விஜய், தனுஷிக்கு அடுத்து டாக்டர்
நடிகர் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் இந்த வருடம் அதிகம் வசூலித்த படங்களில் 3 ஆம் இடத்தில் இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் திரைப்படம் கடந்த 1 ஆம் திகதி வெளியாகி நல்ல வரவேற்பைப்பெற்றது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் வசூலைப் பொறுத்தவரை இந்த வருடத்தில் அதிகம் வசூலித்த படங்களில் டாக்டர் திரைப்படம் மூன்றாவது இடத்தில் இருப்பதாககூறப்படுகிறது. முதல் இரு இடங்களில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் மற்றும் தனுஷின் கர்ணன் படமும் உள்ளன.
தீபாவளிக்கு 5 படங்கள்
தீபாவளி விருந்தாக ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஷால், ஆர்யாவின் எனிமி, சிம்புவின் மாநாடு, அருண் விஜய்யின் வா டீல் ஆகிய 4 படங்கள் தியேட்டர்களிலும், சூர்யாவின் ஜெய்பீம் ஓ.டி.டி, தளத்திலும் வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
3 இன் கலவையே ‘அண்ணாத்த’
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன . இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாகம் முத்து, படையப்பா ஸ்டைலில் குடும்ப பாசம் மற்றும் குடும்ப கலகலப்பு காட்சிகள் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.அதேபோல் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பாட்ஷா போல அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் விறுவிறுப்பாக இருக்கும் என்று தெரிகிறது எனவே முத்து, படையப்பா மற்றும் பாட்சாவின் ஒட்டுமொத்த கலவைதான் அண்ணாத்த திரைப்படம் என்று கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பாலா – சூர்யா இணைகிறார்களா!
டைரக்டர் பாலா மீண்டும் படம் இயக்க போவதாகவும், இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்க உள்ளதாகவும் சமீபத்தில் கூறப்பட்டது. இந்த படத்தின் ஹீரோவாக அதர்வா நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. முதலில் இந்த படத்தில் சூர்யா, சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பிறகு அதர்வாவிற்கு பதில் சூர்யாவையே ஹீரோவாக நடிக்க வைக்க பாலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் இது உறுதியாகவில்லையாம ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்க போவதாகவும் சமீபத்தில் சில தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போதைய தகவலின் படி ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் இல்லையாம். அவருக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க போகிறாராம். பெயரிடப்படாத இந்த படம்; 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கப்பட உள்ளதாம். ஆரம்ப காலத்தில் பாலா இயக்கிய படங்கள் தான் இன்று சூர்யாவை மிகப் பெரிய நடிகராக ஆக்கி உள்ளது. தனக்கு தனி இமேஜை உருவாக்கிய டைரக்டர் என்பதால் பாலா படத்தை தானே தயாரிக்க ஒப்புக் கொண்டாராம் சூர்யா. 2001 ம் ஆண்டு நந்தா படத்தில் தான் இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றினர். அதற்கு பிறகு 2003 ல் இருவரும் இணைந்து பிதாமகன் படத்தை உருவாக்கினர். நந்தா, பிதாமகன் ஆகிய இரு படங்களுமே கமர்ஷியல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியை பெற்றன. சூர்யாவின் மாறுபட்ட நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
1,050 total views, 3 views today