ஒத்திகையின் வழி சிறப்புறும் நடன நிகழ்வு…..
செல்வி.திவ்யகுமாரி சின்னையா -லாஷ்ய கலாபவனம் நடனப்பள்ளி இயக்குனர்-இலங்கை
“தெய்வாத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய் வருத்தக் கூலி தரும்” என்ற வள்ளுவன் கூற்றுக்கிணங்க, ஊழியின் காரணமாகவோ அல்லது புண்ணியமின்மையாலோ மேன்மையடைய இயலாத ஒருவன் தன் ஆளுமையின் மேன்மையை அடைய எண்ணும் நேரங்களில் எல்லாம் அவனை அறியாமலேயே முன்னேற்றபடிகளுக்கான ஒத்திகை ஆயத்தங்களை தன் மெய் வருத்தி பின்பற்றி நடக்கிறான்.இங்கு அவனின் ஒத்திகைப் படலமானது அம்மனிதனின்த உயர்வு நிலையின் வெற்றியை அடைய மெய்வருத்தி உழைத்த காலப்பகுதியாகும்.
இங்கு ஒத்திகையானது எல்லா துறையினருக்கும் இன்றியமையாதது எனினும் என் அறிவினடிப்படையில் உலகின் சிறந்த ஆளுமையானவர்கள் கலைஞர்களே என்பேன். அப்படியானவர்கள் தங்கள் மேடை நிகழ்வுகளை அரங்கம் ஏற்றும் முன், வேள்ளோட்டாமாக பல ஒத்திகைகளை மேற்கொள்வார்கள். ஒத்திகையானது கலைக்குடும்ப சந்ததியினரின் வரலாற்றில் இன் றியமையாததாகும். ஒத்து ூஇருக்கய் என்பதே ஒத்திகை. அதாவது நாடகம், நடனம், இசைக்கச்சேரி முதலியன நல்ல முறையில் ஒத்திருக்கின்றனவா அல்லது பின்னால் மேடையேற்றப்படப்போகும் நிகழ்வு முன்னதாக நிகழ்த்திப்பார்க்கும் முன்னோட்ட நிகழ்வக்கும்.
ஒத்திகையானது ஒரு மேடை நிகழ்வின் முள்ளந்தாண்டிணைப்போன்றது, ஆக எந்தவொரு மேடை நிகழ்வாயினும் ஒத்திகைகள் இன்றி ஜொலிக்காது. மேலும் ஒரு நடனக்கலைஞர் என்ற ரீதியில் நடன ஒத்திகை ஒன்றினைப்பற்றி எடுத்தியம்ப எண்ணுவேனானால்,ஒரு நடன நிகழ்வைனது வெறுமனே நடன ஒத்திகையினால் மாத்திரம் சிறப்புற்றிராது, “நட்சத்திரங்களுடன் கூடிய நிலவே இரவு வானை அலங்கரிக்கின்றது “அதுபோலவே எந்தவொரு நடக்கலைஞர் தன் நடன ஒத்திகைக்கு மட்டுமல்லாது மேடை,ஒளி,ஒலி மற்றும் நாட்டுவாங்கம், பக்கவாத்தியம், ஒப்பனை சார் அழகியல் ஒத்திகைகளுக்கும் சரிநிகர் முக்கியத்துவம் அளிக்கின்றாரோ அந்நிகழ்வே ஒத்திகையிலும் நிகழ்விலும் சிறக்கும்.
ஒரு நடன நிகழ்வில் கலைஞன் தான் ஆளுமைகளை, தான் கலைவெளிப்படுகளை முழுமையாக தர எண்ணுவான், அதற்கான மேடைப்பின்னணியிலான கலைஞரின் உழைப்பனது பல மடங்குகளாகும். சில சந்தர்ப்பங்களில் நிகழ்ச்சிகளைப் பார்க்கிலும்கூட ஒத்திகைகள் சிறந்து விளங்கிய சந்தர்ப்பங்களும் உண்டு. காரணம் மேடை நிகழ்வில் ஆள் பாதி ஆடை பாதி என்பதற்கினங்க, அனைத்து ஆடை, ஆபரண ஒப்பனைகளுடனும் மேடை அலங்காரங் களுடனும் காட்சி விதாணிப்புகழுடனும், பாட்டு பக்கவாத்தியங்களுடனும் ஒரு நேர்த்தியான நிகழ்வை பார்வையாளர் களுக்கு கலைஞரால் பிரசுவித்துவிட முடியும், எனினும் ஒத்திகையின்போது வெறுமனே பயிற்ச்சி உடையில்,துளிர்த்த வியர்வையில் தெளிந்த உடலின் அசைவுகளும், முத்தெனசிரிக்கும் புன்னகையின் அழகும், ஒப்பனையற்ற இயல்பான முகபாவனைகளும் சில சமயங்களில் வியப்பூட்டும் சிறந்த வெளிப்பாட்டை தந்த சந்தர்ப்பங்களும் உண்டு.
எவ்வாராயினும் நடன ஒத்திகையின்போது கலைஞர்கள் தன்னால், தன் சரீரத்தல் வெளிப்படுத்தமுடியாத அசைவுகளையும்கூட தரஎண்ணுவார்கள்,ஆயினும் அவ்வாறான சந்தர்ப்பபங்களில் மிகவும் விழிப்புணர்வுடனும்,தங்கள் உடல்நலம் கருத்தியும் கட்டாயமாக சித்திக்க வேண்டும் காரணம்,’சுவர் இருந்தருந்தால் மாத்திரமே சித்திரம் வரையலாம்’. மேலும் ஒத்திகைக்காலகட்டத்தில் கவனிக்கத்தக்காத்தோர் சில விடயங்களும் கையாளவேண்டும். அவையாவன. ஒத்திகையின் சரியான இடைவெளியிலும் உடலுட்டத்திற்கன போசக்கான சிற்றுணவுகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
பயிற்சியின்போது இழக்கப்படும் நீர்ச்சத்துக்களை சரிநிகர்பேன ஏராளமான நீராகரங்களை பெறல்
எப்பொழுதும் ஒத்திகைக்காலங்களில் முதலுதவி சாதனைக்காளை அருகில் வைத்துக்கொள்ளல்
சிலகலைஞர்களுக்கு வயதினடிப்படையில், அல்லது கடின பயிற்சியினால் ஏற்படும் முழங்காள் கோளாறுகளை குறைக்க நெகிழ்வான முழங்கால்; பட்டைகளை உபயோகப்படுத்த வேண்டும்.
கட்டாயம் ஒத்திகையில் தேவையான தேவையான அம்சங்களைப்பற்றிய அறிவை நினைவுக்கூறவேண்டி குறிப்பு புத்தகத்தை பயன்படுத்தல்
ஓரு ஆடையின் கடைசி நிமிட பழுதுப்பார்பு என்றாலும்கூட தையல் ஊசி, நூல் போன்ற சாதனங்களை உடன் வைத்திருத்தல் மிகமுக்கியமாக ஒத்திகையின் நடுவில் அல்லது ஒட்கதிகையின் ஈற்றில் சரியான ஓய்வு பெற்றுக்கொள்ளவேண்டும். ஆகையால் ஒரு நடனநிகழ்வு சிறப்புற ஒத்திகை இன்றியமையைத்தாதோ அதேபோல் ஒத்திகையில் கையாளவேண்டிய இந்தப் பண்புகளும் இன்றியமையாதானவே, ஆக ஒரு கலைஞனின் வாழ்வில் ஒத்திகைகள் வெறுமனே ஒத்திகைகளாக அமைந்துவிடாது..
” எடுத்த வினையை அரைகுறையின்றிச் செய்க :கடைமையை விட்டாரை உலகம் விட்டுவிடும் ” என்பதற்கினங்க அரைகுறை பயிச்சி ஒத்திகைகள் ஒருபோதும் மேடைநிகழ்வை சிறப்புறச்செய்யாது.ஆக ஒத்திகையானது நடனநிகழ்விற்கு இன்றியமையா செய்வினையாகும்….
1,090 total views, 3 views today