ரஜினியுடன் இணைந்த நடிக்க நான் தயார்
‘விக்ரம் இப்படம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து,சென்னையில் செய்தியாளர்களிடம் நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது,‘விக்ரம்’ படத்தின் வெற்றியை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நாடு முழுவதும் இப்படம் வெற்றி பெற்றிருக்கிறது. நான் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்பட வெற்றியின்போதும் சந்தோஷமாக இருந்தேன். அந்த படம் உடனடியாக இல்லாமல் 6 மாத இடைவெளிக்கு பிறகு இந்திக்கு சென்றது. அங்கும் கொண்டாடினார்கள். ‘அவ்வை சண்முகி’ படமும் இந்திக்கு சென்று வெற்றி பெற்றது. ‘ஏக் துஜே கேலியே’ படத்துக்கு கிடைத்த வரவேற்புபோல, தற்போது நாடு முழுவதும்‘விக்ரம்’ திரைப்படம் வரவேற்பை பெற்றுள்ளதில் மகிழ்ச்சி.‘‘ ரஜினி யுடன் இணைந்து நடித்து வருடங்கள் ஆகிவிட்டன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நீங்கள் ரஜினியுடன் இணைந்து நடிப்பீர்களா?’’ என்று கேட்கின்றனர். முதலில் இதை அவரிடம் (ரஜினி) கேட்க வேண்டும். அவர் ஒப்புக்கொண்ட பிறகு, இவரிடம் (லோகேஷ்) கேட்க வேண்டும். நாங்கள் 3 பேரும் ஒப்புக்கொண்ட பிறகு உங்களிடம் (மீடியா) சொல்ல வேண்டும். ரஜினியுடன் நடிக்க நான் எப்போதும் தயார்
இள வயது ரஜினியாக சிவகார்த்திகேயன்
விஜயின் பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக ரஜினியின் 169ஆவது படத்தை இயக்கப் போகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் நடிக்க ரஜினியிடம் நெல்சன் சொன்ன கதை அவருக்கு பிடித்து விட்ட போதும், பீஸ்ட் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் அதிருப்தி அடைந்தார் ரஜினி. அதனால் தனது ஆஸ்தான இயக்குநரான கே.எஸ்.ரவிக்குமாரை தனது 169ஆவது படத்திற்கு திரைக்கதை எழுத வைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாக ஆரம்பத் திலிருந்தே செய்திகள் வெளியாகின. ஆனால் ஒருகட்டத்தில் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இப்போது படத்தில் இளம் வயது ரஜினி வேடத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க நெல்சன் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு அரபிக்குத்து பாடலைத்தொடர்ந்து இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதுவதாக கூறப்படுகிறது.
எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்
சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பொருத்தமான ஜோடியாக ஜெயலலிதா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. சினிமாவைத்தாண்டி சொந்த வாழ்ககையிலும், அரசியல் வாழ்க்கையிலும் ஜெயலலிதா மீது தனிப்பட்ட அக்கறையும், கவனமும் செலுத்தினார் எம்.ஜி.ஆர். ஆனால்… சினிமாவில் எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா ஜோடிப் பொருத்தம் கொண்டாடப்பட்ட வேளையில் விமர்சனங்களும் எழாமல் இல்லை. எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா முதன்முதலாக இணைந்து நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் இளமைத்துள்ளலான அவர்களின் காதல் காட்சிகளைப் பார்த்துவிட்டு, எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவிற்குமிடையே இருக்கும் மிகப்பெரிய வயது வித்தியாசத்தைக் குறிப்பிட்டு கடுமையாக சில விமர்சகர்களும், பத்திரிகைகளும் எழுதினர்.
எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா ஜோடிப் பொருத்தத்தை விமர்சித்தவர்களுக்கு ‘முகராசி’யில் கண்ணதாசன் வேட்டு வைத்தார் பாட்டால்…
‘எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்,
இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம்
இனி யாருக்கு இங்கே கிடைக்கும்’
தலைக்கனம் பிடித்த ராஷ்மிகாவாக!
தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் பெயரிடப்படாத விஜ யின் 66ஆவது படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா முதன்முறையாக நடிக்கிறார். சிறு வயதிலிருந்தே விஜய்யின் ரசிகையாக இருக்கும் ராஷ்மிகா நடிக்க வந்தது முதலே விஜயுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் அப்பேட்டியில் விஜய் 66 படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் பற்றிய தகவல் ஒன்றையும் தெரிவித்துள்ளார். படத்தில் சுயநலமிக்க, தலைக்கனம் பிடித்த பெண்ணாக ராஷ்மிகா நடிக்கிறாராம். அக்கதாபாத்திரத்தில் நடிப்பது சவாலான ஒன்றாக இருப்பதாக ராஷ்மிகா கூறியிருக்கிறார். —
817 total views, 2 views today