150 வருடங்கள் வரை வாழ்வோமா?

இன்று புவியில் வாழும் மனிதன் சராசரியாக 72.6 வருடங்கள் வரை வாழ்கின்றான். நாம் எந்த நாட்டில் வாழ்கின்றோம், அந்த நாட்டின் தொழினுட்ப மற்றும் மருத்துவ வளர்ச்சி போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நாம் வாழும் காலம் நீடிக்கலாம் அல்லது குறைந்தும் போகலாம். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? நமது உடல் 150 வருடங்கள் வரை வாழக்கூடியதாக அமைந்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம், முடியும் ஆனால் அதற்குப் பல விதமான முன்நிபந்னைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவை எவை என்பதை மட்டுமில்லாமல், ,வ்வாறு பூமியில் அனைவரும் 150 வருடங்கள் வரை வாழ்ந்தால் நம் நிலை எவ்வாறு ,ருக்கும் என்பதையும் அறிய விரும்பினால் தொடர்ந்து படியுங்கள்.
,ன்று வரை அதிக வருடங்கள் வாழ்ந்தவர் என்கின்ற பட்டியலில் முதல் ,டத்தை துநயnநெ ஊயடஅநவெ எனும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு பெண் பிடித்துள்ளார். ,வர் 122 வருடங்கள் 165 நாட்கள் வரை வாழ்ந்தார். எனவே 150 வருடங்கள் வரை வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். அதற்கு நான் ஆரம்பத்தில் கூறியது போல் ஒரு சில முன்நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். குறிப்பாக நாம் ,றப்பதற்குக் காரணமாக ,ருக்கும் காரணங்கள் அதாவது நோய்களையும் விபத்துகளையும் நீக்க வேண்டும். அதைத் தொடர்ந்து விஞ்ஞானத்தின் மற்றும் நவீன தொழினுட்பங்களின் உதவியுடன் நமது உடல் உறுப்புகளை மாற்றி அமைக்கக் கூடிய நிலை வர வேண்டும். அதாவது பழுதடைந்த உறுப்புகளுக்குப் பதிலாக, உதாரணத்திற்கு ,ருதயம், ஒரு கை, நுரையீரல் அல்லது கண்கள் போன்றவற்றைச் செயற்கையாக உருவாக்கிய ஒரு ,ருதயம், கை, நுரையீரல் அல்லது கண்களால் மாற்றி அமைக்கக்கூடிய ஒரு நிலைமை வர வேண்டும். ,து எல்லாம் ,ருந்தால் தான் நாம் 150 வருடங்கள் வரை வாழ்வதற்கான அடிப்படை உருவாகும்.

சரி ,து எல்லாமே நமது புவியில் காணப்படுகிறது என்று எடுத்துக்கொள்வோம். எல்லோருமே 150 வருடங்கள் வரை வாழ முடியும். ,னி என்ன…? ,தன் விளைவு என்ன ஆகும்? வாங்க அதையும் பார்க்கலாம்…
,தனால் ஒரு மாபெரும் பிரச்சனை உருவாகிவிடும். 150 வருடங்கள் வரை மனிதர்கள் வாழ்கின்றனர் என்றால், பூமியில் வாழும் மனிதர்களின் எண்ணிக்கை மல மடங்கிற்கு அதிகரித்து விடும். ,தன் விளைவாக உணவு தட்டுப்பாடு ஏற்படும். குறிப்பாக ,ன்றைய காலத்திலேயே உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் உணவு கிடைப்பதிலில்லை. ,ந்நிலையில் சனத்தொகை அதிகரித்தால் எவ்வாறு அது சாத்தியமாகும்? எனவே ,தற்கு என்ன செய்யலாம்? மிகச் சுலபமான ஒரு தீர்வு ஒன்று தான். நாம் உணவு வீணாக்குவதை நிறுத்த வேண்டும். உலகெங்கும் உற்பத்தி செய்யப்படும் உணவில் 25மூ வரை குப்பைக்குள் போகின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா? ,தை விட ,றைச்சி உற்பத்தியினால் சூழல் மாசடைதல் அதிகரித்துக்கொண்டு போவது மட்டுமில்லாமல், அதற்கு நமது புவியின் 40மூ நிலம் தேவைப் படுகிறது. சனத்தொகை அதிகரிக்கும் வேளையில் அந்த 40மூ நிலம் மனிதர்கள் வாழ்வதற்கு அத்தியாவசியமாகிவிடும். எனவே ,தன் விளைவாக மனிதர்கள் அதிகளவில் தாவர அடிப்படையில் உருவாக்கப்பட்ட உணவுகளை உண்பதற்கு முயலவேண்டும். அதற்காக முற்றிலும் அவ்வாறு உண்ண வேண்டும் என்று ,ல்லை. கடலுணவுகள் மற்றும் முட்டையில் மிக முக்கிய ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. அவற்றையும் நமது சாப்பாட்டில் சேர்க்க வேண்டியது அவசியமாகும்.
150 வருடங்கள் வரை வாழ்வது என்றால் 67 வயதில் வேலையை நிறுத்திவிட முடியாது. நிறுத்திவிட்டு என்ன செய்வது? மீதியிருக்கும் 83 வருடங்கள் வீட்டில் வருமானம் ,ல்லாமல் எப்படி ,ருக்க முடியும்? ஆகவே நாம் மேலும் பல ஆண்டுகள் வேலை செய்யத் தான் வேண்டும். அவ்வாறு செய்தால் தான் நமது மூளைக்கும் உடலுக்கும் வேலை கொடுக்கலாம்.

,தைத் தவிர்த்து உலகில் சராசரியாக வாழும் திருமணமாகிய தம்பதிகள் 7 வருடங்கள் வரை தான் சேர்ந்து வாழ்வார்களாம். ,து உலகில் வாழும் அனைத்து தம்பதிகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கணிப்பீடு ஆகும். ,லங்கை, ,ந்தியா போன்ற நாடுகளில் ,து வேறு பட்டு ,ருக்கலாம். சரி ,ருந்தாலும் உலகின் சராசரியான 7 வருடங்களையே எடுத்துக்கொள்வோம். அப்படி என்றால் 150 வருடம் வரை வாழும் மனிதன் எத்தனை திருமணங்களைச் செய்வான் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். அது மட்டுமில்லாமல் பிள்ளைகள் பெறும் வயதும் அதிகரித்து விடுமாம். ,ன்று வரை அதிக வயதில் ஒரு பிள்ளையைப் பெற்ற ஒரு தாயின் வயது 73 ஆகும். 150 வருடங்கள் வரை வாழும் மனிதனும் ,ன்று போல் 20-40 வயதளவில் பிள்ளைகள் பெறாமல் 70 வயதிற்குப் பிறகு தான் பிள்ளைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று எண்ணப்படுகிறது. அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு வருடமும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறையும் என்பது விஞ்ஞானம் சொல்கிறது.

என்ன தான் 150 வருடங்கள் வரை வாழலாம் என்பது பலருக்குப் பிடித்த ஒரு விஷயமாக ,ருந்தாலும் கூட, ,தன் விளைவுகளைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். ,தில் உள்ள சுவாரசியம் என்னவென்றால், விஞ்ஞானத்தின் மற்றும் நவீன தொழினுட்பத்தின் வேகத்தினால் நமக்கு ,வ்விளைவுகளைப் பற்றிச் சிந்திப்பதற்கு நேரம் ,ருக்குமா என்று தான் தெரியவில்லை. ஏனெனில் 150 வருடங்கள் வரை வாழ்வது என்பது வெகு தூரத்தில் ,ருக்கும் எதிர்காலம் கிடையாது. அது மிக அருகில் வந்து விட்டது. நாம் அதை அனுபவிக்காமல் விட்டாலும், நமக்கு அடுத்து வரும் சந்ததியினர் 150 ஆண்டுகள் வரை வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்பது தான் உண்மை ஆகும்.

சரி ,னி நீங்கள் கூறுங்கள். உங்களுக்கும் 150 வருடங்கள் வாழவேண்டும் என்கின்ற ஆசை உள்ளதா?

1,275 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *