குழந்தை கறுப்பா? சிவப்பா? குங்குமப்பூ… தீர்மானிக்குமா?

அமரர்.கனக்ஸ் (முன்னாள் அதிபர்:மகாஜனாக்கல்லூரி தெல்லிப்பழை)

புலம் பெயர்ந்த கர்பவதிப் பெண்கள் என்ன செய்கிறார்களோ தெரியாது ஆனால் ஊரில் இருக்கும் போது மகள் கர்ப்வதியானால் தாய் குங்குமப்பூ கொடுத்தே தான் தீருவர். அப்போது தான் பிறக்கிற பிள்ளை நல்ல சிகப்பு நிறமுடையதாய்ப் பிறக்கும் என்ற நம்பிக்கை. இதில் ஏதாவது உண்மை இருக்குமோதெரியாது.

பாட்டி கூறிய தத்துவம் இப்போ 75 ஆண்டு களின் பின்னர் விஞ்ஞானிகளின் அங்கீகாரம் பெற்றிருப் பதைக் காண முடிகிறது. பாட்டியின் அனுபவ விஞ்ஞானம் இன்றைய அறிவியல் விஞ்ஞானமாகிறதைக் காண மகிழ்ச்சியாகஉள்ளது.

சில வருடங்களுக்கு முன் வெளியான இரண்டு ஆய்வறிக்கைளின் படிக்கு தாயினது கருப்பையில் சிசு விருத்தியுறுகின்ற சமயத்திலே பெற்றோர்களின் உணவு முறைகள் சிசுவின் விருத்தியினைப் பாதிப்பதால் அதன் ஆயுட் காலம் முழுவதுமே குறிப்பிட சில நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கொஞ்சம் விளக்கம் தேவைப்படுகிறதுஅல்லவா? இதோ! நாம் ஒவ்வொருவரும் இந்த உலகிலே அவதரிப்பதற்கு நமது தாய்தந்தையர்தான் காரணம் என்பதை எத்தனைமுறைதான் சொல்வதாம் ஆகவே அதை விடுங்கள். ஆனால் எம்மில் பிறக்கும் பொழுதோ பின்னர் வளரும் பொழுதோ காணப்படுகின்ற இயல்புகளுக்கும் அந்த இருவரிடமும் நாம் உபகாரமாகப் பெற்ற பரம்பரை அலகுகளே காரணம் எனலாம். இதனையே (பரம்பரைவளர்ப்பியல்) என்கிறார்கள்.ஆனால் நாம்வளர்கின்ற பொழுது எமது சமூகச் சூழல் எமது இயல்புகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தவே செய்கின்றது.

அது நண்பர்கள் மூலமாகஏற்படலாம், பெற்றோர்கள் சுற்றத்தின் மூலம்ஏற்படலாம் வேறுபல சமூகச் சூழல் காரணிகளாலும் ஏற்படலாம். இதனை Eugenics(சூழல் வளரப்பியல்)என்பார்கள் ஆகவே நமது ஆளுமையைத் தீர்மானிப்பது Eugenicsமற்றும் Euthenicsஆகிய இரண்டினதும் கூட்டே. ஆனால் இது காலம் வரை அத்தனை கவனத்தில் இல்லாமல் இருந்து வந்துள்ளது இன்னொரு கூறு.

அதனை Epigenetics( மேல்சூழல் வளரப்பியல்) என்பார்கள். கருப்பையிலே சிசு விருத்தியுறுகின்ற போது அதற்குக் கிடைக்கின்ற சூழல் அதன் பரம்பரை அமைபினில் மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்பதை இதனால் அறிய முடிகிறது.

ஆகவே கரப்பவதிப் பெண் ஒருவர் குங்குமப்பூ உட்கொள்வதால் குழந்தையின் தோல் நிறத்தில் மாற்றம் ஏற்பட வாயப்பு உண்டு.

மனிதருடைய தோலின் நிறத்தினைப் பார்ப்போ மாயின் வெறுமனே ஒரு முனையில் கறுப்பும் மறு முனையில் வெள்ளையையும் வைத்தால், இவை இரண்டுக்குமிடையே எத்தனை எத்தனை நிறங்களைக் காண்கிறோம். தந்தையின் விந்துகொண்டுவரும் நிறத்திற்கான பரம்பரை அலகும் தாயினது சூல் வைத்திருக்கும் நிற்திற்கான பரம்பரை அலகும் பிள்ளை கறுப்பா, வெள்ளையா என்பதை தீர்மானிக்கின்றன.

அப்படியாயின் இந்தனை நிறபேதங்கள் எப்படித் தோன்றுகின்றன. தாய் தந் தயிடமிருந்து வருகின்ற நிறத்தினைத்
தீர்மானிக்கும் பரம்பரை அலகுகளை பிரதான பரமபரை அலகுகள் ( ஆயதழச புநநௌ) என்கிறோம் ஆனால் முட்டையினது குழியவுருவிவே நிறத்துடன் சம்பந்தப்பட்ட பல் குழியவுரு பரம்பரை அலகுக Pழடலபநநௌ உள்ளன. இவையே கறுப்புக்கும் வெள்ளைக்கு மிடையான நிற பேதங்களுக்குக் காரணமாகின்றன. ஆகவே உட்கொள்ளுகின்ற குங்குமப்பூ குழியவுருப் பரம்பரை அலகுகளில் மாற்றங்களை செய்யலாம். ஆய்வாளர்கள் தான்அதனைக் கண்டு பிடிப்பார்கள்.

988 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *