தனிமை அவ்வளவு கடினமானது! I need privacy , I love privacy, I want privacy

ஆர்கலி- இலங்கை
இதனை உணர்ந்திட கொஞ்சம் காலம் எடுக்கும். இளமையும் துடிப்பும் நம்மை ஆரம்பத்தில் தனிமை படுத்துவதில் அவ்வளவு பிரயத்தனமான பிரியத்தை வெளிக்கொணரும். நம் ஆறாவது அறிவுக்கு தனிமை ஒரு கொடையாகவே தோன்றும். தனிமையை கொண்டாடும் பாடல் தெரிவுகளை pடயல டளைவ ல் வைப்பதும் அதனை பலமுறை கேட்டு இரசிப்பதுமாக இருப்பதும் நமக்குள் இவை யாவும் ஒரு கெத்து அழஅநவெ என்று எண்ணத்தை நெஞ்சில் பச்சை குத்திவிடுகிறது.
காரணம் I need privacy , I love privacy, I want privacy என்ற அர்த்தம் புரிந்திடாத கோட்பாடு தான். தனிமையில் இருப்பது எப்படி pசiஎயஉல ஆகும், தனியாக இருந்து தொலைபேசியில் மூழ்குவது எப்படி privacy ஆகும் , எனது அறை எனது பொருட்கள் எனக்கான ஒதுக்கங்கள் என நம்மை மட்டுப்படுத்தல் எப்படி privacy ஆகும். வாழ்வின் அத்தியாயங்கள் யாவும் தனிமையை தின்றுவிடும் மிடுக்கான சந்தோசங்களால் ஆனதே…
இங்கு privacy என்பது தனியாதல் அல்லது தனித்திருத்தல் என்று மொழிபெயர்த்து அர்த்தம் பார்த்துவிட்டோம். தனியுரிமை வேறு தனியாதல் வேறு. ஒரு கட்டுரையை கூட குறித்த space வழங்காது தொடர்ச்சியாக எழுதி விட்டால் அர்த்தம் புரியாது அழகும் இருக்காது. அதனால் அவை அவற்றுக்கான space கொடுப்பதற்கும் நாம் மறந்துவிடக் கூடாது.
ஒரு சில கணங்கள் நம்மை தனிமைப்படுத்தி அழகுபடுத்தினாலும் குறித்த கட்டத்தின் பின் இயல்பாகவே நம் மனது அருகில் ஒரு நண்பரையோ மடியில் தலை சாய ஒரு தாய்மையையோ கட்டியணைத்து நெஞ்சில் கண்ணீர் சிந்துவதற்கு ஒரு சிறந்த வாழ்க்கைத் துணையையோ தோளில் கண்ணுறங்க ஒரு சகோதரத்தையோ என்றும் எதிர்பார்த்து தேடி ஓட இந்த நெஞ்சம் கட்டளை இட்டுவிடும்.
நம் நிழலே நம் துணை நாடும் போது நாம் யாவரும் அவற்றின் அசல், பிறகெப்படி தனிமை விரும்புவோம். பாதியில் ஒட்டிக்கொண்ட தனிமையை மீண்டும் பாதியிலே கழற்றிவிட்டு நம் பாதையின் வழித்தடங்களில் குறைந்தது ஒருவரையயாவது அழைத்தவாறு அல்லது குறைந்தது ஒருவருடைய வழித்தடங்களையாவது பின்பற்றியவாறு நம் பயணத்தை நிகழ்த்திக் கடக்கிறோம் என்பதே நிதர்சனம்…
தனிமையும் அப்படித்தான் என்றுமே தனிமையில் இருந்ததில்லை. அதனை இடைநடுவே விட்டுச்சென்ற நம் எல்லோரின் துரோகத்தையையும் இணைத்து அது அதன் பாதையில் பயணத்திக் கொண்டுதான் உள்ளது…

  • அன்பு பகிர் தனிமை தவிர்

917 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *