என் மகனுக்கு எனது ஆறாவது கவிதை.

வாழ்க்கையில்
ஒரு நாள்
காதலி
யாரோவாகி
நகர்ந்துவிடுவாள்.
ஒரு நாள்
சினேகிதி
நெஞ்சைக் குடையும்
வஸ்துவாகிவிடுவாள்
ஒரு நாள்
ஆசிரியன்
மாணவனை
சபித்துச் செல்வான்.
ஒரு நாள்
மனைவி
வேறு ஒருத்தியாக
வாழத் தொடங்குவாள்
ஒரு நாள்
சில உறவு
தூரத்துப் புள்ளிகளாகி
மறைந்துவிடும்
ஒரு நாள்
நலம்விரும்பி
பார்க்கவே விரும்பா
மனிதராகிவிடுவார்.
ஒரு நாள்
ஒரு முன்மாதிரி
வெறுப்பின் உச்சமாகத்
தெரியத் தொடங்குவார்
ஒரு நாள்
மாணவன்
குருவையே
விமர்சிக்கத் தொடங்குவான்.
ஏதோ ஒரு நாளில் தான்
அன்புகள்
பிரம்மாஸ்திரங்களைப் போல
மாறி விடுகிறன்றன.
நீ கடவுளானால்
மட்டுமே
கடந்து செல்லல்
நிகழும்.
கருணை மட்டுமே
கடவுள்.
1,551 total views, 4 views today