நிழலாடும் நிஜங்கள்
-சிவகுமாரன்-யேர்மனி
(படங்கள். வெற்றிமணி. ஸ்பெயின். 09.10.2021)
நிழல்கள் நிஜயங்களுக்கு ஈடக கலைகளில் பல நேரங்களில் வெளிப்படுவது உண்டு. திரைப்படங்கள் குறிப்பாக கே. பாலச்சந்தர் பல படங்களில் இந்த நிழல்களை நிஜமாக்கி இருப்பார். நிஜம் பேசாத பலவற்றை நிழல்களை கையாண்டு பேசியும் இருப்பார்.
பரதநாட்டியம். குறிப்பாக நாட்டிய நாடகங்களில் இந்த நிழல்களின் பங்களிப்பு அபாரம். அடுத்து சித்திரமும் சிற்பமும் நிழல்கள் முலமே நிஜங்களை உருவாக்கும் பல இடங்கள் உண்டு.
சிற்பம் என்னும் போது பலர் பொம்மையும் சிற்பம் என கருதுபவர்கள் உண்டு. பொம்மைக்கு வர்ணத்தால் இல்லா இதழ்களையும் புருவங்களையும் தீட்டி காட்டலாம். உதாரணம் மணவறை பொம்மைகள்.
சிற்பம் நிழலை வீழ்த்துவதன் மூலம் உருவம் காட்டும் முறையினை சிற்பி சிறப்பாக கையாள்வார். சில இடங்களில் அருமையாக சிற்பி நிழல்கள் சிறப்பாக உருவம் காட்டினாலும் அருமை புரியாதவர்கள் பலர் இன்று கோபுரத்தில் அமைந்த சிற்பங்களுக்கும் பொம்மைக்கு வர்ணம் திட்டுவதுபோல் தீட்டி அதன் தரத்தை கொன்றுவிடுகிறார்கள்.
கோபுரச் சிற்பங்கள் சிறப்பாக அமைந்து இருந்தால் ஒரு வர்ணம் மட்டும் பூசலாம். முணவறை பொம்மைக்கு போல் கண் மூக்கு வாய் வரைதல் ஆகாது.
இங்கு ஸ்பெயின் நாட்டில் ஊழளவய டிசயஎய கடற்கரையில் அமைந்துள்ள ஸ்பானிய நடனம் (காதலனும் காதலியும்) ஆடுவதுபோல் அமைந்த இச்சிற்பம். செப்பு உலோக துண்டுகளை வெட்டி உருவாக்கியுள்ளார்கள். எந்த இடத்திலும் வர்ணம் பாவிக்க வில்லை.
காதலியின் இதழ்ச் சிரிப்பும், காதலனின் கனிவான பார்வையும், வெட்டுத்துண்டு உலகங்கள் மூலம் நிழல்கள் வரும்படி வெட்டி ஒட்டி உருவாக்கியுள்ளார்கள். அது மட்டுமன்றி அசையும் தன்மையும் இந்த நிழல்கள் ஏற்படுத்துவதை காணமுடிந்தது. இச்சிற்பம் நிழலால் ஆன நிஜங்களாக ஆடுகின்றன.
1,066 total views, 2 views today