அரங்கேற்றம்!

யேர்மனியில் சிறப்பாக இடம்பெற்ற
செல்வி.அபிரா.ரவீந்திரநாதன் அவர்களின் அரங்கேற்றம்!

யேர்மனியில் பரதக்கலைக்கு நல் அறுவடைக்காலம்
விதைத்தவர்களை நினைவில் நிறுத்துவோம்
வெற்றிமணி. மு. க. சு. சிவகுமாரன்

யேர்மனியில், கடந்த 02.04.2022 சனிக்கிழமை, செல்வி அபிரா ரவீந்திரநாதன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் வெகு சிறப்பாக வூப்பெற்றால் நகரில் வூப்பர் மண்டபத்தில் நடைபெற்றது.

இவர் நாட்டிய கலாஜோதி திருமதி யனுஷா பிரதீப் அவர்களின் மாணவியும், திரு, திருமதி ரவீந்திரநாதன் அவர்களின் புதல்வியும் ஆவார்.

பிரதம விருந்தினராக சூரிச் திருக் கோணேஸ்வரர் நடனாலயம் திருமதி டாக்டர் மதிவதனி சுதாகரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக நாட்டியக்கலா ரத்னா, சாவித்திரி சரவணன் ஆயு, ஆ. phடை அவர்களும்,கௌரவ விருந்தினராக, வயலின் ஆசிரியை, இசைக்கலைமணி திருமதி பாலஜோதி அமிர்தலிங்கம்,அவர்களும், வெற்றிமணி பத்திரிகை பிரதம ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களும்,ஸ்ரீமதி. துஷ்யந்த் ஜெகதீஸ்வரன், அவர்களும், கலந்து சிறப்பித்தனர்.

கோவிட் காலத்தில் அடைபட்டு இருந்த ஆடற்கலை அரங்கேற்றங்கள் மீண்டும் மக்கள் முன்னிலையில் வந்து அரங்கேற்றம் காண்பது, மனதிற்கு ஆனந்தத்தையும், உற்சாகத்தையும் தந்தது. பார்வையாளர்களின் கரவொலியே சான்று,பரதத்திற்கு எவ்வளவு தாளம் முக்கியமோ, அதுபோல கலைவளர கரவொலி முக்கியம். இது ஆயிரம் லக்குகளை( டுமைந) விட ஆனந்தம் தரும்.

பிரதம விருந்தினர் மதிவதனி சுதாகரன், மாணவியினதும் குருவினதும், திறமைகளை துல்லியமாக எடுத்துரைத்தார். திருமதி சாவித்திரி சரவணன் அவர்களது முதல் மாணவியான யனுஷா பிரதீப் அவர்களின் அரங்கேற்றம் இதே மண்டபத்தில் அன்று நடைபெற்றது, இன்று அவர்களது மாணவி அபிரா ரவீந்திரநாதன் அவர்களின் அரங்கேற்றம் நடைபெறுகின்றது. எனது மாணவியின் மாணவி அரங்கேற்றம் காணும் இந்த நிகழ்வு எவ்வளவு பெருமிதம் அடைய வைக்கும் என்பதனை கலைஞர்கள் நன்கு உணர்வார்கள் என்றார்.
வெற்றி மணி ஆசிரியர் தனதுரையில்‘ அன்று யேர்மனியில் விதைக்கப்பட்ட விதைகளின் அறுவடைக்காலம். இக்காலத்தில் மாணவர்கள் விதைத்தவர்களை மறவது அவர்களுக்களுக்கு நன்றி உள்ளவர்களாக அவர்களது பெயரை காலம் எல்லாம் சொல்லவேண்டும்.‘என்றார். வெற்றிமணி சார்பாக அபிரா ரவீந்திரநாதன் அவர்களுக்கு வளர்கலை விருது வழங்கி கௌரவித்தார். மேற்படி விருதை மாணவியின் குரு திருமதி யனுஷா பிரதீப் அவர்களின் குருவான சாவித்திரி சரவணன் வழங்கியது மேலும் சிறப்பாக அமைந்தது.

பக்கவாத்திய கலைஞர்களாக, நட்டுவாங்கம் திருமதி யனுஷா பிரதீப், பாட்டு, திரு. நீரூஜன்.ஜெகசோதி,மிருதங்கம்,திரு.ருக்ஷன்.சிறீரங்கராஜா,வயலின்,பிரதிப் கனகலிங்கம், புல்லாங்குழல் சுப்பிரமணிய சிவா, ஆகிய இளைஞர் அணி அலங்கரித்தது. நிகழ்ச்சியை திருமதி பென்சிகா. அல்பேர்ட். பொன். பொஸ்க்கோ சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

1,075 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *