வாழ நினைத்தால் வாழலாம்.

திருமதி.யோ.சாந்தி.

தாயகத்தில் பருத்திதுறை நகரில்.திருமதி.சண்முகலிங்கம் செல்வராணி என்கின்ற சுறுசுறுப்பான ஒரு அன்னை, பல வருடங்களாக மரக்கறிகள் சந்தையில் விற்று வாழ்ந்து வருகிறார். தனது 22 வயது முதல் (51 வருடங்கள்) காலை 4.30க்கு எழுந்து கொடிகாமம் சந்தைக்குச் சென்று வேண்டிய மரக்கறிகள் வாங்கி, சரியாக காலை 7.30 க்கு சந்தைக்கு வந்து சேர்வார். இவரது கணவன் நோய்காரணமாக இறந்;தபின்பும்,தனது குடும்பத்தை சிறப்பாக தனது கடின உழைப்பால் நிர்வாகித்தார். இவர் தனது வருமானத்தில் பிள்ளைகளை வளர்த்து அவர்களுக்கு உரிய காலத்தில் திருமணம் செய்து வைத்து, தற்போதும் தன்னால் முடியும்வரை உழைத்தே உண்ணுவேன் என்ற மனதிடத்துடன் வாழ்ந்து வருகிறார். 13 வயதில் தான் திருமணம் செய்தாகவும் 15 வயதில் குழந்தைகள் பெற்றதாகவும் தன் கடந்தகால வாழ்க்கையை, திறந்த புத்தகமாக பகிர்கிறார். இவர் ஏனைய முதியவர்களுக்கு மட்டுமல்ல, இளையவர்களுக்கும் ஒரு பாடமாக தனது விடா முயற்சியால்;, வியாபாரத்தில் உயர்ந்து இருக்கிறார். உயர்ந்து என்றால் இலட்சங்கள் என எண்ணவேண்டாம். தன் இலட்சியத்தால் என்று கொள்ளவும். இதுவரை எந்த நோயும் அவரை அணுகாதபடி தன்னுடம்பை தனது வாழ்க்கை முறை காத்துவருவதாகக் கூறுகிறார். 73 வயதான இந்த அன்னையை பங்குனி மாதம் மகளிர்தினம் கொண்டாடும் இவ்வேளையில் புதுமைப்பெண்ணாக வெற்றிமணி கௌரவித்து மகிழ்கிறது.

1,069 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *