I agree!
பிரியா.இராமநாதன். இலங்கை
இலவசமாக ஒரு அப்ளிகேஷன்! இதனை எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டு மானாலும் பயன்படுத்தலாம். யாரும் எந்த கேள்வியும் கேற்கமாட்டார்கள். படம் பார்ப்பதுபோல், விளையாடுவதுபோல் பொழுதுபோக்கிற்காக இருக்கும் பலவற்றுள், இதுவும் ஓர் தேர்வு என நாம் நினைத்துக் கொண்டிருக்கலாம். அந்த நினைப்பில் தவறில்லைதான். ஆனால் இந்த அப்ளிகேஷனை எதற்காக நமக்கு இலவசமாக கொடுக்கவேண்டும்? இதனை பொழுதுபோக்கிற்காக நாம் பயன்படுத்துவதால் யாருக்கு என்ன லாபம்? நம்முடைய வீடியோக்கள் மூலம் யாரெல்லாம் வருமானம் பார்க்கிறார்கள்? என்ற பல கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்… நாளொன்றில் பதினைந்தாயிரம் கோடிக்குமேல் பயனாளர்கள் “டிஃடோக்” அப்ளிகேஷஷனை பயன்படுத்துத்துகிறார்கள் என கூறப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் பலகோடிரூபாய்களை வருமானமாக ஈட்டுகின்றது. ஆனால், நாம் இலவசமாகத்தானே இந்த tiktokஐ பயன்படுத்துகின்றோம் ? இது எப்படி சாத்தியம் ?
தற்போதுள்ள “அமைப்பு” எப்படி இருக்கிறதென்றால் யாராவது அவர்களாகவே வந்து வலையில் வீழ்ந்தால்” அவர்களாகத்தானே வந்து வீழ்ந்தார்கள் இதை வைத்து நான் பணம் பண்ணகூடாதா”? என்ற எண்ணம் கொண்ட வர்களை அதிகமாக கொண்ட சமூகமாகவே இன்றைய சமூகம் மாறிக்கொண்டிருக்கிறதென்றால் அது மிகையில்லை. என்னை நம்பி இவ்வளவு தரவுகளை (data) கொடுத்திருக்கிறார்கள் இதை நான் பத்திரமாக வைத்திருக்கவேண்டும் என யாரும் நினைக்கப்போவதில்லை. இவற்றை நிச்சயம் அவர்கள் விலைக்கு கொடுக்கத்தான் போகிறார்கள். இது விலைக்குப்போகிற விஷயம், நம்முடைய datait இன்னொருவர் பயன்படுத்திக்கொள்கின்ற” datamining” என்றவோர் industryல இருப்பதே இன்றுவரை நம்மில் பலருக்கு தெரியாமலே இருந்துவருகின்றது. நம்முடைய personalityஐ அவர்கள் நன்கு உள்வாங்கிக்கொண்டு நமக்கென்று தனியாக ஒரு விளம்பரத்தினை கொடுக்கின்றார்கள் ( உதாரணமாக நமக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் அல்லது நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களிடம் நம் தகவல்கள் விற்கப்படும்). நம்முடைய likes ஒவ்வொன்றையும் அவதானித்து ஒரு தேர்தலையே இவர்களால் மாற்றமுடியும் என்கிற தகவல் இன்றைய தலைமுறையினரில் எத்தனைபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது?
“Data” என்பது மிகப்பெரிய பொக்கிஷம்,அதுவோர் மூலப்பொருள் என்பது இனிமேல்தான் பலருக்கும் புரியப்போகிறது .”என்னுடைய னயவயவை வைத்துக்கொண்டு நீ என்ன செய்கிறாய்?” என கேட்கப்போகும் காலம் வெகு தொலைவிலில்லை. ஒருவருக்கு அதிகமான likes,comments வருகிறதென்றால் அதுவொரு data. அதை trace செய்து வெளிநாடுகளுக்கும், தனியார் மற்றும் விளம்பர நிறுவனங்களுக்கு விற்று பணம் சம்பாதிக்கிறார்கள். டேட் டாக்களை விலைக்கு வாங்குபவர்கள்,எந்தமாதிரியான ஆளை எப்படி அணுகவேண்டும், எந்தமாதிரியான ஆளை எப்படி அணுகவேண்டும் இந்தமாதிரி விபரங்களும்; நீங்கள் கொடுத்ததே! இந்த தலைமுறைக்கு என்ன கொடுக்கவேண்டும், என்ன கொடுக்கக்கூடாது எனவும் தீர்மானிக்கின்றார்கள். இவர்கள் செய்வதென்ன? மக்களுக்கு மிகவும் பிடிக்கக்கூடிய, ஏதோவொருவகையில் அன்றாடம் அவசியப்படக்கூடிய அப்ளிகேஷன்களை உருவாக்கி அதனை இலவசமாகவும் கொடுத்துவிடுகின்றனர். நம்முடைய இலகுவிற்க்காக நாமும் அதை பயன்படுத்திக் கொள்கின்றோம்.
இதனால் அந்த “app” கேற்கும் நம்மைப்பற்றிய தகவல்கள் பலவற்றையும் skip பண்ணாமல் வழங்கிவிடுகின்றோம். இப்படி எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டு இறுதியில் ” I agree” என்ற button ஐயும் click செய்துவிடுகின்றோம். அந்த ஐ யபசநந என்ற ஒன்றிற்கு முன் என்னவெல்லாம் எழுதியிருக்கின்றது என்பதை யாரும் படித்துப்பார்ப்பதில்லை. பெரும்பாலும் அது ஆங்கிலத்தில் இருக்கும், பக்கம்பக்கமாக இருக்கும் என்பதற்காகவே யாரும் படிப்பதில்லை. ஆனால் அங்கேதான் அவர்கள் மிகவும் தெளிவாக சொல்லியிருப்பார்கள் , “இந்த தகவல்களை தேவைப்பட்டால் நாங்கள் யாருடனும் Share பண்ணுவோம். இது எங்களுடைய”copyright”இல் உள்ளடங்கும்,இதில் உங்களுக்கு சம்பந்தமில்லை ” என சொல்லிவிடுகின்றனர்.
ட்ரில்லியன் மக்களுடைய தகவல்கள் எங்கே போகின்றது , என்ன ஆகின்றது என தனிப்பட்ட ஒருவரால் நிர்ணயிக்க முடியாது அல்லவா ? ஆனால் அந்த வேலையினை னயவயஅiniபெ என்ற iனெரளவசல செய்துமுடித்துவிடும் . அப்படியானால் இந்த னயவய வையெல்லாம் சேகரிப்பது யார் ? வேறு யார், அமெரிக்காவும், சீனாவும் தான்!ஆக, இனிமேல் நடக்கபோகின்ற யுத்தங்கள் அணு ஆயுதங்களை வைத்து அல்ல,Datait வைத்துதான் யுத்தங்கள் நிகழப்போகின்றன.அந்த காலகட்டத்துக்குள் காலடி எடுத்துவைத்துவிட்டோம்.ஆனால் நாம் அதற்குள் பயணித்துக் கொண்டிருப்பதனை புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் நம் அறியாமை.
மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள், பொதுவான விதிகள்தான் அனைவர்க்கும் பொருந்தும் என சொல்லப்பட்டாலும் “personality disorder” (ஆளுமைக் கோளாறுகள் ) என சிலர் உண்டு. எல்லோரும் நம்மைக் கவனிக்கவேண்டும், பிரபலம் என்ற வெளிச்சம் நம்மீது விழுந்து கொண்டேயிருக்கவேண்டும் என இவர்கள் நினைப்பர். .
மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்கச் செய்வதென்பது இவர்களுக்கு மிகப்பெரிய “போதை” போன்றது. இவ்வாறான personality disorder இருப்பவர்களை மருத்துவத்துறையில் hளைவசயைniஉ personality disorder இ histrianic personality disorder , narcissistic personality disorder அல்லது borderline personality disorder எனக்கூறுவர்.இவ்வாறானவர்களின் பொதுத்தன்மை என்னவென்றால் தம்மை ஓர் மிகப்பெரிய பிரபலமாக எண்ணிக்கொண்டு, தம்மை எல்லோரும் முக்கியமானவராக நினைக்கவேண்டும், தம்மீதான வெளிச்சவட்டம் எப்போதுமே தொடரவேண்டும் என நினைக்கும் இவர்கள், அதற்காக எந்தவோர் எல்லைக்கும் செல்லத்துணிவர் (attention seeking). அதிலொன்றுதான் வமைவழமஇல் அதிகூடிய கவர்ச்சி காட்டுதல், ஒருவரையொருவர் மிகச் சரளமாக கெட்ட வார்த்தைகளால் சாடிக்கொள்வது (இதில் பெண்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது) குழந்தைத்தனமாக பேசுவது, சாதிப்பெருமைபடிப்பது போன்ற அறிகுறிகள்.
இவ்வாறான மனிதர்கள் எல்லா காலங்களிலுமே தம்மை மிகையாக காட்டிக்கொள்ள முயற்சி செய்வார்கள். இந்தமாதிரியான மனோநிலை கொண்டோரிடம் tiktok போன்றதோர் application கிடைத்துவிட்டால் அவர்கள் அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். திரும்பத் திரும்ப video upload செய்வது, வேறுவேறு கோணங்களில் தம்மைத்தாமே புகைப்படம் எடுத்து பதிவுசெய்துவிட்டு likesகாக காத்துக்கொண்டிருப்பது என personality disorder இருப்பவர்கள் tiktokஐ மிகையாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இந்த பிரச்சினை காலப்போக்கில் என்னவாகுமென்றால், சாதாரணமான மனநிலை கொண்டவொருவரைக்கூட,” இவர்களுக்கு இத்தனை likes following கிடைக்கிறது நமக்கு கிடைக்கவில்லையே,நாமும் அவர்களைபோலவே எல்லைமீறி ஏதேனும் செய்தால் என்ன?என்ற போட்டி மனோ நிலையினை ஏற்படுத்திவிடக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கிவிடுகின்றது. இது ஒருவகையான நோய். யதார்த்தமோ ஆரோக்யமானதோ அல்ல.
சமூக வலைத்தளங்கள் நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டன. இனி அதை நம்மிலிருந்து யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் பிரித்தெடுக்கவியலாது. ஆகவே எந்தவொரு Application ஐயும் நாம் பயன்படுத்தலாம் ஆனால் அடிமையாகிவிடக்கூடாது.இன்றைய டிஜிட்டல் உலகில் இதையெல்லாம் நான் தொடவே மாட்டேன் என சொல்லிக் கொண்டிருப்போமாயின் நாம் update இல்லாதவர்களாகிவிடுவோம்.எனவே இவற்றை பாதுகாப்பாக பயன்படுத்த அறிந் திருக்கவேண்டும். அடுத்த தலைமுறை என்பது இணையத்தோடு இணைந்த தலைமுறையாகவே இருக்கப்போகிறது.
701 total views, 3 views today