“பசி” நாடகம் – 1978
எனது நாடக அனுபவப் பகிர்வு – 15
ஆனந்தராணி பாலேந்திரா இங்கிலாந்து.
கடந்த ,தழில் தமிழக நாடக ஆளுமை பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி எழுதி க. பாலேந்திரா நெறிப்படுத்தி நான் நடித்த ‘பசி’ நாடகத்தின் கதையை எழுதியிருந்தேன். பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதிய மற்றுமொரு நாடகமான ‘மழை’ நாடகத்தை ஏற்கனவே இலங்கையில் 1976,ல் பாலேந்திரா நெறியாள்கை செய்து மேடையேற்றியிருந்தார். இதில் பாலேந்திராவுடன் நானும் நடித்திருந்தேன்.
‘பசி’ நாடகத்தில் மேடைப்; பொருட்கள் எல்லாம் ஊமமாகத்தான் காட்சிப்படுத்தப்படும். இல்லாத பொருளை இருப்பது போலப் பாவனை செய்து கையாள்வது கஷ்டந்தான். இதில் வரும் நாய்க்குட்டியும் பாவனைதான். ஸ்வெட்டர் பின்னுவதில் இருந்து நாய்க்குட்டியைப் பராமரிப்பது என்று எல்லாமே ஊமம். ஒத்திகையின் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. செய்வதைச் சரியாகச் செய்ய வேண்டும். இதனால் ஸ்வெட்டர் பின்னும் பாவனைக்காக மப்ளர் பின்னப் பழகினேன்.
இந்த நாடகத்தில் ஒரு ,டத்தில் நான் தாலாட்டுப் பாடி நாய்க்குட்டியை நித்திரையாக்க வேண்டும். நான் முதன்முதலாக மேடை நாடகத்தில் பாடியது ‘பசி’ நாடகத்தில்தான். பின்னர் பாலேந்திரா நெறிப்படுத்திய ‘யுகதர்மம்’ நாடகத்தில் பாடகர் குழுவில் ஒருவராகப் பல மேடையேற்றங்களில் பாடினேன். பலருடனும் சேர்ந்து கோரஸாகப் பாடுவது வேறு. ‘பசி’ நாடகத்தில் நான் தனியாகப் பாட வேண்டும். முதலில் ஒரு சிறு தயக்கம் இருந்தது. நான் பரதநாட்டியம் பயின்றிருந்த காரணத்தால் அதற்கு சங்கீதம் கற்றிருப்பது அவசியம் என்று கொழும்பில் வசித்தபோது சிறிது காலமும் பின்னர் யாழ்ப்பாணத்திலும் சங்கீதம் கற்று வந்தேன்.
யாழ்ப்பாணம்; கொக்குவிலில் நான் வசித்த அதே தெருவில் சில வீடுகள் தள்ளி மிகப் பிரபலமான சங்கீத ஆசிரியை சங்கீதவித்வான் திருமதி. சரஸ்வதி பாக்கியராசா அவர்கள் வசித்து வந்தார். அவரிடம் அப்போதுதான் மீண்டும் கர்நாடக சங்கீதத்தைக் கற்க ஆரம்பித்திருந்தேன். திருமதி. சரஸ்வதி பாக்கியராசா அவர்கள் தமிழ்நாடு கர்நாடக இசைக்கல்லூரியில் சங்கீதம் பயின்று குசைளவ உடயளள ர்ழழெரசள இல் சித்தியடைந்த முதலாவது இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றவர். யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்தில் சிரேஷ்ர விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அத்துடன் வட இலங்கை சங்கீத சபையின் சிரேஷ்ட பரீட்சை மேலதிகாரியாகவும் கடமையாற்றியவர். அந்தக் காலத்தில் இலங்கையில் கோயில்களில் பெண் கலைஞர்கள் கர்நாடக இசைக் கச்சேரிகளை நிகழ்த்தத் தயங்கிய காலத்தில் மிகத் துணிச்சலுடன் கோயில்களில் பாடி ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர். அவரிடம் நான் தனியாகவும் குழுவாகவும் பாட்டுப் பயின்றேன். கண்டிப்புடன் பயிற்றுவிப்பார். அவரின் பயிற்சியும் எனக்கு நாடகத்தில் பாடுவதற்குத் துணை செய்தது.
‘பசி’ நாடகத்தில் நான் பாடும் தாலாட்டுப் பாடல்…..
மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கைக் கோன் முடிகள் செய்துவித்தாய்! செம் பொன் சேர்
கன்னி நன் மாமதின் கண்மணியே கண புரத்து என் கண்மணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ.
‘பசி’ நாடகத்தில் ஒரு கட்டத்தில் பாலேந்திராவும் பாடவேண்டும். அவர் பாடிக்கொண்டு ஆடவும் வேண்டும். அந்தப் பாடல் ஒரு கிராமிய மெட்டில் அமைந்திருந்தது. ‘பசி’ நாடகம் முதன்முதலாக 27-12-1978 அன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மேடையேறி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நாடகத்தை 12-03-1979,ல் பேராதனை பல்கலைக்கழகத்தில்; பாலேந்திரா மேடையேற்றினார். பேராதனையில் பெரும்பாலும் மாணவர்களும் ஆசிரியர்களுமே பார்வையாளர்களாக வருவது வழக்கம். இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் வந்து அங்கு கல்வி கற்கும் இந்தத் தமிழ் மாணவர்கள் மிக ஆர்வமாக நாடகம் பார்க்க வருவார்கள். ஏற்கனவே நான் நடித்த ‘பிச்சை வேண்டாம்’,‘மழை”,‘நட்சத்திரவாசி’ ஆகிய நாடகங்கள் அங்கு மேடையேற்றப ;பட்டிருந்தன. பேராதனை பல்கலைக்கழகத்தில்; நாடக மேடையேற்றங்களுக்குப் போகும்போது நான் அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்குவது வழக்கம். நாடகத்தில் நடிக்கும் நடிகை அங்கு தங்கியிருக்கிறார் என்ற செய்தி தமிழ் மாணவிகள் மத்தியில் பரவி பெரும்பாலான மாணவிகளும் நாடகம் பார்க்க வருவார்கள். பின்னர் அது பற்றி விமர்சனங்களும் இடம்பெறும். பேராதனை மேடையேற்றத்தின்போது நாடகத்தில் நாய் குரைப்பது போல அடிக்கடி சத்தம் வரும்போது பார்வையாளர்கள் மத்தியில் இருந்து யாராவது நாய் போலக் குரைத்தால் என்ன செய்வது என்று எனக்குள் ஒரு பயம் இருந்தது. ஒருவர் அப்படி ஒலி எழுப்பினாலும் போதும். எல்லாமே குழம்பிவிடும். ஆனால் வந்திருந்த மாணவர்கள் மிக அமைதியாக இருந்து நாடகத்தைப் பார்;த்து ரசித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இது நேர்த்தியான நாடக அளிக்கைக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லுவேன்.
‘பசி’ நாடகம் இலங்கையில்; யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை, பேராதனை ஆகிய இடங்களில் 6 தடவைகள் மேடையேற்றப்பட்டது. திருகோணமலையில் பொங்கல் விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில்; ‘பசி’ நாடகம் மேடையேறியது. கொட்டும் மழையிலும் மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் முன் இந்த நாடகத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். மேடையின் ஒரு ஓரத்தில் கூரையில் இருந்து மழை நீர் ஒழுக அதை ஏந்துவதற்கு வாளி ஒன்றை வைத்திருந்தார்கள். மழை நீர் விழும் ஓசை நாடகத்திற்கு இசையாக அமைந்தது.
நாங்கள் லண்டனுக்குப் புலம்பெயர்ந்த பின்னர் ‘பசி’ நாடகத்தை பாலேந்திரா மீளத் தயாரித்தார். நாம் இருவருமே தொடர்ந்தும் நடித்தோம். லண்டனிலும் சுவிற்சர்லன்ட், நேர்வே, ஒஸ்ரேலியா, கனடா ஆகிய நாடுகளிலும் நடைபெற்ற எமது நாடக விழாக்களில் ஒரு நாடகமாக 9 தடவைகள் மேடையேற்றப்பட்டது.
951 total views, 3 views today