ஐரோப்பிய பட்மின்ரன்; சாம்பியன் போட்டியில் யேர்மன் நாட்டிற்காக விளையாடும்; தமிழர்!
- பொன்.புத்திசிகாமணி, யேர்மனி.
ஐரோப்பிய பூப்பந்து (Badminton) சாம்பியன் போட்டியில் யேர்மன் தமிழர் ஒருவர் யேர்மன் நாட்டிற்காக விளையாட இருக்கிறார்! லிப்ஸ்ரட் (Lippstadt)ச் சேர்ந்த திரு துபிசன் பொன்னம்பலம் (Thupesan Ponampalam) என்பவரே இந்தச் சிறப்பிற்குரியவர்! மேற்படி போட்டிகள் எதிர்வரும் ஆவணிமாதம் 7ம்திகதி தொடக்கம்13ம் திகதிவரை ஸ்லோவீனியனில் (Slowenien)ல் நடைபெறும். இது இரட்டையர் பிரிவுப் போட்டியாகும். இவருடன் இணைந்து பீலபில்ட்டைச் (Bielefeld) ச் சேர்ந்த நடீன றக்மெல் (Nadine Rahmel) என்ற பெண்ணும் விளையாடுகிறார்.
யேர்மன் நாட்டிலிருந்து எட்டுக்குழுக்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவர்கள் இருவரும் அதில் ஐந்தாவதாகத் தெரிவு செய்யப் பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திரு துபிசன் பொன்னம்பலம் அவர்கள்.மாணவப்பருவத்தில் இருந்தே ஆர்வத்துடன் விளையாடி வருகிறார். பத்திரிகைகளில் இவர் படம் தாங்கிய செய்திகள் அநேகமாக வருவதுண்டு. உலகத் தமிழ்ப் பூப்பந்து அமைப்பில் இணைந்து தொடர்ந்து விளையாடி வருகிறார். மேற்படி அமைப்பு. பல வருடங்களாக திறமைகளைத் தெரிவு செய்து போட்டிகளை நடாத்தி வருகிறது.லண்டன்,பிரான்ஸ்,சுவிஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் விளையாடி பலரின் பாராட்டைப் பெற்றவர்.இன்னும் பெற்று வருகிறார்.
யேர்மன் நாட்டிற்காக அவர் விளையாட இருப்பது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். இவர் வாழும் நாட்டிற்கும் இந்தப் பெருமையுண்டு. இதைவிடுத்து பிறப்பால் இலங்கைத் தமிழர் என்ற பெருமையும் சேருகிறது. திரு துபிசன் அவர்களின் இடைவிடாத பயிற்சியின் பலன் இவரை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது. புலம்பெயர் தேசங்களில் வாழும் நம்மவர்கள் பலர்,பல துறைகளிலும் முன்னேறி வருவதை அறிந்து வருகிறோம். மேற்படி போட்டியில் சிறப்புற விளையாடி வெற்றிகொள்ள நாமும் வாழ்த்துவோம்.
1,052 total views, 2 views today