நிழல் படக்காரிகையின் பேசும் படங்கள்!

கீதா.ரவி.நோர்வே

செல்லும்; இடங்களில் நல்ல காட்சிகளைக் கண்டால் படம் எடுப்பது ஒரு கலை. நல்ல இடங்களைத் தேடித் தேடி, காலம் நேரம் பாராது, காத்திருந்து தனக்கு விரும்பிய காட்சி வரும் வரை, பொறுமை காத்து, படம் பிடிப்பது இவளது குணம். இப்படி இவள் பிடிக்கும் படங்கள் பிடித்துப்போகவே வெற்றிமணியில் பதிவிட முன்வந்தேன். இனி கீதாவுடனும்,அவள் படங்களுடனும் பேசுங்கள். ஆசிரியர்.

நோர்வே நாட்டில் இங்கே Goksjø எனும் இடத்தில் சித்திரை மாதத்தில் மீன்பிடி கழுகுகள் வரும்…இது ஆங்கிலத்தில் Osprey என்றும் நோர்வே மொழியில் fiskeørn என்றும் அழைக்கப்படும்… காமரா க்ளப் நண்பர் இரு வாரங்களுக்கு முன்பு போகலாமா என்று கேட்டார்… இருவரும் சென்றோம்… அன்று அவை வரவில்லை… ஏமாற்றத்துடன் திரும்பினோம்…

மீண்டும் இன்னுமொரு நாள் காலை நான் மட்டும் 8.30 க்கு போய் இரவு 20.00 மணிக்கு திரும்பி வந்தேன்.. அன்று வானத்தில் பறக்கும் போது எடுத்தேன்…அது மீன் பிடிப்பதற்கு தயாராகும் போது வானில் ஒரே இடத்தில் இருந்து சிறகடிக்கும்… பின் குத்தென நீரில் மூழ்கி மீன் பிடிக்கும்… அப்படி நீரில் மூழ்கி மீன் பிடிக்கும் போது முன்னே நாணற்புற்கள் தடையாக இருந்ததன. சில படங்கள் நாணற்புற்கள் ஊடாக எடுத்தேன்… அது ஒரு கலைவடிவம் பெற்றது…

மனம் திருப்தியடையவில்லை…மீண்டும் மூன்று நாட்கள் கழித்து காலை 6.00 மணிக்கு போனேன்… நல்ல குளிராக இருந்தது… காலைப்பொழுது அவ்வளவு ரம்மியமாக இருந்தது. கழுகு 11 மணிக்கு பிறகு வந்து எட்டிப் பார்த்துவிட்டு மீன் பிடிக்கவில்லை சென்று விட்டது… ஒவ்வொரு இடத்திலும் நிறைய படப்பிடிப்பாளர்கள் நின்றார்கள்… அவர்களுக்கு அந்த இடங்களுக்கு நடந்து செல்ல முடியும்… நாணற்புற்கள் இல்லாத இடமாக பார்த்து நின்றார்கள்…எனக்கு தூரமாகத் தான் அவை மீன் பிடித்தன… காத்திருப்பு மிக மிக அவசியம்..

சக்கரநாற்காலி போகக்கூடிய இடங்களில் நான் மாற்றி மாற்றி நின்றேன்… கண்களை மூடிக் காட்சியைக் கற்பனை செய்தேன்.. கடவுளிடம் மனசார வேண்டினேன்… கடவுளே இந்த இடத்தில் மீன் பிடிக்க வேண்டும் என்று…ஆச்சரியம் காத்திருப்புக்கு பின் அதே இடத்தில் வந்து மீன் பிடித்தது… ஆனால் அது வெற்றி பெறவில்லை… மீன் தப்பிவிட்டது. என்னவோ தெரியவில்லை படப்பிடிப்பு விடயத்தில் மட்டும் கடவுள் நிறைய தடவை வேண்டுதல் நிறைவேற்றி இருக்கிறார் அவருக்கு நன்றி சொன்னேன்… மீனுடன் பறந்து செல்லும் படங்கள் நான்காவது தரம் போன போது எடுத்தேன்…( Photos: ©️ Geetha Rasalingam) இயற்கையை கையில் பிடித்துப் பார்கக்க ஆசை.

1,002 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *