இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்!

-வாமினி குமணன் புநஎநடளடிரசப-புநசஅயலெ
எங்களுடைய பாவங்களை நீக்கி!
எங்களை இரட்சிக்க வந்தவரே!
பாவங்களுக்கு செத்து நீதிக்கு பிழைக்க!
எங்களுடைய பாவங்களை சரீரத்தில் சுமந்தவரே!
மரத்திலே தூக்கப்பட்டவன் சபிக்கப்பட்டவன்
இயேசு கிறிஸ்துவே எங்களுக்காக சாபமானீரே
சாபத்திற்கு நீக்கலாகி மீட்டவரே
கண்ணீரை நிந்தையை நீக்கியவரே
எங்களுக்காக அசட்டை பண்ணப்பட்டீரெ
சொந்தமானவர்களால் புறக்கணிக்கப்பட்டவரே
துக்கம் நிறைந்து பாடு அனுபவித்தீரே
சரீரம் கிழிக்கப்பட்டு தரையில் இரத்தம் சிந்தினீரே
எங்களுடைய மீறுதலால் காயப்பட்டவரே
எங்களுடைய அக்கிரமங்கயால் நொறுக்கப்பட்டவரே
உம்முடைய தழும்புகளால் குணமாக்கினீரே
எங்களுக்கு சமாதானத்தை தந்தீரே
சிலுவையில் எங்களுக்காய் தாகம் என்றீரே
திரைச்சீலை கிழிந்து பூமியை அதிரச்செய்தீரே
கன்மலைகள் பிளந்து கல்லறைகள் திறந்தீரே
பரிசுத்தவான்கள் எழுந்திருக்கச் செய்தீரே
மரணத்தை ஜெயமாக விழுங்கினீரே
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தீரே
பாதாளத்தின் திறவுகோலை எடுத்தீரே
மரணத்தின் திறவுகோலை எடுத்தீரே
உம்சீசர்களுக்கு வாழ்க சமாதானம் என்றீரே
வாருங்கள் போஜனம் பண்ணுங்கள் என்றீரே
சத்தியம் சொல்லி நீதிமானாக்கு என்றீரே
பரலோகம் சென்று தேவதூதர்களுடன் மீண்டும்
வந்து பரிசுத்தவான்களை அழைத்துச் செல்வேன் என்றீரே
வானத்திலம் பூமியிலும் அதிகாரமுடையவரே
உலகத்தின் முடிவு பரியந்தமும்
சாலநாட்களும் உம்முடன் இருப்பேன் என்றீரே
தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்கிறவன்
பாக்கியவான் என்றீரே
-கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்
அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்-
(சங்கீ:34:8)