வாயை மூடிப் பேசவும்:

7 வருடங்களுக்கு முன்பே
கொரோனா காலத்தைக் காட்டிய படம்?
நடிகர்கர் துல்கர் சல்மான், அதாவது கேரளா சுப்பர் ஸ்ரார்; மம்முட்டியின் மகன்தான் இவர். இவரது முதல் படம் வாயை மூடிப் பேசவும்: துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலாஜி மோகனின் தமிழ் சினிமாவில் இந்தப் படம் கொஞ்சம் புதிய முயற்சிதான். அதிலும் மனிதர்கள், குறிப்பாக உறவுகள் மனம் விட்டுப் பேசினால் எல்லாமே சரியாகிவிடும், என்ற நல்ல விஷயத்தை, ஒரு புதிய கோணத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
2014 ஆண்டு வெளிவந்த படத்தை 2021 இறுதியில் விமர்சிப்பதற்கான காரணம். இப்படம் இன்று கோரோனா காலத்தில் எதனைச் சொல்கிறதோ அத்தனையும் 7 வருடங்களுக்கு முன்பே சொல்கிறது.
பனிமலை என்றொரு கிராமம். ஹீரோ துல்கர் சல்மான் இங்குதான் வசிக்கிறார். இந்த ஊரில் ஊமைக் காய்ச்சல் என்ற நோய் பரவ, அதில் பாதிக்கப்பட்டவர்கள் பேச்சிழக்கின்றனர். மக்கள் பேசுவதால்தான் ஊமையாகிறார்கள் என நினைத்து பேசத் தடை விதிக்கிறது அரசு. ஒரு நகரத்தை விட்டு வெளியே செல்லத்தடை. ஒருவர் ஒருவருடன் நேருக்கு நேர் பேசவும் தடை. எச்சில் மூலம் பரவலாம் என்ற பாதுகாப்பு. மருந்து கண்டுபிடிப்பு அதற்கு பக்கவிளைவுகள் வரலாம் என்று பயம். வாய்க்கு முகக்கவசம். இப்படி இப்படத்தை சென்ற வாரம் பார்த்தபோது இது 2021 ஒன்றில் வெளிவந்த படமா என எண்ணத்தோன்றியது. அதிகம் கற்பனை பண்ணவேண்டாம். அவை வருங்காலத்தில் நிஜமாகுமோ என்று பயம் வருகிறது.
மீண்டும் ‘மங்காத்தா’ சாயல் கதையில் அஜித்
3-வது முறையாக வினோத் இயக்கும் படத்தில் அஜித் குமார் மீண்டும் நடிக்க இருப்பதாக போனி கபூர் உறுதிபடுத்தி உள்ளார். இந்த படம் மங்காத்தா சாயலில் உருவாக இருப்பதாகவும் இதில் அஜித்குமார் வில்லனாக நடிக்கிறார் என்றும் தகவல் கசிந்து இணையதளங்களில் பரவி வருகிறது.
எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இது வந்தது. தற்போது மீண்டும் வினோத் இயக்கும் ‘வலிமை’ படத்தில் அஜித் நடித்து முடித்துள்ளார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியீடு செய்ய முடிவு செய்துள்ளதாக படக்குழு அறிவித்து உள்ளது. வலிமை படம் முடிந்துள்ளதால் அடுத்து அவர் நடிக்க உள்ள புதிய படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
அக்கா தயாரிப்பாளர்; தங்கை கதாநாயகி!
கீர்த்தி சுரேசின் அப்பா ஒரு தயாரிப்பாளர் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த தகவல். அவருடைய அக்கா ரேவதியும் தயாரிப்பாளர் என்பது நிறைய தயாரிப்பாளருக்கு தெரியாத தகவல். இவர், ரேவதி 33 படங்களை தயாரித்து இருக்கிறார். அடுத்து தயாரிக்கும் 34-வது படத்துக்கு ‘வாசி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். கதாநாயகி, கீர்த்தி சுரேஷ். இவருக்கு ஜோடியாக டொவினோ தாமஸ் நடிக்கிறார். கீர்த்தி சுரேசின் அக்கா ரேவதி தயாரிக்கிறார்.
கைதி 2-ம் பாகத்துக்கு தயாராகும் கார்த்தி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். தமிழில் எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, வேலை இல்லா பட்டதாரி, சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சிங்கம், அரண்மனை படங்கள் 3 பாகங்களாக வெளியாகின. இந்த நிலையில் கார்த்தியின் கைதி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கைதி படம் 2019-ல் ரிலீசாகி பெரிய வெற்றி பெற்றது. ஜப்பானிலும் வெளியாக இருக்கிறது. இதையடுத்து கைதி 2-ம் பாகம் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வலைத்தளத்தில் ஆர்வத்தை பதிவிட்டு வருகிறார்கள். கைதி 2-ம் பாகத்துக்கான பெரும்பகுதி காட்சிகளை முதல் பாகம் எடுக்கும் போதே படமாக்கி விட்டதாகவும், 30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருந்தார். லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார்.