கவலைகள் இருக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் தொடர்ந்துவிடு!
ஆர்கலி.இலங்கை
பெரும்பாலும் இந்த உலகம் வெற்றியை நோக்கி ஓடுவதை விட வெற்றிக்காக ஓடுவதையே முதன்மையாக கொண்டு இயங்குகிறது. இந்த வகுப்பில் நானும் ஒருத்தியே. ஆமாம் இரண்டுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. வெற்றியை நோக்கி ஓடுபவன் பாதையில் பலவற்றை பார்த்து முகம் கொடுத்து கொண்டாடித் தீர்த்து முட்டி மோதி சந்தோசங்களை கடந்து பயணித்து வெற்றியை தொடுவான். ஆனால் வெற்றிக்காக ஓடுபவன் இவற்றை எல்லாம் கொண்டிராத வெறித்த பாதையில் ஓடிக் கொண்டிருப்பான். அப்பயணத்தில் பலர் இடை நடுவே திரும்பியும் வந்துவிடுவார்கள்.
காதலன் ஃ காதலி என்னை தவிக்கவிட்டு போயிட்டாங்க, இனி எப்படி வாழ்வேன் என்று ஏங்குவதும் பரீட்சையில் நினைத்த பெறுபேறு இல்லை இனி எப்படி வாழ்வேன். ஊருக்கு முன்னாடி நிற்பனோ என்று தயங்குவதும் வேலை இல்லை., படிச்ச படிப்புக்கு வேலை இல்லை, வேலையில் என்னை மரியாதையாக நடத்துறாங்க இல்ல ,இந்த சம்பளம் எப்படி காணும் என்று நினைத்து தலையை உடைத்துக் கொள்வதும் என தோல்விகளுக்குள் சிக்கி சிக்கி நம்மை அதற்குள்ளேயே அமிழ்த்தி விடுகிறோம். எழுந்து கொள்ள இயலாத தூரத்துக்கு மேலும் மேலும் தோல்வியை ஆழ அலைந்து கொண்டிருக்கிறோம்.
முதலில் கவலையை அதுபாட்டில் கிடந்து கதறும் தவளை போல் விட்டுவிடுங்கள்.மழை போல் இருக்க கற்றுக்கொள்ளுங்கள். “அதுசரி, கவலையா இருந்தால் என்னால சாப்பிட கூட முடியுதில்லையே, பிறகு எப்படி” என்று சலித்துக் கொள்ளாதீர்கள். கவலைகளை அடித்து தின்று பசியாற்றும் திறானி கொண்டவை தான் கலை.
எனக்கு நல்லா பாட வரும், நான் nrkah dance ஆடுவன், ஏதோ கொஞ்சமா கவிதை எழுதுவன், நான் கதை சொன்னால் அத கேட்க என் பக்கத்தில ஒரு கூட்டமே இருக்கும், அசத்தலா சமைப்பன் நான், தூங்கும் போது கூட டிரளiநௌள மூளை எனக்கு, நல்லா சாப்பிடுவன், அந்த மாதிரி meme create பண்ணுவன் என்று ஆளாளுக்கு ஆயிரம் கலை தூசி தட்டாமல் நமக்குள்ளே அடங்கி கிடக்கிறது. இதனை கொஞ்சமாக தட்டிவிட்டுப் பாருங்கள். நம் வாழ்க்கையின் பிரகாசம் அபாரமாக இருக்கும்.
நாம் சிறந்த எழுத்தாளர்களாக பார்ப்பது அநேகமாக காதல் தோல்வியில் கவிஞனானவர்களை தான். ஆமாம் காதலில் தோல்வி அடையாதவன் காதலிக்காதவனாகவே இருக்க முடியும். தொழிலதிபர் ரட்டன் டாடா கூட ஒரு காதல் தோல்வியானவர். “போ நீ போ” என்ற பாடல் நம்முள் பெரும்பாலானோருக்கும் பிடித்த பாடல். அதனை அனிருத்தின் காதல் தோல்வியின் போது உருவானது என்று ஒரு interview ல் கூறி இருக்கிறார்.
நம் ஊருக்குள் ஐந்தாம் வகுப்பு கூட pass பண்ணதவன் கடை, டிரளiநௌள என்று பெரிய தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் முதலாளியாக இருப்பார்கள். கல்வி முக்கியமானது தான். ஆனால் எதை நாம் கல்வி, படிப்பு என்று அடையாளப்படுத்துகிறோம். புத்தகத்தில் இருப்பதை அப்படியே உள்வாங்கி பரீட்சையில் கொட்டுவதா?. அது தான் இல்லை.
“என்ப்பா நீ அந்த நஒயஅ ல கயடை ஆம் அப்படியா? இனி என்ன பண்ண போறாய்?” என்று கேள்வி எழுப்புபவர் களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ளுங்கள். இங்கு பாடப்புத்தகத்தில் பதிக்கப்பட்ட வினாக்கள் அடங்கிய பரீட்சையில் தோன்றும்போகலாம் அல்லது நினைத்த பேறினை அடையாமல் போகலாம். கல்விமான் ஆகாமல் போகலாம். ஆனால் உலகில் வாழ்க்கைப் பாடத்தில் ஜெயித்தவன் மனிதாகிறான்.
பரீட்சையில் தோற்கும் குழந்தைகள் தற்கொலை என்னும் இறுதி முடிவுக்கு வருவதற்கான காரணம் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் என்பது இல்லை. இந்த உலகம் பரீட்சையில் தோற்பவனை தோல்வியாளன், எதற்கும் லாயக்கு இல்லாதவன் என்று நம்ப வைத்து விட்டது. அத்துடன் அவமானச் சின்னமாக சித்தரித்தும் விட்டது.
உயர்தர மாணவன் நன்றாக பாடுவான், நன்றாக விளையாடுவான்,புரவையச வாசிப்பான், குறுந்திரைப்படம் இயக்குவான். “ஏய், நீ படிக்கிற வேலைய பாரு இந்த கறுமத்தை எல்லாம் விட்டுட்டு” என்று சொல்லி அவனது கலை ஆற்றலை அடக்கி வைத்து விடுவார்கள்.
எல்லாவற்றுக்கு விட இயக்குனராக நடிகராக துடிக்கும் பையனுக்கு பெண் கொடுக்கவே தயங்குவார்கள். மாப்பிள்ளை ஃ மருமகள் என்ன வேலை? என்று கேட்கும் போது பாடல்களுக்கு வரி எழுதி கொடுப்பார், பாடல் இசையமைக்கிறார், படம் எடுக்கிறார் என்று எதாவது சொன்னதும், “இதெல்லாம் இருக்கட்டும், அவங்க என்ன வேல என்னு சொல்லுங்களேன்” என்று அவர்களுக்கு தெரிந்ததான ஒரு தொழிலின் பெயரை கூற வேண்டும் என பிரியப்படுவார்கள். வீட்டு மரங்களை விட காட்டு மரங்களின் வலிமையும் பெறுமதியும் அதிகம் தான்.எவர் கட்டுப்படுக்குள்ளும் இருந்துவிடாமல் தனது சுயத்துடன் கலையாக வளர்வதே காரணம். அவரவர் திறமைக்கு ஏற்றவாறான களத்தில் பயணிப்பதே சிறந்த வெற்றி.
கலை மனிதனை வளர்க்குமே தவிர வாறிவிடுவதில்லை. வேதனையில் இருக்கும் போது பாடல் கேட்கிறாம், தனிமையில் குளியலறையில் கூட பாடித் தீர்க்கிறோம், எவ்வளவு பெரிய பணிச்சுமையிலும் காமடியான ளஉநநெ பார்க்கும் போது நம்மை மறந்து சிரித்து விடுகிறோம், துக்கத்திலும் ஒரு கட்டத்தில் பசித்துவிடுகிறது , எவ்வளவு பெரிய ஏமாற்றத்திலும் அவ்வளவு ருசியாக சமைத்து விடுகிறோம், தெரிந்தோ தெரியாமலோ சிலரது எழுத்துகளை நேசித்து விடுகிறோம், இழப்பின் பின் ஒவ்வொரு யடடிரஅ ஆக தட்டிப்பார்த்து புகைப்படங்களை ரசித்துவிடுகிறோம், ளவசநளள ஆக இருக்கு படத்;திற்கு போவமா என்று சென்றுவிடுகிறோம். இப்படி நம் வேதனைகளும் தோல்விகளிலும் நம்மை உற்சாகப்படுத்தி வைத்துக் கொள்வதில் இந்த கலைகளுக்கு அவ்வளவு பிரியம். அதனை இந்த உலகம் தெரிந்தோ தெரியாமலோ ஏற்றுக் கொள்கிறது.
உன் கலைகளை வளர்த்துக் கொள். பாடு ஆடு ஓடு எழுது, பேசு, இந்த வானின் எல்லை வரை போ, நன்றாக தேடு. இது தான் முடிவு என்று யாராவது சொன்னால் நம்பாதே. இதை விட இனி வேறு ழிவழைn இல்லை என்று பக்கத்தில் இருப்பவன் உன்னை பயமுறுத்தினால் அப்படியே என்று கேட்டு நக்கலாக சிரித்துவிடு. எல்லாம் முடிஞ்சு போச்சு, நீ காலி என்று சொன்னால் என்ன முடிஞ்சு போச்சு என்று கேள். இனி ஜெயிக்க வாய்ப்பே இல்லை நீ தோத்து போயிட்டாய் என்று சொன்னால் எங்கே இதோட முடிவு என இருக்கும் எல்லையை காமி என்று கேள். எதிர்மறைகளை உன்னுள் ஊடுருவச் செய்யும் எந்த கேள்வியாக இருந்தாலும் அவர்களிடம் மீண்டும் திருப்பி அனுப்பு. உன்னை சாந்தப்படுத்தும் ஆசுவாசப்படுத்தும் நிரந்தர சந்தோசப்படுத்தும் அனைத்தும் கலை தான். உனக்குள் உறங்கிக் கிடப்பதை உனக்காக என்றும் விழித்து வைத்துக் கொள்.
1,127 total views, 3 views today