அட கூடிவாழ்ந்தால் கோடி நன்மை அது பொய்யானதோ?

பிரிட்டிஷ் சட்டத்துறை வரலாற்றில் முதற்தடவையாக
ஒரு விவாகரத்து தீர்வு மொத்தம் 500 மில்லியன் பவுண்ட்ஸ்!

-விமல் சொக்கநாதன் -இங்கிலாந்து.

டுபாய் மன்னர்மீது பிரிட்டிஷ் நீதிமன்றம் கடும் நடவடிக்கை! „டூப்‟செய்தி அல்ல. நான் இலண்டன் வழக்கறிஞராக இருந்துகொண்டு பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் சென்ற மாதம்; விவாகரத்து வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பை திரிவுபடுத்தி எழுதவே மாட்டேன்.அது ஒரு உண்மைச் செய்தி-ஒரு விவாகரத்து வழக்கு.

இலண்டனில் முடிவடையும் விவாகரத்து வழக்குகளில், பிரிந்து செல்லும்மனைவிக்கு இவ்வளவு ஆயிரம் பணம் ஃசொத்து வழங்கப்படவேண்டும் என்றும்,தனியாக வாழும் மனைவி குறையின்றி வாழவும், குழந்தைகளுக்கு வசதியான கல்வியையும் வாழ்க்கைத் தரத்தையும் வழங்கவும் வேண்டும் என்றும் தீர்மானிக்கும் இலண்டன் மேல்நீதிமன்றம் பெருந்தொகை சொத்தையும் பணத்தையும் மனைவிக்கு வழங்கும்படி உத்தரவிடுவது இங்கு வழக்கம்! உலகில் மற்ற நாடுகளில் ஒரு கணவனுக்கு எதிராக நீதிபதி ஒருவர் தீர்ப்பு வழங்கினால், அந்தக் கணவன் “தூ! இந்தப் பெட்டைச்சிக்கு நான் ஒரு பணமும் கொடுக்கமாட்டேன்”என்று பே பே காட்டிவிட்டு ஓடிவிட முடியாது.,லண்டன் நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது. இந்த வழக்கைத் தொடர்ந்த மனைவி,ஒரு ராஜாதிராஜனின் புதல்வி. ஜோர்டான் முன்னாள் மன்னர் ஹ{சைனின் புதல்வி இளவரசி ஹயா. தற்போதைய ஜோர்டான்மன்னர் அப்துல்லாவின் சகோதரி. அப்படியானால் இலண்டன் நீதிமன்றத்தில் கடுமையான தீர்ப்பு விதிக்கப்பட்ட கணவர் யார்?

பிரிட்டிஷ் சட்டத்துறை வரலாற்றில் முதற்தடவையாக வழங்கப்பட்ட பெருந்தொகை விவாகரத்துதீர்வு மொத்தம் 500 மில்லியன் பவுண்ட்ஸ். தீர்வில் பாதிக்கு மேற்பட்ட தொகை 251.5 மில்லியன் பவுண்ட்ஸ் ரொக்கப் பணமா மனைவிக்கு வழங்கப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பிரிட்டிஷ் நீதிமன்றம் உத்தரவிட்டது எந்தக் கணவர்மீது? கணவர் என்றால் அவர் ஒரு சாமானிய கணவரல்ல! அவர் ஒரு அரபு நாட்டின் மன்னாதிமன்னன்@ கோடானு கோடீஸ்வரர். டுபாய் நாட்டின் ஆட்சித் தலைவர் -72 வயதான ஷேக் முகம்மது பின் ரஷீட் அல் மக்தூம்.

விவாகரத்தானவர் அவரது ஆறாவது மனைவி -இளவரசி ஹயா. பிரிட்டனில் சறே, எகம் என்ற இடத்தில் உள்ள மாபெரும் மாளிகையில் வாழ்ந்து வருகிறார். இது இலண்டனில் இளவரசி டயானா வாழ்ந்து வந்த கென்சிங்டன் அரண்மனைக்கு அருகில் உள்ள இன்னொரு மாளிகை. இந்த இரண்டு இல்லங்களையும் பராமரிக்க இளவரசி ஹயாவுக்கு இந்தத் தொகையை வழங்கும்படி இலண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டிருக் கின்றது. இவற்றோடு இளவரசி ஹயாவினதும், அவருக்குத் தேவையான தாதி மற்றும் உதவியாளர் போன்றோரின் சம்பளம், இருப்பிடச் செலவுகள் மற்றும் இளவரசியின் பாதுகாப்புக்கான கவசவண்டிகள், இளவரசி வீட்டில் வளர்க்கப்பட்டுவரும் பல்வேறு குதிரைக்குட்டிகள் உட்பட செல்லப் பிராணிகள் ஆகிய வற்றுக்குத் தேவையான பராமரிப்புச் செலவுகளும் கணிசமான அளவு வழங்கப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இளவரசிக்கு பிறந்த 14வயது புதல்வி, 9 வயது புதல்வர் இருவரது செலவுகளுக்காகவும் ஆண்டொன்றுக்கு ஒவ்வொருவருக்கும் 56 லட்சம் பவுண்ட்ஸ் வழங்கப்படவேண்டும் என்றும், இந்தப் பணம் செலுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்த 290 மில்லியன் பவுண்ட்ஸ{க்கு எழுத்து மூலமான உத்தரவாதம் வழங்கப்படவேண்டும் என்றும்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இலண்டன் மேல்நீதிமன்றத்தில் பல மாதங்களாக நடத்தப்பட்டுவந்த இந்த விவாகரத்து வழக்கு மத்திய கிழக்கு வட்டாரத்து அரச குடும்பங்களின், இதுவரை காலமும் காதும் காதும் வைத்தாற்போன்று மூடப்பட்டிருந்த அரச வாழ்க்கை முறையை பிரகாசமான வெளிச்சம்போட்டு முழு உலகத்திற்கும் பரகசியப்படுத்தியிருக்கிறது! ஆறாவது மனைவியான இளவரசி ஹயாவுக்கு பிறக்காத வேறு இரண்டு யுவதிகள் ஷேக்கா லத்தீபா,ஷேக்கா சம்சா இருவரும் இலண்டனில் வாழ்ந்துவரும்போது அவர்களின் விருப்பத்திற்கு எதிராக அவர்களை டுபாய்க்கு கடத்திச் சென்றார் டுபாய் மன்னர் ஷேக் முகம்மது. புதல்வியர் இருவர் டுபாய்க்கு கடத்தப்பட்டமைபோல தாமும் ஒருநாள் கடத்தப்படலாம் என்று இளவரசி ஹயா நிரந்தர அச்சத்தில் வாழ்ந்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இதனால் தமதும் தமது இளம் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும் பெருந்தொகையான பணத்தை இளவரசி ஹயா செலவிட்டு வந்தார்.

டுபாய்ஆட்சியாளர் ஷேக் முகம்மது தமது இலண்டன் மனைவி இளவரசி ஹயாவின் எல்லா நடவடிக்கைகளையும் டுபாயிலிருந்தபடியேமோப்பம் பிடித்து, ஒட்டுக்கேட்டு படம்பிடித்து வந்தார் என்றும் நீதிபதியிடம் தெரிவிக்கப் பட்டது. இளவரசி ஹயாவின்தொலைபேசி மட்டுமல்ல, அவரது மெய்ப்பாதுகாவலர்கள்,அவரது சட்ட ஆலொச கர்கள், அவரது தலைமை பெண் வழக்கறிஞர், ஆளும் கன்சவேட்டிவ் கட்சியின் பிரபுக்கள் சபை சீமாட்டி ஷக்கிள்டன் ஆகியோரினதும் தொலைபேசிகளும் டுபாயிலிருந்து சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு விட்டதாக பிரிட்டிஷ் நீதிமன்றம் கருத்து வெளியிட்டது.ஆறாவது மனை வியாக இருந்தாலும் டுபாய் ஆட்சியாளருக்கு இளவரசி ஹயா எப்போதுமே செல்ல மனைவியாகத்தான் இருந்தார். அதிகாரபூர்வ வைபவங்களுக்கு ஷேக் எப்போதுமே அழைத்துச் செல்வதுமூக்கும் முழியுமாக இருந்தஆறாவது மனைவி-செல்ல மனைவியைத்தான். இலண்டனிலும், மற்ற நாடுகளிலும் ஷேக்கின் குதிரைகள் பந்தயத்தில் ஓடும்போதும் ஷேக் இந்த செல்ல மனைவியைத்தான் அழைத்துச் செல்வது வழக்கம். ஹயாவின் கவர்ச்சியான-எடுப்பான தோற்றம்அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஷேக்கின் முன்னைய ஐந்து மனைவிகளில் ஒருவருக்கு பிறந்த ஷேக்கா சம்சா, ஷேக்கா லத்தீபா இருவரும் அரண்மனை கெடுபிடிகளிலிருந்து தப்பி ஓடும்போது ஷேக்கின் அதிரடிப்படையினரின் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டு மீண்டும் டுபாய்க்கே கொண்டுவரப்பட்டார்கள். ஷேக்கா லத்தீபாடுபாயிலிருந்து வள்ளம் ஒன்றில் புறப்பட்டு இந்தியாவின் கோவா துறையை அண்மிக்கும்போது ஷேக் இந்திய ராணுவத்தின் உதவியைக்கோரினார். இந்திய கடற்பரப்பில் இந்திய அதிரடிப்படைகள் வள்ளத்தை இடைமறித்து தாக்கினர். டுபாய் அதிரடிப்படையினர் ஷேக் லத்தீபாவுக்கு மயக்க ஊசி செலுத்தி தமது டுபாய் கப்பலுக்குபலவந்தமாகதூக்கிச் சென்றார்கள். இந்தியாவிலிருந்து அமெரிக் காவுக்கு தப்பி ஓடி, அமெரிக்காவில் அரசியல்தஞ்சம் கோருவது லத்தீபாவின் திட்டம். இது 2018,ல் நடந்தது. தப்பி ஓட முயன்ற லத்தீபாவை ஒதுக்குப்புறமாக ஒருபண்ணைவீட்டில் கடும் பாதுகாப்பில் தடுத்து வைத்திருந்த போது சிற்றன்னை ஹயா அங்கு சென்று லத்தீபாவை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. லத்தீபாவை தடுப்புக்காவல் கைதியாகக் கண்ட சிற்றன்னை ஹயா தமக்கும் ஒருநாள் இந்தக் கதிஏற்படலாம் என்று உணர அதிகநேரம் பிடிக்கவில்லை. லத்திபா மீது ஹயா அக்கறை காட்டுவது டுபாய் சர்வாதிகாரிக்கு சிறிதும் பிடிக்கவில்லை.

2019 ஏப்ரல் மாதம் மன்னரின் மனைவி ஹயா உறுதியான முயற்சி எடுத்தார். தனது நிலைமை டுபாயில் பாதுகாப்பானது அல்ல என்று தீர்மானித்து, ஏப்ரல் 19ஆம் திகதியன்று ஹயா டுபாயிலிருந்து விமானம் மூலம் வெளியேறினார். தனக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, லண்டன்வந்திறங்கிய ஹயா தமது வழக்கறிஞர்களைச் சந்தித்தார். இதற்கிடையே தமது மனைவி ஹயா தமது பிள்ளைகள் இருவரையும் டுபாய்க்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இலண்டன் நீதிமன்றத்தில் டுபாய் ஆட்சியாளர் ஷேக்முகம்மது பின் மக்தூம்மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்குத் தாக்கல் இலண்டன் நீதிமன்றத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் நடைபெற்றது. வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்ப்பு டுபாய் மன்னருக்கு எதிராக வழங்கப்பட்டது.

826 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *