யேர்மனியில் Ehrenring விருதினை பெற்ற முதலாவது தமிழராக திரு.குமாரசாமி.ஜெயக்குமார்
யேர்மனியின் டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் மொழிபெயர்ப்பாளரான திரு குமாரசாமி ஜெயக்குமாரன் அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சமூகப்பணி ஆற்றி வருகிறார். கல்வி, கலை,பண்பாடு என்று அவர் பல்வேறு துறைகளில் செய்து வருகின்ற பணிகள் அளப்பரியன. அவருடைய சேவை தமிழ் மக்களுக்கு மட்டுமானதாக நின்று விடவில்லை. பல்லின மக்களுக்காகவும் அவர் பாடுபட்டு வருகிறார்.
டோட்முண்ட நகரத்தின் வளர்ச்சிக்கு திரு குமாரசாமி ஜெயக்குமார் அவருடைய சேவைகளும் உறுதுணையாக இருப்பதைக் கவனித்த டோட்முண்ட் நகரசபை அவருக்கு 29.10.2021 அன்று நகரத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான „மதிப்பளிப்பு மோதிரம்’ „Ehrenring’ வழங்கி சிறப்பித்துள்ளது. யேர்மனியில் இந்த விருதினை பெறுகின்ற முதலாவது தமிழராக திரு குமாரசாமி ஜெயக்குமார் விளங்குகிறார்.
இதனையொட்டி „தமிழர் அரங்கம்’ அமைப்பினர் திரு குமாரசாமி ஜெயக்குமார் அவர்கள் செய்து வரும் பணிகளை பாராட்டி நன்றி தெரிவிக்கும் வண்ணம் கலந்துரையாடல் ஒன்றினை 31.10.2021 அன்று டோட்முண்ட் தமிழர் அரங்கம் மண்டபத்தில் நடாத்தியிருந்தனர்.புல சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு தமது மகிழ்ச்சியையும் வாழ்த்தையும் தெரிவித்தார்கள். திரு குமாரசாமி ஜெயக்குமார் அவர்களுக்கு நகரசபை வழங்கியுள்ள இந்த அங்கீகாரமானது சமூகப் பணிகளில் ஈடுபடுகின்ற பலருக்கு ஊக்கத்தை வழங்கியுள்ளது.
1,084 total views, 3 views today