சினிமா பக்கம்
ஒருபோதும் நடவாது!
- சமந்தா
நடிகை சமந்தா சமீபத்தில் தனது விவாகரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம் ஆகியவற்றால் மிகவும் பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். ஆனால் சமந்தா இதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் கூலாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதையடுத்டு தற்போது அவர் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் யசோதா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட “என்றாவது ஒரு நாள் நீங்கள் டாட்டூ இட்டுக்கொள்ள வேண்டும் என நினைத்ததுண்டா?” என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் ‘நான் எப்போதும் என்றைக்கும் என் உடலில் டாட்டூ போட்டுக்கொள்ள மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.
ரஜினி, விஜய் விட்டா ஆளே இல்லையா !
சமீப காலமாக பிற மொழிகளில் எடுக்கப்பட்டு, தமிழில் டப் செய்யப்பட்ட படங்கள் வசூல் சாதனை படைத்து வருகின்றன. பாகுபலி, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் சாப்டர் 2, புஷ்பா போன்ற படங்களின் வசூலை பார்க்கையில் தமிழ் படங்களின் வசூல் சுமார் ரகம் தான். ரஜினியின் 2.0 மட்டுமே இதுவரை தமிழில் 700 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டி உள்ளது. அதற்கு பிறகு விஜய் படங்கள் தான் அதிகபட்சமாக 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்கின்றன. ரஜினி, விஜய்யை தொடர்ந்து தற்போது அஜித் நடித்த வலிமை 250 கோடி, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் 100 கோடி, சிம்பு நடித்த மாநாடு 100 கோடி வசூல்களை தாண்டி உள்ளன. தமிழ் சினிமாவில் 100 கோடி வசூலே மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆனால் பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்கள் மிக சாதாரணமாக 1000 கோடி வசூலை கடந்துள்ளன. இதற்கு என்ன காரணம், வேற்று மொழி படங்கள் தமிழில் வசூலை குவிக்க முடிகிறது என்றால் தமிழ் படங்களால் ஏன் அந்த சாதனையை எட்ட முடியவில்லை.
வசூல் பாதிக்க இதுதான் காரணமா? ஆர்ஆர்ஆர் படம் 3 ஆண்டுகள் உழைப்பை கொட்டி எடுத்தார்கள். பாகுபலி 6 ஆண்டுகள் உழைத்து எடுக்கப்பட்ட படம். ஆனால் தமிழ் நடிகர்கள் ஒரு வருடத்திற்கு 2 முதல் 3 படங்களில் நடிக்கிறார்கள். அவசரமாக படத்தை முடிக்க வேண்டும் என நினைப்பதால், படத்தின் தரம் குறைந்து விடுகிறது. அது வசூலை பாதிக்கிறது. அதே நேரம் தமிழ் சினிமாவில் சார்பட்டா பரம்பரை, டாணாக்காரன், ஜெய்பீம், கடைசி விவசாயி போன்ற நிறைய தரமான நல்ல படங்கள் வரத் தான் செய்கின்றன. ஆனால் இந்த படங்கள் எல்லாம் ஓடிடியில் மட்டுமே ரிலீஸ் செய்யப்படுகின்றன. தியேட்டருக்கு வருபவர்கள் பிரம்மாண்டத்தை மட்டுமே எதிர்பார்ப்பதால், தரமான படங்கள் பல வந்ததே பலருக்கு தெரியாமல் போய் விடுகிறன.
1,196 total views, 2 views today