7 மணி நேரத்தில் 5 கோடி சம்பாதித்த சமந்தா
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடிய சமந்தாவின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.நடிகை சமந்தா தற்போது ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு மூன்று முதல் நான்கு கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.
இந்த நிலையில் புஷ்பா படத்தில் இடம்பெறும் ஐட்டம் பாடலுக்கு நடனமாட அழைப்பு வந்தது.அந்த பாடலுக்கு நடனமாட முதலில் சமந்தா தயங்கியதாகவும் ஆனால் அல்லு அர்ஜுன் நேரடியாக சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி 5 கோடி சம்பளம் தருவதாக கூறியதை அடுத்து அவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறதுஇதனை அடுத்து ‘ஓ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா வாங்கிய சம்பளம் 5 கோடி என்று கூறப்படுகிறது.
இந்த பாடல் படத்தில் மூன்றே மூன்று நிமிடங்கள்தான் வரும் என்றும் இந்த பாடலை படமாக்க சுமார் 7 மணி நேரம் மட்டுமே ஆனதாகவும் கூறப்படுகிறது. ஏழு மணி நேரத்தில் 5 கோடி ரூபா சம்பாதித்து உள்ள சமந்தாவை பார்த்து தெலுங்கு திரையுலகமே ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளது
‘சார்பட்டா’வுக்கு சர்வதேச அங்கீகாரம்
நடிகர் ஆர்யா, பசுபதி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. இப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து, நியூசிலாந்தைச் சேர்ந்த டநவவநசடிழஒநன என்ற இணையதளம் 2021 ஆம் ஆண்டு வெளியான உலகின் சிறந்த 10 ஆக்சன் படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.அதில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சர்பட்டா பரம்பரம் படம்3 வது இடத்தைப் பிடித்துள்ளது. எனவே இப்படக்குழுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சூர்யாவின் ”வாடிவாசல்” ஓடிடி உரிமை 50 கோடி ரூபா
சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது.
ஆனால் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ளார். அதற்கடுத்தும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அதே போல வெற்றிமாறனும் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.இருவரும் தங்கள் படங்களை முடித்த பிறகு வாடிவாசல் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சூர்யா பாலா மற்றும் சிறுத்தை சிவா ஆகியோரின் படங்களை இயக்கிய பின்னரே வாடிவாசல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம். ஆனாலும் அந்த படத்தின் வியாபார வேலைகளை தயாரிப்பாளர் தாணு தொடங்கிவிட்டார். இந்த படத்தின் ஓடிடி உரிமையை சோனி லிவ் சேனலுக்கு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்துள்ளாராம். ஓடிடி உரிமைக்காக 50 கோடி ரூபா பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
திரையரங்கில் வெளியாகி பின்னர் ஓடிடியில் வெளியாகும் படம் ஒன்றுக்கு இவ்வளவு தொகையா என்ற ஆச்சர்யமே எழுந்துள்ளது. அதற்குக் காரணம் சூர்யாவின் ஓடிடி படங்களான சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகியவை அடைந்த வெற்றியே என சொல்லப்படுகிறது.
பொன்னியின் செல்வனில் எம்.ஜி.ஆர்
எழுத்தாளர் கல்கி 1950களில் எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் உலகின் கிளாசிக் நாவலாக பல ஆண்டுகளாக கோலோச்சி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புத்தக சந்தையின் போதும் அதிகமாக விற்கும் புத்தகங்களின் பட்டியலில் பொன்னியின் செல்வன் நாவல் கண்டிப்பாக முன்னிலையில் இருக்கும்.
இந்த நாவலை எம்ஜிஆர் படமாக்க வேண்டும் என்று முயன்று, அதற்காக இயக்குநர் மகேந்திரனை திரைக்கதை எழுத வைத்தார். ஆனால் பல காரணங்களால் அது நடக்கவில்லை. பின்னர் தன் தயாரிப்பில் கமல் நடிப்பில் அதை உருவாக்க வேண்டும் என நினைத்தார்.
ஆனால் அதுவும் கைகூடவில்லை. அதன் பின்னர் இயக்குநர் மணிரத்னம் பல முயற்சிகளுக்குப் பிறகு இப்போது இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகிறார்.அவரை தவிர ரஜினியின் இளையமகள் பொன்னியின் செல்வனை வெப் தொடராக தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் இப்போது எம் ஜி ஆரை அனிமேஷன் கதாபாத்திரமாக மாற்றி பொன்னியின் செல்வனை திரைப்படமாகவும், வெப் சீரிஸாகவும் உருவாக்க இருக்கிறார்கள்.இளையராஜா இசையமைக்க இருக்கும் இப்படத்தை அஜய் பிரதீப் இயக்க இருக்கிறார்.
1,027 total views, 3 views today