாசன்,முதுகலைமானி அனுசா சற்குணநாதன். அவர்களும் கலந்து சிறப்பித்தனர். Foto: www.Konessfotos.de
1,082 total views, 3 views today