ரஜினியுடன் இணையும் ஐஸ்வர்யா ராய் ?

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் எந்த இயக்குநருடன் கைகோர்க்க போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டி ருந்தார்கள்.
அப்படி, அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் விதமாக நெல்சன் திலிப்குமார் தான், ரஜினி 169 படத்தை இயக்கவுள்ளார் என்று சன் பிச்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் மீண்டும் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் இணைந்து இயக்கவுள்ள படம் ரஜினி 169.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க போவது யார் என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.அதற்கு பதிலளிக்கும் விதமாக, ரஜினி 169 படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக பொ லிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் இணைந்து இதற்கு முன், எந்திரன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரலாறு காணாத வெற்றி பெற்றது.
சிவகார்த்திகேயன் ஜோடியான பிரிட்டிஷ் நடிகை
சிவகார்த்திகேயன் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘எஸ்.கே 20’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரிட்டிஷ் நடிகையான ஒலிவியா மோரிஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒலிவியா மோரிஸ் தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கியிருக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
கலக்கும் “காத்து வாக்குல ரெண்டு காதல்”
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”.
‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் காதல் நகைச்சுவையாக இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையில் வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து பெரு வரவேற்பு பெற்றுள்ளன.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. இப்படம் வரும் 2022 ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.