பவள விழாக்காணும் ஆன்மீகத்தென்றல்.த.புவனேந்திரன்.
குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் பாசறையில் வளர்ந்த ஒரு சாதாரண மனிதன். இன்று தனது நேர்த்தியான செயல்களாலும், சமூகசேவைகளாலும் தமிழர் மத்தியில் நன்கு அறியப்பட்டவராகத் திகழ்கின்றார். ஆலயங்களில் இவர் தொண்டு பெரியது. தேவையான இடத்தில் (இலங்கை மட்டுமல்ல) உதவிகளைச் செய்வதில் இவர் சேவை அளப்பரியது. நாம் இலங்கைக்கோ அல்லது, இந்தியாவிற்கோ செல்வதாக இருந்தால் அப்பிள் பழமும் இனிப்புவகைகளும்; எடுத்துச் செல்வோம். ஆனால் இந்தமனிதர், காது கேட்காதவர்களுக்கு, கேட்கப் பொருத்தும் இயந்திரம், பாவித்த மூக்கு கண்ணாடி, என்று யேர்மனியில் சேகரித்த அனைத்தையும் எடுத்துச்சென்று தேவை யானவர்களுக்கு வழங்குவார்.
இன்று போல் சமூக ஊடகங்கள் இல்லாத காலத்தில் கடிதம் மூலம் உதவிகோருபவர்களுக்கு, தன்னால் இயன்றதை செய்து மகிழ்ந்தவர். அவர் சொந்தமில்லாத சொந்தங்களுக்கு கடிதம் எழுதி நலம் விசாரிப்பவர். தேவையான வர்களுக்கு உதவியும் புரிபவர். அக்கடிதங்கள் சிலவற்றை 2000 ம் ஆண்டு பார்த்தேன். அதன்பின் அவர் மீது எனக்கு மதிப்பு இரட்டிப்பானது. இவரது சேவை உணர்வு, என்னை மிகவும் கவர்ந்தது. வழிபாடு என்பது கோவிலில் நின்று இருகரம் கூப்பி வணங்குவது மட்டுமல்ல,உதவிக்கு கூப்பிட்டவர் குரலுக்கு முன்னிற்பவர்களாகவும் இருக்கவேண்டும். அப்போது தான் கூப்பிட்ட குரலுக்கு ஆண்டவனும், நம்மைத்தேடி வருவார் என்பதனை அறிந்து நடக்கும் மனிதர் அவர்.
அதனால்தான் அவரை வெற்றிமணியின் வெளியீடான சிவத்தமிழின் உதவி ஆசிரியராக,அணைத்துக்கொண்டேன். அகமும் புறமும் ஆலயம் அமைப்போம்; என்ற சிவத்தமிழின் வேண்டுதலுக்கும் துணைநிற்பவர்.
ஆன்மீகத்தென்றல் எனும் பட்டத்தை சிவத்தமிழ் விழாவில் கவிஞர் வி.கந்தவனம் ஐயா அவர்களின் கரங்களால் வழங்கி கௌரவித்தது. இன்று 08.11.2021 பவளவிழாக்காணும் ஆன்மீகத்தென்றலை வெற்றிமணியும் சிவத்தமிழும்; வாழ்த்தி மகிழ்கின்றது.
1,160 total views, 3 views today