5 வினாடிகளுக்குப் பூமியில் பிராணவாயு இல்லாமல் போனால் என்ன நடக்கும்?
மேகம் கறுக்கிது!! விமானம் விழுகிது.!!
தோலும் கறுக்குது அடா!!! எனப் பாட்டு எழுதுவோமா?
முதலில் ஆழமாக மூச்சை சுவாசியுங்கள்… அப்படிச் சுவாசிக்கும் போது எவ்வளவு சுகமாக இருக்கிறது அல்லவா? நமது பூமியின் காற்று மண்டலத்தின் வெறும் 21 மூ பகுதியை மட்டுமே பிராணவாயு என்று அழைக்கப்படும் ழஒலபநn நிரப்புகின்றது. இருந்தும் உலகில் உயிரினங்கள் தொடர்ந்து உயிர் வாழவும், பூமி சரியான முறையில் இயங்கவும் இது அத்தியாவசியத் தேவையாக அமைகின்றது. இது உங்களுக்கு நன்றாகவே தெரிந்து இருக்கும். இப்படி மிக மிக முக்கியமான இந்தப் பிராணவாயு, வெறும் ஐந்தே ஐந்து வினாடிகள் மட்டுமே நமது பூமியில் இல்லாமல் போனால் என்ன நடக்கும்? என்ன புரியவில்லையா? 1… 2… 3… 4… 5… இவ்வளவு நேரத்திற்குப் பிராணவாயு முற்றிலும் காணாமல் போனால், என்ன நடக்கும்? அட, இப்படிக் குறுகிய நேரத்தில் ஒன்றுமே நடக்காது என்று நீங்கள் நினைத்தால் கண்டிப்பாகத் தொடர்ந்து படியுங்கள்.
சுலபமாக 30 வினாடிகளுக்கு மேல் மூச்சை அடக்கி வைத்து இருக்கக் கூடிய நமக்கு, வெறும் ஐந்து வினாடிகளுக்கு மூச்சு கிடைக்காமல் போனால் தான் என்ன? வேண்டாம் அப்படி நடந்தால் நமக்கு மட்டுமில்லை நம்மைச் சுற்றி இருக்கும் அனைத்துக்கும் இதனால் பெரும் பிரச்சனை ஆரம்பித்து விடும். முதலாவதாகப் பூமியில் வாழும் உயிரினங்கள் அதிகளவிலான சூரிய கதிர்களின் தாக்கத்திற்கு ஆளாகி விடுகின்றன. இது வெறும் 5 வினாடிகள் என்றாலும் கூட, இதனால் பல நோய்களை, அதிலும் குறிப்பாகத் தோல் புற்று நோயை ஏற்பட வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. இரண்டாவதாக என்ன நடக்கும் தெரியுமா? நீங்கள் மேலே பார்க்கும் அந்த வானம் இருக்குதே, அதன் நீல நிறம் மங்கி, கருப்பாகி விடும். பகலாக இருந்தாலும் அது ஒரு கருமை நிறத்தில் தான் தெரியும். மூன்றாவதாக அந்த நேரத்தில் ஒருவருமே விமானத்தில் இருக்கவே கூடாது. வானை நோக்கி ஓடு பாதையிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் உடனடியாகக் கீழே விழுந்து நொறுங்கி விடும். அடுத்து நான்காவதாக உங்கள் உடலின் அழுத்தம் அந்த ஐந்து வினாடிகளில் மட்டுமே அதிகரித்துவிடும். இதன் விளைவாக நமது அகச்செவி உடனடியாக வெடித்து விடும்!
அட உயிரினங்களுக்கு மட்டும் தான் ஆபத்து என்று நினைத்தால், இல்லவே இல்லை! கட்டடங்களும் குறிப்பாக கான்கிரிட்டைக் கொண்டு கட்டப்பட்ட கட்டடங்கள் அனைத்துமே தூசியாக மாறி விடும். ஆறாவதாக என்ன நடக்கும் தெரியுமா? புவியில் வாழும் உயிரினங்களின் உயிரணுக்களில் ஹைட்ரஜனின் அளவு அதிகரித்து விடும். இதன் விளைவு பயங்கரம் நண்பர்களே, ஏனென்றால் அப்படி ஹைட்ரஜனின் அளவு அதிகரித்தால், அந்த உயிரணுக்கள் ஒரு கட்டத்துக்குப் பிறகு வெடித்துச் சிதறும். அதே வேளையில் ஏழாவதாகக் கடல் நீரைக் கூட விட்டு வைக்காது. ஏனென்றால், அந்த 5 வினாடிகளில் கடல் நீர் வற்றிவிடும்! அட, இது எல்லாமே போதாது என்று எட்டாவதாக நமது பூமி அதன் மேற்பரப்பில் எதையும் தாங்கி வைப்பதற்கான சக்தியையும் இழந்துவிடும்.
பிராணவாயு வெறும் 5 வினாடிகள் மட்டும் இல்லாமல் போனாலே இவ்வளவு விளைவுகளும் ஏற்படுகின்றதே, அப்படி என்றால் இந்த வாயு நாம் உயிர் வாழ எவ்வளவு அத்தியாவசியமானது என்பது உங்களுக்கு இப்போது நன்றாகவே புரிந்து இருக்கும், இல்லையா? எனவே இது நடக்கவே கூடாது என்று வேண்டி முதலில் ஆழமாக மூச்சை சுவாசியுங்கள்…
952 total views, 2 views today