விஜய்க்கு வில்லனான அர்ஜுன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.பொதுவாக லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே அவற்றில் அதிகப்படியான வில்லன்கள் இடம் பெறுவது வழக்கம்.

இந்தப்படத்தில் தென்னிந்திய மற்றும் பொலிவுட்டிலிருந்து பிரபலங்களை அழைத்து வந்து நடிக்க வைக்க இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ். பொலிவுட்டிலிருந்து சஞ்சய் தத், மலையாளத்திலிருந்து பிரித்விராஜ் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
அந்த வகையில் மொத்தம் இந்த படத்தில் ஆறு வில்லன்கள் என்றும் அதில் ஒருவராக நடிகர் அர்ஜுன் நடிக்க இருக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

00000

வாழ்க்கையே சோகமான ஐஸ்வர்யா ராஜேஷ்

தற்போது 6 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்துள்ள பேட்டியில், ”என் பெயரில் இருக்கும் ஐஸ்வர்யம் வாழ்க்கையில் இல்லை. சிறு வயதிலிருந்தே நிறைய கஷ்டங்களை அனுபவித்தேன். எனக்கு எட்டு வயது இருக்கும்போது அப்பாவின் அன்பை இழந்தேன். ஒரு சாலை விபத்தில் இரண்டு அண்ணன்களும் மரணம் அடைந்தனர்.
வாழ்க்கை எனக்கு புதிது புதிதாக பாடங்கள் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

சினிமாவிற்கு வந்த புதிதிலும் அதற்கு முன்பும் நிறைய அடி மீது அடி வாங்கினேன். அதனால்தானோ என்னவோ இப்போது என்னை தோல்வி அவ்வளவாக பாதிப்பதில்லை. பெரிய கதாநாயகி என்ற பெயர் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. நல்ல நடிகை என்ற பெயர் கிடைத்தால் போதும். நான் நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கும் படியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்றார்.

000
நாயகிகளுக்கு மதிப்பே கிடையாது
சிம்ரன் ஜோதிகாவை அடுத்து ரசிகர்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர் தமன்னா.தமிழ் திரைப்பட உலகில் வெள்ளை அழகி என இவரை ரசிகர்கள் அழைத்து வருவதுண்டு. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னா சினிமாவில் நாயகிகளுக்கு மதிப்பே கிடையாது என ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே இல்லை என்றும் பெண்கள் பேச்சை ஒரு பொருட்டாகக் கூட சினிமாக்காரர்கள் மதிக்க மாட்டார்கள் என்றும் கதாநாயகருக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பாதி கூட கதாநாயகி களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த போக்கு ஆரம்பத்தில் இருந்தே தொடர்கிறது என்று கூறிய தமன்னா,கதாநாயகிகள் புகைப்படம் போஸ்டர்களில் வருவதே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

000
சிவாஜி -2 தயார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும், புராதண தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். நிறுவனமும் இணைந்து உருவாக்கிய திரைப்படம் சிவாஜி.

கடந்த 2007 ஆம் ஆண்டு ரிலீஸான சிவாஜி திரைப்படம் அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. அதன் பின்னர் ஷங்கரும் ரஜினிகாந்தும் இணைந்து எந்திரன் மற்றும் 2.0 ஆகிய பிரம்மாண்ட படங்களை உருவாக்கினார்கள்.

இந்நிலையில் சிவாஜி வெளியாகி 15 ஆண்டுகளை சில வாரங்களுக்கு முன்னர் நிறைவு செய்துள்ளது. அதைக்கொண்டாடும் விதமாக ஏ.வி.எம். நிறுவனம் சமூகவலைதளப் பக்கத்தில் பல சுவாரஸ்யமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்தது.

அதையடுத்து இயக்குநர் ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர, அது வைரலானது.இந்நிலையில் இப்போது சிவாஜி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாராக இருப்பதாக ஏவிஎம் நிறுவனத்தின் குகன் தெரிவித்துள்ளார். மேலும் கதை உள்ளிட்ட விஷயங்கள் தயாராக இருந்தால் எப்போது வேண்டுமானாலும் அந்த படத்தை தயாரிக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

1,126 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *