பிரிட்டனுக்கே ‘அபகீர்த்தியை’ ஏற்படுத்தும் இலங்கை இராணுவ அதிகாரிகள் மீதான தடை கோரிக்கை!

இலங்கையின் இராணுவ தளபதிகள் இலங்கை வருவதற்கு தடை விதிப்பதில் பிரிட்டன் தயக்கம் காட்டுவதாக பிரிட்ட னின் பாராளுமன்ற உறுப்பினர் எலியட் கொல்பெர் கவலை வெளியிட்டுள்ளார். அத்துடன், அமெரிக்கா உட்பட உலக நாடுகள் பலவும் இலங்கை இராணுவத்தில் தளபதி கள் தரத்தில் இருப்போருக்கு அந்த நாடு களுக்குள் நுழைய தடை விதித்துள்ள தருணத்தில் பிரிட்டன் மட்டுமே இலங்கை இராணுவத் தளபதிகள் பிரிட்டனுக்குள் நுழைவது சம்பந்தமாக எவ்வித தடையையும் கொண்டு வராதுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இன்றைய முப்படைகளும் இலங்கையில் பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டவையாகும். ஆயுதப் படைகளுக்கு ஆட்சேர்ப்பது மட்டுமல்ல. முப்படைகளுக்குமான முகாம்கள்,விமான மற்றும் கடற்படை தளங்கள் என்பவைகூட பிட்டிஷாரின் ஆட்சிக்காலத்திலேயே இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்தன. திருகோண மலையின் சீனன்குடாவில் இயற்கையாகவே அமைந்துள்ள துறைமுகம் மற்றும் அதனோடு இணைந்த விமானப் படைத்தளம் உட்பட இராணுவ தளங்கள் அனைத்தினதும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் பிரட்டிஷார் காலத்திலேயே இலங்கையில் உருவாக்கப்பட்டன.

இலங்கை இராணுவத்தில் தளபதிகளாக ஆரம்பத்தில் பணியாற்றியவர்கள் ஆங்கிலேயர்கள். இவர்களைத் தொடர்ந்து இலங்கை இராணுவத்தின் முதலாவது இலங்கையரான தளபதியாக பதவி வகித்தவர் மேஜர் ஜெனரல் அன்ரன் முத்துகுமார் என்ற தமிழரே என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, இலங்கை கடற்படையின் முதலாவது இலங்கையரான தளபதி கூட அட்மிரல் ராஜன் கதிர்காமர் என்ற, மறைந்த இலங்கை வெளிவிவகார அமைச்சரான லக்ஷ்மன் கதிர்காமரின் மூத்த சகோதரரே என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதவிர இலங்கை விமானப்படையிலும் ஆரம்ப காலத்தில் நிறையவே தமிழர்கள் விமானிகளாகவும் உயர் அதிகாரிகளாகவும் பணியாற்றியிருந்தனர். ஆயினும், இலங்கை சுதந்நதிரமடைந்த பின்னர் ஆயுதப்படை களுக்கு உள்ளும் இனவாதம் உருவாகி தமிழர்கள் புற்ந்தள்ளப்படுகின்ற சூழ்நிலை களே மேலோங்கியிருந்தன. இத்தகைய இனவாத போக்கே நாளடைவில் ஆயுதப்படைகளையும் 99 சதவீதம் பெரும்பான்மை சிங்கள இனத்தவர்களை கொண்டதாக மாற்றமடைய வைத்திருந்தது. இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற அடிப்படை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையின் ஆயுதப்படையினர்மீது கடுமையான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் முன்வைக் கப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு தடை விதிக்கப்பட் டுள்ள அதேசமயம் கடற்படையைச்சேர்ந்த சந்தன ரத்நாயக்க என்பவர் திருகோணமலையில் பதினொரு மாணவர்களின் மரணங்கள் தொடர்பாக அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்ப்பட்டிருந்தது. அத்துடன், சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ சிப்பாய் ஒருவர் மட்டுவில் பகுதியில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டமை தொடர்பாக அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இவற்றைப் பின்பற்றியே பிரிட்டனுக்குள் ளும் இலங்கை ஆயுதப் படைத் தளபதிகள் நழைவதற்கு தடைவிதிக்க வேண்டுமென்று பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் எலியட் கொல்பர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டன் இலங்கை ஆயுதப்படையின ருக்கு பயிற்சியளிப்பதில் நீண்ட கால தொடர்பை கொண்டுள்ளது. இந்தப் பயிற்சியை வழங்குவதில் பிரிட்டனின் உலகப் பிரசித்திபெற்ற இராணுவக் கல்லூரியான றோயல் மிலிட்டரி சான்ட்ஹேஸ்ட் கல்லூரி முக்கியமானதாகும். (Royal Military Academy Sandhust). இக்கல்லூரியிலிருந்தே நீண்டகால மாக இலங்கையின் பல இராணுவ அதிகாரி கள் தமது சேவைக்காலப்பகுதியில் இராணுவ பயிற்சிகளை பெற்றவர்களாக இருக்கின்றனர். இத்தகைய பின்னணியில் இலங்கை இராணுவ அதிகாரிகள் பிரிட்டன் வர தடை விதிக்கப் பட வேண்டுமென கோரப்பட்டி ருப்பது மறுபுறத்தே பிரித்தானிய இராணுவத் துறைக்கே கன்னத்தில் அறைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளதோ என்றே எண்ணத்தோன்றுகின்றது. ஏனெனில், பிரிட்டனில் சிறப்பு பயிற்சி பெற்ற இலங்கை அதிகாரிகள் பலரும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக குற்றச்சாட்டப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகளை பிரட்டன் வர பிரிட்டிஷ் அரசு அனுமதி மறுப்பதன் மூலம் ‘தாம் வழங்கிய பயிற்சிக்கு அபகீர்த்தியை’ தாமே ஏற்படுத்திக்கொள்வதா என்ற உணர்வை பிரிட்டிஷ் பாதுகாப்புத்துறை கொண்டுள்ளதோ எனவும் எண்ணத் தோன்றுகின்றது. எது எப்படியிருந்தபோதிலும் அமெரிக்காவோ அல்லது பிரிட்டனோ வடக்கு – கிழக்கு யுத்தம் இடம்பெற்றபோது ‘தொட்டி லையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விட்டது’ போன்றே நடந்து கொண்டன. ஒருபுறம் வடக்கு – கிழக்கு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பற்றி குறிப்பிட்ட அதேசமயம் மறுபுறத்தே விரிவான ஆயுதப்பயிற்சி, ஆயுத விற்பனை என்பவற்றில் அமெரிக்கா,பிரிட்டன் ஆகியவை நியாயத்தோடு எவ்வளவு தூரம் உறுதியான முடிவுகளை எடுக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். நன்றி:ஈழநாடு

845 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *