நிஜவாழ்வில் உங்கள் கதாநாயகன்! ர்நுசுழு
-பிரியா இராமநாதன் இலங்கை.
சிறுவர்களை மிக இலகுவில் ஈர்க்கக்கூடிய கதாபாத்திரங்கள் சூப்பர் ஹீரோக்கள். சாமானிய மனிதர்களைவிட ஏதோ ஒருவகையான சக்திகளைக்கொண்ட இவர்கள், திரையில் அநியாயங்களை தட்டிக்கேற்கும் ரீல் ஹீரோக்கள் ! நிஜ வாழ்க்கையில் யாருமே பார்த்திராத கதாபாத்திரங்களை திரையில் பார்க்கும்போது ரசிகர்கள் லொஜிக், ரியாலிட்டி போன்ற வரையறைகள் மீறப்படுவதைக்கூட பொருட்படுத்துவதில்லை. இன்றைய சர்வதேச சினிமாவில் கோடிகளை வசூலித்துக்கொடுக்கும் கேரண்டியைக்கொடுப்பவை சூப்பர் ஹீரோ திரைப்படங்கள்.
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் காமிக்ஸ் புத்தகங்களில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் இன்னும் புதிதாக தோன்றக் காரணம் என்ன ? சிறுவர்களை மட்டுமே இலக்காக வைத்து உருவாக்கப்பட்ட காமிக்ஸ் புத்தகங்களுக்கு பெரியவர்களும் ரசிகர்களாக இருப்பது எப்படி ? அமெரிக்காவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த கதாபாத்திரங்களால் உலகில் உள்ள பெரும்பாலான மக்களை ஈர்த்துக்கொள்ள முடிந்ததெப்படி?
சூப்பர் ஹீரோக்கள் சென்ற நூற்றாண்டிலிருந்துதான் பிரசித்தி பெற்றார்கள் என கூறப்பட்டாலும் , உண்மையில் சூப்பர் ஹீரோக்களின் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டதெனலாம் . கதை சொல்லும் முறை அறிமுகமானத்திலிருந்தே சூப்பர் ஹீரோக்களும் நம்மோடு உறவாடத்தொடங்கிவிட்டனர் போலும். நம்முடைய ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும், புராணங்களிலும் வருபவர்கள், சூயஸ், ஹெர்க்யூலீஸ் போன்ற கிரேக்க புராணங்களில் இடம்பெற்ற ஹீரோக்கள் என உலகின் பல்வேறு இலக்கியங் களிலும் ஏராளமான சூப்பர் ஹீரோக்கள் உருவாகியிருந்தனர்.அன்றைய சூப்பர் ஹீரோக்களின் சக்தி கடவுளிடமிருந்து கிடைக்கப்பெற்றதாக சொல்லப்பட, இன்றைய சூப்பர் ஹீரோக்கள் அறிவியலின் உதவியுடன் உருவாக்கப்பட்டனர் .
1930களில் அமேரிக்கா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது. கொலை கொள்ளை போன்றவை மலிந்திருந்த அப்போதைய அமெரிக்காவில், லிதுவேனியாவிலிருந்து இடம்பெயர்ந்திருந்த மிச்சேல் சிகல் (mitchell siegel) என்பவர் கொள்ளையர்களால் சுட்டுவீழ்த்தப்பட, இந்த சம்பவம் மிச்சலின் மகன் ஜெர்ரியை (jerry siegel) கடுமையாக பாதித்தது. சராசரி மனிதனான தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதையுணர்ந்த ஜெர்ரி துப்பாக்கித் தோட்டாக்கள் துளைக்காத மனிதர்கள் இருந்தால் எப்படியிருக்கும் என யோசித்தார். அப்போது, அறிவியலில் ஈடுபாடு கொண்டிருந்த ஜெர்ரி சீகளால் உருவாக்கப்பட்ட தோட்டாக்கள் துளைக்காத முதல் சூப்பர் ஹீரோ கதாபாத்திரமே சூப்பர் மேன். சொந்த நாட்டைவிட்டு வெளியேறி வாடிய ஜெர்ரி, சொந்த கிரகத்தை விட்டு வெளியேறி வாடுபவராக சூப்பர் மேனை உருவாக்கினார். உண்மையில் வலிமையை பறைசாற்ற சூப்பர் மேன் உருவாக்கப்படவில்லை. மனிதனின் இயலாமையை நீக்குவதற்காக உருவாகிய கதாபாத்திரமே அது.
சூப்பர் மேனின் மதிப்பை உணர்ந்த” DC Comics “ நிறுவனம் ஜெர்ரியிடம் இருந்து அதன் மொத்த உரிமத்தையும் வாங்கிக்கொண்டது . பின்னாளில் கோடிகோடியாக குவிக்கப்போகும் படைப்பு என்பது தெரியாமல் வறுமை காரணமாக சொற்ப விலைக்கு அது விற்கப்பட்டது. அதேநேரத்தில் DC Comics ன் பரம வைரியான மார்வெல் காமிஸ் (marvel comics) சூப்பர் மேன் கதாபாத்திரம்போலவே தாமும் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அமெரிக்க மக்களை தம்வசம் ஈர்க்க நினைத்து உருவாக்கிய கதாபாத்திரமே “கேப்டன் அமேரிக்கா ” .
இரண்டாம் உலகப்போர் காலமது,அமெரிக்க மக்களை நாட்டு பற்றை ஊட்டி போருக்கு ஈர்க்க வேண்டிய கட்டாயம். அதற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களில் ஓன்று மார்வெலின் “கேப்டன் அமேரிக்கா “. நாட்டுக்காக போரில் ஈடுபட துடிக்கும் இளைஞன் ஒருவன் தகுந்த உடற் தகுதியில்லாததால் ராணுவத்தால் புறக்கணிக்கப்பட , பின்னர் “ளரிநச ளழடனைநைச ளநசரஅ” மூலம் அசாத்திய சக்தி பெற்று அமெரிக்காவின் எதிரியான ஹிட்லரை பந்தாடுகின்றார் . அந்த கதாபாத்திரமும் அள்ளிக்கொடுத்த வெற்றியால் னுஊ ஊழஅiஒ மற்றும் அயசஎநட புதியபுதிய சூப்பர் ஹீரோக்களை உருவாக்கத்தொடங்கினர். Spider man, batman, iron man, black panther, hulk, ant man, aquaman, asterix , flash,thor, x-men, wonder women என சூப்பர் ஹீரோக்களின் தேசமானது அமேரிக்கா .
இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர் நாட்டுப்பற்றை போதிக்கும் சூப்பர் ஹீரோக்கள் மீதான மோகம் மக்களிடையே குறைய ஆரம்பிக்கவே துப்பறியும் மற்றும் கிரைம் ஹீரோக்களை நோக்கி காமிஸ் புத்தகங்கள் தமது பார்வையை திருப்ப, அதேநேரத்தில் வானொலி, தொலைகாட்சி தொடர் என படிப்படியாக முன்னேறி ஹாலிவூட்டில் கோடிகளை அள்ளிக்குவிக்கும் திரைப்படங்களாக,அனிமேஷன் கார்டூன்களாக இந்த சூப்பர் ஹீரோக்களின் கதைகளின் வெற்றி அசாத்திய வளர்ச்சியினை அடைந்து வீறுநடை போடுகின்றதெனலாம்.
கணினி விளையாட்டுகள், காமிக்ஸ் மற்றும் கார்ட்டூன் ஹீரோக்கள் என இவை அனைத்தும் நிஜ உலகத்திலிருந்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் கனவு தொழிற்சாலையின் ஒரு பகுதியாகும். ஒருவரைப் பின்பற்ற முயற்சிக்கும் ஒரு குழந்தையின் ஆசை எப்போதும் இயல்பானது, ஆனால் நிஜத்திற்கும் ரீலுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ளவியலாத குழந்தைகள் சிலர்,எல்லைமீறி சூப்பர் ஹீரோக்களின் மேனரிஸத்தோடு ஒன்றநினைக்கும் போதுதான் பிரச்சினையே எழுகிறது. உதாரணத்திற்கு சூப்பர் ஹீரோ செய்யும் அசாத்திய விடயங்களை தானும் செய்துபார்க்க முயலுவது அல்லது தன்னை சூப்பர் ஹீரோ காப்பாற்ற வருவார் என்கிற நம்பிக்கையில் ஏடாகூடமாக எதையாவது செய்துவிடுவது போன்ற விடயங்களை தவிர்க்கும் வண்ணமான விழிப்புணர்வுகளை குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்தும் பொறுப்பு நிச்சயம் பெற்றோர்களுக்கும் உண்டு. “நிஜவாழ்வில் உங்கள் ஹீரோ தினமும் நீங்கள் காணும் ஒருவரே, அது நீங்களாகவும் இருக்கலாம். எனவே உண்மையான ஹீரோவாக உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள் ” எனும் வார்த்தைகள், குழந்தைகளை தன்னம்பிக்கையோடு வழிநடத்தகூடும் .
944 total views, 3 views today