இல்லை என்று சொல்ல ஏன் தலையை ஆட்டுகின்றோம்?

ஓம்! இல்லை! இதற்கு தலையாட்டும் நம் தன்மையை வைத்தே கே.பாலச்சந்தர் நினைத்தாலே இனிக்கும் படத்தை இறுதி வரை திறிலாக ஓட்டியிருப்பார் பார்த்தவர்களுக்குப் புரியும்.

இல்லை! வேண்டாம்! முடியாது! இப்படி மறுப்பைத் தெரிவிக்க ஒவ்வொரு மொழியிலும் பல விதமான வார்த்தைகள் உள்ளன, ஆனால் உலகில் வாழும் அநேகமான மக்கள் மறுப்பை இலகுவாக தமது தலையை ஆட்டித் தெரிவிப்பார்கள். அது ஏன்? இதற்குரிய காரணத்தை ஆராய்ந்தவர்களில் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர் சார்ல்ஸ் டார்வினும் ஒருவர் ஆகும். இவர் யாரென்பதை நீங்கள் கண்டிப்பாக அறிந்திருப்பீர்கள். உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை அதாவது „The theory of evolution“ என்று அழைக்கப்படும் கொள்கையை முன்வைத்தவர் ஆவர்.

டார்வினின் கருத்துப்படி உலகில் வாழும் அநேகமான மக்கள் மறுப்பைத் தெரிவிக்கத் தலையை ஆட்டுவதற்கான அடிப்படையைக் குழந்தைப் பருவத்தில் காணலாமாம். இதைப் பற்றி 1872 வெளியான „The Expression of the Emotions in Man and Animals“ எனும் புத்தகத்தில் விளக்கியுள்ளார். அது என்னவென்றால், சிறு குழந்தைகள் முதல் முறையாக மறுப்பைத் தெரிவிப்பது உணவு உண்ணும் போது தான். தாம் குடிக்கும் தாய்ப்பால் அல்லது ஊட்டி விடும் உணவு தமக்குப் பிடிக்காவிட்டால் என்ன செய்வார்கள்? நம்மைப் போல் வாயைத் திறந்து பேசவா முடியும்? அல்லது கைகளால் ஏதும் சைகையைக் காட்டவா முடியும்? இல்லை, அவர்களால் முடிந்த ஒரே ஒரு செயல் தமது தலையை ஒரு பக்கத்தை நோக்கி பின்னே எடுப்பது தான். இந்த அடிப்படையில் தான் மனிதர்கள் பின்னர் தமது தலையை ஆட்டி மறுப்பைத் தெரிவிக்கின்றனர் என்று டார்வின் கூறினார். எனவே தலையை ஆட்டுவது சிறு குழந்தைகள் கற்கும் முதல் சைகைகளில் ஒன்றாகும்.

இதில் உள்ள ஆச்சரியம் என்னவென்றால் பிறப்பிலிருந்தே செவிட்டுத் தன்மை கொண்ட மற்றும் கண்பார்வை இழந்த குழந்தைகள் கூட மறுப்பைத் தெரிவிக்க தமது தலையை ஆட்டுகின்றன என்பது தான். இச்சைகையை ஒரு தடவை கூட பார்க்காத இவர்கள் எவ்வாறு இதை அறிந்தன? எனவே இது கூட டார்வினின் கூற்றுச் சரியாக இருக்கும் என்பதற்கான ஒரு ஆதாரம் ஆகின்றது.

சரி மனிதர்களை விடுவோம், விலங்குகளிலும் இந்த விஷயத்தை நாம் காணலாமா? கண்டிப்பாக, அதுவும் குறிப்பாக பொனொபோ எனப்படும் மனிதக் குரங்குகள் கூட தமது தலையை ஆட்டித் தான் மறுப்பைத் தெரிவிக்கின்றன. ஆனால் வேறு குரங்கு இனங்கள் இவ்வாறு செய்வதில்லை.அதற்குக் காரணம் என்னவென்றால், இந்த விலங்குகளுக்கு ஒரு விஷயம் வேண்டாம் என்றால் அவை எழுந்து அவ்விடத்தை விட்டுச் சென்றுவிடுவார்கள். சக இனக் குரங்குகளுக்கு அதைச் சைகை மூலமாகத் தெரிவிக்க வேண்டும் என்கின்ற அவசியம் கிடையாது. எனவே தலையை ஆட்டுவது என்பது மறுப்பைத் தெரிவிப்பதற்கான ஒரு மேம்பட்ட வடிவமாகும்.

சரி, கடைசியில் ஒரு சுவாரசியமான விஷயத்தையும் கூறிவிடுகின்றேன். ஆரம்பத்தில் குறித்தது போல் உலகின் அநேகமான மக்கள் இடதிலிருந்து வலது பக்கத்திற்குத் தலையை ஆட்டித் தான் மறுப்பைத் தெரிவிக்கின்றனர். ஒரு சில நாட்டவர்கள் மட்டும் தான் இதற்கு மாறாகச் செயலாற்றுகின்றனர். உதாரணத்திற்கு பல்காரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று சொல்ல மேலிருந்து கீழேயும், ஆம் என்று சொல்ல இடதிலிருந்து வலது பக்கத்திற்குத் தலையை ஆட்டுவார்கள். இது ஆச்சரியமாக இல்லையா?

Charles Darwin believes that this has to do with our primitive instincts and our nursing habits. When babies seek food they tend to lean their head forward in search of their mother’s breast. However, when they are not hungry, they shake their head from shoulder to shoulder trying to avoid the breast. This instinct continues into our life and that’s why we nod for yes and shake our heads for no.

1,015 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *