யேர்மனியில் 2022 ஆரம்பத்தில் தடுப்பூசியைக் கட்டாயமாக்க திட்டம்!

நாட்டில் சுமார் 68 சதவீதமானவர்கள் மட்டுமே
இதுவரை தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

ஊசி ஏற்றாதோருக்கு கதவடைப்பு ஜேர்மனியின் மத்திய, மாநில அரசுகள் இணைந்து புதிய கோவிட் கட்டுப்பாடு
களை நடைமுறைப்படுத்த இணங்கியுள்ளன. அதன்படி தடுப்பூசி ஏற்றாதவர்களுக்குப் பல தடைகள் அறிவிக்கப்பட்
டுள்ளன.
முன்னாள் சான்சிலர் அங்கெலா மெர்கல்மற்றும் புதிய சான்சிலர் ஓலாஃப் சோல்ஸ் ஆகியஇருவரும் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பில் நாட்டின் 16 மாநிலங்களினதும் தலைவர்களோடு இணக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

நாட்டில் தடுப்பூசியைக் கட்டாயமாக்குவதற்காக அடுத்த ஆண்டு பெப்ரவரியில்நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்
படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

🔵உணவகம், அருந்தகம்,அருங்காட்சியகம், சினிமா மற்றும் வர்த்தக நிலையங்களுக்குள் தடுப்பூசி ஏற்றியோரும், தொற்றுக்குள்ளாகி அதிலிருந்து மீண்டவர்களுமே அனுமதிக்கப்படுவர்.
🔵ஒரு லட்சத்துக்கு 350 பேர் என்ற வீதத்தில் தொற்று உள்ள பகுதிகளில் இரவுவிடுதிகள், இசை அரங்குகள் மூடப்படும்
🔵உதைபந்தாட்ட அரங்குகளில் ஆகக்கூடியது 15 ஆயிரம் பார்வையாளர்களேஅனுமதிக்கப்படுவர்.
🔵தடுப்பூசி ஏற்றாதவர்கள் தாங்களும்வேறு இரண்டு பேரும் மட்டுமே வீடுகளுக்குள் ஒன்று கூடமுடியும்.ஏற்கனவே நடைமுறையில் உள்ள 2ஜி, 3ஜி கட்டுப்பாடுகளுடன் தேவைக்கு ஏற்பபுதிய விதிகளை அந்தந்த மாநிலங்கள்
அமுல்செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சுமார் 68 சதவீதமானவர்கள் மட்டுமே இதுவரை தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். அங்கெலா மெர்கலும் புதிய சான்சிலர் ஓலாஃப் சோல்ஸ{ம் தடுப்பூசியை தேசிய அளவில்கட்டாயமாக்கும் திட்டத்தை ஆதரிக்கின்
றனர். அதற்கான சட்டமூலம் ஒன்றைஅடுத்த ஆண்டு பெப்ரவரியில் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்குத் திட்டமிடப்
பட்டுள்ளது. அண்மையில் இது போன்ற ஒரு சட்டம்ஒஸ்ரியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் வேளை நெருங்கிவிட்டது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன்(ருசளரடய எழn னநச டுநலநn)சில தினங்களுக்கு முன்னர் கூறியிருக்கிறார்.

1,158 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *