பூட்டிய கதவைத் துறந்து வெளியே வாருங்கள்
!
சேவியர்
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் – என்பது போல நமது வாழ்க்கையின் சில வருடங்களை கொரோனா வந்து கடித்துத் தின்று ஏப்பம் விட்டு விட்டுச் சென்று விட்டது. அது விழுங்கி முடித்த வருடங்களோடு பல உயிர்களும் கலந்து விட்டது தான் மாபெரும் துயரம். சட்டென திரும்பிப் பார்க்கும்போது நமது ஆயுளில் விழுந்து விட்ட ஒரு கீறல் அழுத்தமாகவே தெரிகிறது.
கொரோனா ஆரம்பிக்கும் முன் யாருமே அதன் வீரியத்தை முழுதாய்ப் புரிந்து கொள்ளவில்லை. உலகின் ஏதோ ஒரு மூலையில் தோன்றி அங்கேயே அடங்கிவிடும் என்று தான் முதலில் நினைத்தார்கள். நம்ம நாட்டுக்கு வராது, நம்ம மாநிலத்துக்கு வராது, நம்ம ஏரியாவுக்கு வராது, நம்ம தெருவுக்கு வராது, நம்ம வீட்டுக்கு வராது, நமக்கு வராது… என படிப்படியாய் நம்பி, நொந்து போனவர்கள் தான் அநேகம். கொரோனா உலகெங்கும் பரவி எல்லோரையும் கிலிக்குள் மூழ்கடித்தது புவி அறிந்த வரலாறு.
கொள்ளை நோய்களெல்லாம் அறிவியல் வளராத காலத்தின் புனைக் கதைகள் என நினைத்தவர்களும், இன்று மருத்துவம் கொடிகட்டிப் பறக்கிறது எல்லாமே சட்டென அடங்கிவிடும் என நம்பியவர்களும், எந்த நோயும் நம்மை ஒன்றும் செய்யாது என மீசை முறுக்கியவர்களும் ஒட்டு மொத்தமாய் கதவுகளுக்குள் அடைபட்டுப் போன நிகழ்வை நாம் நேரடியாகக் கண்டோம்.
இந்த கதவடைப்பின் காலம் நமக்குக் கற்றுத் தந்த வாழ்க்கைப் பாடங்கள் எக்கச் சக்கம். எல்லாவற்றையும் விட உயிர் தான் முக்கியம் என்றும், உயிருக்கு உயிரானவர்களாய் இருந்தால் கூட தொற்று நோய் வந்துவிட்டால் அவர்களை எதிரியாகவே பாவிப்பது சர்வ சாதாரணம் என்றும், தனக்கு அடுத்து தான் பிறர் நலன் என்றும், பணம் எல்லாம் ஒன்றுமே இல்லை என்றும் பல விஷயங்களை சாமான்யர்களுக்குக் கற்றுத் தந்தது கொரோனா.
அதே நேரத்தில் சிலர் இதை மனிதம் விற்று பணத்தை நிரப்பும் வாய்ப்பாகப் பார்த்தார்கள். உதவித் தொகைகளை விழுங்கி ஏப்பம் விட்டார்கள். மருந்துகளைப் பதுக்கிக் கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள். மருத்துவச் சேவைக்காய் சொத்தையே எழுதி வாங்கினார்கள். கள்ளச் சந்தைகளில் மனிதநேயத்தைக் கொன்று சுயநலம் பொறுக்கினார்கள்.
காலம் கனிவானது.தனது கொடூர வேட்டையை நிறுத்தி விட்டு இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் மக்களுக்கு விடுதலைக் காற்றை சுவாசிக்க வாய்ப்பு வழங்கியிருக்கிறது. மாஸ்க்களுக்குள் புதையுண்டு போயிருந்த புன்னகையை மீண்டும் முகத்தின் முன்னால் கொண்டு நிறுத்தியிருக்கிறது.
தற்காலிகத் தடங்கல்கள், நிரந்தர மாற்றங்களை நோக்கி நம்மை நடத்த வேண்டும். அடைபட்ட கற்கள் உடைபடும் போது புதிய விடியலின் கதவு திறந்தாக வேண்டும்.
அடைக்கப்பட்ட கதவுகள் தோல்வியின் முகவரிகள்.
திறக்கப் படும் கதவுகளே வெற்றியின் வரவேற்பாளர்கள்.
அடைக்கப்பட்ட கதவுகள், அடிமை நிலையின் குறியீடுகள்.
உடைக்கப்பட்ட கதவுகளே சுதந்திர மனதின் வெளிப்பாடுகள்.
அடைக்கப்பட்ட கதவுகள் சுயநலத்தின் சின்னங்கள்.
திறக்கப்படும் கதவுகளே மனிதத்தின் சாரல்கள்
அடைகப்பட்ட கதவுகள் அச்சத்தின் மிச்சங்கள்.
திறக்கப்படும் கதவுகளே உறுதியின் உரையாடல்கள்.
போதும்.கதவுகளுக்குள் காலங்களைப் பூட்டி வைத்தது போதும்,இனி பூட்டிய கதவுகளைத் திறந்து வெளியே வருவோம். இதுவரை டிஜிடல் கதவுகளுக்குள் பூட்டப்பட்டுக் கிடந்த நாம் மெல்ல மெல்ல டிஜிடலைக கதவுகளுக்குள் பூட்டி வைத்து விட்டு நிஜத்தின் வீதிகளில் நடந்து வர வேண்டும். எதை விடவும் உயர்வானது உயிர் என்பதும், அன்பு என்பதும், மனித நேயம் என்பதும் நமக்கு நிச்சயம் புரிந்திருக்கும். இனிமேல் டிஜிடல் சாவிகள் நம்மைக் கைதியாய் அடைத்து விடாதபடி கவனமாய் இருப்போம். கதவு திறந்து வெளியே வருவோம்.
இதுவரை சந்திக்க மறுத்தோ, சந்திக்க வெறுத்தோ, சந்திக்கத் தயங்கியோ ஒதுக்கப்பட்டிருந்தவர்களை நேரில் சந்திப்போம். சானிடைசர்கள் இல்லாத கரங்களினால் கைகுலுக்குவோம். தூரமாய் நின்று விட்டு ஓரமாய்ப் போவதற்கு முடிவு கட்டுவோம். தனிமை எனும் கதவுகளைத் திறந்து வெளியே வருவோம், உறவு எனும் பெருவெளியில் விளையாடித் திரிவோம்.
அச்சம் எனும் கதவினைப் புரட்டி, நம்பிக்கை எனும் பாதைகளில் நடக்கத் துவங்குவோம். எந்த ஒரு மாபெரும் இருளின் முடிவிலும் ஒரு மெல்லிய ஒளியேனும் உண்டு என்பதை இந்த காலகட்டம் நமக்கு விளக்கியிருக்கிறது. இருளின் நினைவுகளுக்குள் நின்றுவிடுவதால் வாழ்க்கை வளம் பெறுவதில்லை. ஒளியின் இழைகளைப் பிடித்துக் கொண்டு நடக்கத் துவங்குவதில் தான் அது அர்த்தம் பெறுகிறது. ஒரு இருளின் முடிவுரையில், வெளிச்சத்தின் முகவுரையை நாம் தொடங்குவோம்.
மருத்துவ மிரட்டல்கள் பூட்டிய மாபெரும் கதவினை உடைத்து, யதார்த்தத்தின் வீதிக்கு வருவோம். உடலை வலுவாகவும், மனதை திடமாகவும் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திப்போம்.கெட்ட பழக்கங்களை விட்டொழிப்பதும், நல்ல பழக்கங்களை தொட்டெடுப்பதும் இன்றைய தேவை என்பதை உணர்வோம். வலுவான உடலும் மனமும் நம்மை வளமான வாழ்வுக்குள் அழைத்துச் செல்ல முடியும் என்பதை நினைவில் கொள்வோம்.
வாழ்க்கையின் முதன்மையான விஷயங்கள் என்ன ? வாழ்க்கையில் முக்கியமற்ற விஷயங்கள் என்ன என்பதில் இதுவரை நமக்கு குழப்பங்கள் இருந்திருக்கலாம்.ஆனால் இப்போது தெளிவடைந்திருப்போம். கோவிட் பாசிடிவ் வந்தபின் மீண்டு வந்தவர்களெல்லாம், வாழ்க்கையை புதிய பாசிடிவ் திசையில் பார்க்கப் பழகியிருப்பார்கள். தேவையற்ற முதன்மைகளை உடைத்து, மனிதமும் அன்பும் உலவும் புதிய முதன்மைகளை உருவாக்குவோம்.
கடந்த காலத்தின் நிகழ்வுகள் நமக்கு பாடங்களைக் கற்றுத் தரவேண்டும். அவை நமக்கு சவால்களைச் சந்திக்கும் வீரத்தைக் கற்றுத் தரவேண்டும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலைக் கற்றுத் தரவேண்டும்.
வெளிவருவோம். இனிமேல் இடைவெளியற்ற மனிதத்தை, தடைகளே இன்றி பரிமாறி மகிழ்வோம். தயக்கமற்ற அன்பின் தொடுதல்களால் அன்பினைப் பகிர்வோம். கிருமிகளை விட வலிமையானது உறவுகள் என்பதை உணர்வோம்.
கணவன் கரைசேர்ந்தார்!
இங்கிலாந்து பெரும்தெருவில் ஒரு சம்பவம்!
-சிவப்பிரியன்
நுபெடயனெ ஆ6 (hiபாறயல)
நுபெடயனெ ஆ6 hiபாறயல இங்கிலாந்தில் (28.03.2022) நேற்றைய முன்தினம் 6ம் இலக்க ர்iபா றயல இல் திடீர் என வசயககiஉ தயஅ ஏற்பட்டது. நீண்ட நேரத்தின் பின் யாவரும் கடந்து சென்றபோது. அங்கு விபத்து ஏதும் ஏற்பட்டதற்காகான தடங்கள் ஏதும் இல்லை.
அதே நேரம் பெரும் தெரு திருத்தவேலைகளும் ஏதும் இல்லை. சினம் கொண்ட பயணிகள் காரணத்தை அறிய முற்பட்டபோது ஒரு செய்தி கிடைத்தது.
அது உண்மையான உறுதியான செய்தி. ஆம் கணவன் மனைவி இருவருக்கும் காருக்குள் வாக்குவாதம் ஏற்பட, மனைவி கணவனை ஹைவேயில் இறக்கிவிட்டு சென்றுவிட்டா. கணவனும் ஹைவேயில் அங்கும் இங்குமாக நடந்திருக்கிறார். அவ்விடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் தெருவை மறித்து அந்த மனிதரை பக்குவமாமாக கரைசேர்த்தனர். கணவன் மனைவி சண்டை ஹைவேயை சில நேரம் மூடவேண்டி ஏற்பட்டது. நீங்கள் யோசிப்பது தெரிகிறது,அட நாம் போடாத சண்டையா இப்படித்தானே எண்ணுகிறீங்கள். நம் பெண்டாட்டி அப்படிப்பட்டவள் அல்ல!
1,124 total views, 4 views today