திருமதி ஜெயபவானி சிவகுமாரன் மகளிர் தினத்தை முன்னிட்டு வெற்றிமணியின் ‘கௌரவ ஆசிரியர்;’ ஆக கௌரவம் பெற்றார்!

ஆண்டு தோறும்,பங்குனி மாதம் வெற்றி மணி ஒரு சிறப்பான பணிபுரிந்த பெண்ணை பங்குனி மாத இதழுக்கு கௌரவ ஆசிரியராக நியமித்து கௌரவிப்பது வழக்கம். இந்த வகையில் 28 வருடங்கள் வெற்றிமணியின் வெற்றிகளுக்கும், அதன் வளர்ச்சிக்கும் பின்னின்று உழைத்த எனது மனைவி, முன்னாள் ஆசிரியை திருமதி ஜெயபவானி சிவகுமாரன் அவர்களை பங்குனி இதழின் கௌரவ ஆசிரியராக நியமித்து அவரது சிறப்பான பணியை வெற்றிமணி பதிவுசெய்கிறது. 28வருடங்கள். பத்திரிகை வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பவர், அறிவாகவும், எதிர்மறை கருத்துகளை விதைக்காமலும்,எவரையும் புண்படுத்தாத மென்மையான போக்கை பத்திரிகையில் கட்டி வளர்த்தவர், பொருளாதார ரீதியில் பெரும் பங்கும் அளித்தவர்,அதிகாலை 4 மணிக்கு எழுந்து வெற்றிமணிக்கு வேண்டியவற்றைக் கணனியில் செய்து தந்துவிட்டே வேலைக்கும் சென்றவர்.

இவர் இலங்கையில் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியராக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் தகமை பெற்றவர். புலம்பெயர்ந்து யேர்மனி வரும்வரை பல வருடங்கள் ஆசிரியப்பணி புரிந்தவர். இறுதியாக (1985)வவுனியா இரம்பைக்குளம் அரசினர் மகளிர் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தவர்.

திருமதி ஜெயபவானி சிவகுமாரன் மகளிர் தினத்தை முன்னிட்டு
வெற்றிமணியின் ‘கௌரவ ஆசிரியர்;’ ஆக கௌரவம் பெற்றார்!

ஆசிரியை திருமதி ஜெயபவானி சிவகுமாரன் அன்பாக மாணவர்களிடம் பழகுவதையும், எளிமையான சேலை உடுத்தி பாடசாலைக்கு வருவதையும் இன்றும் மாணவர்கள் எடுத்து கூறுவார்கள். இந்த எளிமைக் கோலம் யேர்மனி யிலும் வெற்றிமணி விழாக்களில் காண முடிந்தது.

ஒலிவாங்கிக்கு முன்னால் எக்காலமும் நிற்காதவர், யேர்மனியில் 38க்கு மேற்பட்ட விழாக்கள் சிறக்க பின் நின்றவர். வீடே விழாக்கோலம் பூண்டு இருக்கும்படியும் பார்த்துக்கொண்டவர். விழாக்கால விருந்தினர்களை வீட்டில் அன்போடு உபசரித்து, மலர் முகத்தோடு வரவேற்பவர்.

மனைவியை பத்திரிகை எழுத்து பிழை பார்க்கச் சொன்னால், கருத்துப்பிழை மேலே அதிக கவனம் செலுத்துவார். யாரும் கட்டுரை கவிதைகள் மூலமும் தனிப்பட்டவவர்களை தாக்கும் பகுதி வந்தால் அதனை உன்னிப்பாக கவனித்து அகற்றுவார்.
அதிகம் பேசாதவர், அதனால் நட்புவட்டம் மிகக்குறைவே. குறிப்பாக தொலைபேசியில் நீண்டநேரம் பேசியதை நான் பார்த்ததே இல்லை. (தனிமையில் இருக்கும் வயதானவர்களிடம், உறவினர்கள் உட்பட பலரிடமும் சற்று நீண்ட நேரம் உரையாடி அவர்கள் தனிமையை போக்குவார்) எவரிடமும் பணம் சேர்த்து பிறருக்கு உதவுவதை அவர் விரும்புவது இல்லை. முடிந்தவரை எமது வருமானத்தில் தாயகத்தில் மாணவர் கல்விக்கு உதவினார். அந்த மாணவர்கள் படமோ செய்தியோ வெற்றிமணி யிலும் குயஉநடிழழம இலும் வராமல் பார்த்து கொண்டார். பல்கலைக்கழகம் வரை மாணவர்கள் கல்விகற்றனர்.

தனது பிள்ளைகள் கற்று முடிந்து திருமணமானதும், நல் ஊதியத்துடன் சிறந்த வேலையை தானே முன்வந்து இராஜினாமா செய்தார். இப்படி வருமானம் உள்ள ஒரு வேலையை இப்படி துணிவாக விட்டுவிடும் ஆண்களும் பெண்களும் அரிதே. 1989 முதல் 2010 வரை மழளவயட நிறுவனத்தில் வேலை செய்தார். 21 வருடத்தில் சும்மா சிக்லீவு எடுத்ததில்லை. மொத்தம் 21 வருடத்தில் 40 நாட்களுக்கும் குறைவாகவே சிக்லீவு எடுத்துள்ளார் என நிர்வாகமே பாராட்டியது.
இவரை எனது மனைவி என்பதாலோ, அல்லது இது தற்புகழ்ச்சி என்றோ தவிர்த்துவிட முடியாது.
எனது வெற்றிக்கு பின்னால் யார் யார் என்பதில் என் மனைவியும் ஒருவர் என்பதை வெற்றிமணி வரலாற்றில் பதிவிட, பங்குனி மாதம், ஆசிரியை திருமதி ஜெயபவானி சிவகுமாரன் அவர்களை வெற்றிமணியின் கௌரவ ஆசிரியராக நியமித்து மகிழ்கிறது.

1,089 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *